விமானத்தில் இந்தவொரு கருவி மட்டும் இருந்திருந்தா தப்பித்து இருக்கலாம்! மாடர்ன் இந்தியாவில் இதுக்குகூடவா பஞ்சம்
மஹாராஷ்டிரா (Maharashtra) மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் (Ajith Pawar), நேற்று (ஜனவரி 28) பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமான விபத்தில் உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) உள்பட இந்தியாவின் பல முக்கியமான தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின் அஜித் பவாரின் உடல் பாராமதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்து குறித்து இதுதொடர்பான புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) இறுதி அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளிவராத நிலையில், முதற்கட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் நிபுணர் பகுப்பாய்வுகள் பல முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டுகின்றன. இந்த விபத்துக்கு, மோசமான வானிலை மற்றும் பார்வைத் திறனே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையின்படி, விபத்து நடந்த சமயத்தில் விமானியால் தரையை வெறும் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே பார்க்க முடிந்துள்ளது. ஓடுபாதையை சரியாகக் காண முடியாததால் விமானிகள் முதல் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டனர். இரண்டாவது முயற்சியின் போதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, குறைந்த பார்வைத் திறன் காரணமாக தூரத்தையோ அல்லது வேகத்தையோ விமானி தவறாக மதிப்பிட்டிருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் போது, விடி-எஸ்.எஸ்.கே லியர்ஜெட் 45 (VT-SSK Learjet 45) ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பழைய தனி விமானமான இது, சம்பவத்தின்போது மணிக்கு 183 நாட்ஸ் வேகத்தில் பறந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வழக்கமான 106-135 நாட்ஸ் வேகத்தை விட மிக அதிகம். இந்த அதிக வேகம் விமானத்தின் நிலைத்தன்மையை பாதித்து இருக்கலாம். விமானத்தில் மேம்பட்ட வழிசெலுத்தல் கருவிகள் (GAGAN) இல்லாததும் விபத்திற்கு மற்றொரு காரணமாகும். 2021ஆம் ஆண்டில் இதைக் விமானங்களில் கட்டாயமாக்குவதற்கு 28 நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதால், இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் GAGAN அமைப்பு இல்லை.
தரை அடிப்படையிலான இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் (ILS) இல்லாத பாராமதி விமான நிலையத்தில், GAGAN துல்லியமான வழிகாட்டுதலை வழங்கியிருக்கும். ஆனால், மறைந்த அஜித் பவார் சென்ற தனி விமானத்தின் விமானி இந்த அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் எதுவும் இல்லாமல் லேண்டிங் செய்ய மிகவும் சிரமப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.

காலை 8:43 மணியளவில் விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்ட பிறகு, விபத்திற்குள்ளான விமானத்தில் இருந்த விமானிகள் அதனை உறுதிப்படுத்த தவறிவிட்டனர். கட்டுப்பாட்டை இழந்த விமானம் தலைகீழாக கவிழ்ந்து, ஓடுபாதையின் தொடக்கப் பகுதியிலேயே தீப்பிடித்து எரிந்தது. விபத்தான பின் விமானம் 2,3 முறை வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், வி.எஸ்.ஆர் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (VSR Ventures Private Limited) நிறுவனத்திற்கு சொந்தமான பாம்பார்டியர் லியர்ஜெட் 45 வணிக ஜெட் விமானத்தில் இருந்த மஹாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், அவரது இரண்டு உதவியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் என உள்ளே இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். விபத்து பாராமதி விமான நிலையத்தின் ஓடுபாதையின் இடதுபுறத்தில் நிகழ்ந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான விபத்துகளில் இதற்கு முன்னர் பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இன்றைய மாடர்ன் காலக்கட்டத்திலும் தனி விமானம் போன்ற அளவில் சிறியதான விமானத்தை இயக்குவதில் கூட விமானிகளுக்கு சவால்கள் ஏற்படுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. முடிந்தவரையில் அவ்வப்போது புது, புது விமானங்களை பயன்படுத்த ஆரம்பிப்பது நல்லது.


Click it and Unblock the Notifications









