ஸ்கூட்டர் வாங்க ரூ.25,000 மானியம் வழங்குவதாக அறிவித்துள்ள கட்சி!
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. மற்ற மாநில தேர்தல்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டு தேர்தல் களம் இந்த ஆண்டு மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. மக்களின் வாக்குகளைப் பெற அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவோம் என அறிவித்திருக்கின்றன. குறிப்பாக பெண் வாக்காளர்களை மையப்படுத்திய பல்வேறு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அறிவித்தன.
அதில் முக்கியமான ஒரு திட்டமாக பெண்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக மானியம் வழங்கும் திட்டம் பார்க்கப்படுகிறது. தற்போத களத்தில் இருக்கும் நான்கு முனைகளில், அதிமுக மட்டுமே இந்தத் வாக்குறுதியை அளித்திருக்கிறது. இது புதிய திட்டம் ஒன்றும், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த திட்டம் தான். பின்னர் 2021ல் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. பெண்களுக்கான இருசக்கர வாகன மானியத் திட்டம் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25,000 வரை மானியம் வழங்குவோம் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது. சுமார் 5 லட்சம் பெண்கள் பயணடையும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டிலேயே இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. 2020ம் ஆண்டு வரை இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருந்தது.
அந்த இரண்டாண்டு காலத்தில் மட்டும் சுமார் 2.07 இருசக்கர வாகனங்கள் (ஸ்கூட்டர்கள்) பெண்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து 2021ம் ஆண்டு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பெண்களுக்கான பிற நலத்திட்ட உதவிகளில் கவனம் செலுத்தும் பொருட்டு திமுக அரசு இருசக்கர வாகன மானியத் திட்டத்தினை நிறுத்தியது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இந்தத் திட்டத்தினை செயல்படுத்துவோம் என அதிமுக அறிவித்துள்ளது.

இந்த இருசக்கர வாகன மானியத் திட்டத்தின் கீழ் குறைவான அளவிலான பெண்களே பயன்பெறுகிறார்கள் எனவும், அதிக பெண்கள் பயனடைய வேண்டும் என்னும் பொருட்டு இலவச பேருந்து பயணம் என்ற மற்றொரு பெண்கள் நலத்திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்தத் திட்டமே தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இருசக்கர வாகன மானியத் திட்டம் செயல்பாட்டில் இருந்த போது, மானியத்திற்கு விண்ணப்பிக்க பல்வேறு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. 18 வயது முதல் 40 வயதிற்குள்ளான பெண்களே விண்ணப்பிக்க வேண்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், முறையான இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்குள்ளான வருமானத்தைக் கொண்டவராத இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வரம்புகள் இருந்தன.
ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய முடியும் எனவும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும், போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத இடத்தில் இருக்கும் ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அப்போது முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள், 35 வயதிற்கு மேல் திருமணம் ஆகாத பெண்கள் ஆகியோருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் பட்சத்தில் இதே வரம்புகள் தொடர்ந்து நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுவது மிகச்சிறப்பான ஒரு திட்டம் தான். ஆனால் மேலே கூறியிருப்பது போல குறைவான பெண்களே அதனால் பயன் பெற முடியும் என்பதும் உண்மை. இலவச பேருந்து பயணம் தினசரி, நிறைய பெண்களின் கவலை போக்கும் திட்டமாகவும் இருக்கிறது. எந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தாலும் இருந்தாலும் வெற்றி பெறப் போவது பெண்களே.


Click it and Unblock the Notifications