பரபரப்பான சாலையில் காஸ்ட்லீ காருக்குள் இருந்தது அவரா!! ஒவ்வொருத்தரும் நின்னு பார்த்துட்டு போனாங்க!

மீது கொண்ட ஈர்ப்பிற்கு புதிய சான்றாக, மெர்சிடிஸ் மேபேக் எஸ்.எல்680 மோனோகிராம் சீரிஸ் (Mercedes-Maybach SL680 Monogram Series) ரக கார்கள் இரண்டை வாங்கியுள்ளது. வாங்கும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அலங்காரம் செய்யக்கூடிய இந்த அரிய வகை சொகுசு காரின் மூன்று யூனிட்கள் மட்டுமே இந்தியாவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதில் இரண்டை அம்பானி குடும்பம் சொந்தமாக்கியுள்ளது.

பிரபலமான கார்களின் சிறப்பு பதிப்புகளை வைத்திருப்பதில் தனி ஆர்வம் கொண்ட அம்பானி குடும்பத்தின் சொகுசு கார்கள் கலெக்‌ஷன்ஸ் (Luxury Cars Collections) ஆனது 150க்கும் மேற்பட்ட அதிநவீன கார்களைக் கொண்டுள்ளது. உலகின் அரிய வகை கார்களை தேர்ந்தெடுத்து கேரேஜில் சேர்ப்பது இவர்களது வாடிக்கையான ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

ambani family recently bought new mercedes-maybach sl680

அவர்களது பாதுகாப்பு வாகன அணிவகுப்பிலும் எண்ணற்ற சொகுசு எஸ்யூவி கார்கள் இடம்பெற்றுள்ளன. அம்பானி சமீபத்தில் புதியதாக வாங்கியுள்ள மெர்சிடிஸ்-மேபேக் எஸ்.எல்680 மோனோகிராம் சீரிஸ் கார் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள காணொளியில், வாகனங்கள் அதிகம் செல்லும் பரபரப்பான சாலையில் வெள்ளை நிறத்திலான இந்த சொகுசு செடான் கார் செல்வதைக் காணலாம்.

மேபேக் எஸ்.எல்680 காரின் இந்த சிறப்புப் பதிப்பு மாடல், மேபேக் கார்களுக்கே உண்டான அம்சங்களுடன், குரோம் கிரில், பெயிண்ட் செய்யப்பட்ட ஹூட் ஆப்ஷன்கள் மற்றும் 21 அங்குல 36-ஸ்போக் அலாய் சக்கரங்கள் போன்றவற்றை கொண்டுள்ளது. காரின் உட்புறத்தில், நப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் திரை மற்றும் அட்ஜெஸ் செய்யக்கூடிய 11.9 அங்குல இன்போடெயின்மென்ட் திரை ஆகியவை ப்ரீமியம் அம்சங்களாக உள்ளன.

ambani family recently bought new mercedes-maybach sl680

இந்த காரின் 'டிராப்-டாப்' அமைப்பு, இரண்டு கதவுகள் கொண்ட ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் காருக்கு உண்டான தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. மற்றொரு மேபேக் எஸ்.எல்680 மோனோகிராம் சீரிஸ் கார் சிவப்பு நிறத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெர்சிடிஸ் மேபேக் எஸ்.எல்680 அழகிய தோற்றத்தை மட்டுமல்லாமல், சக்தி வாய்ந்த என்ஜினையும் கொண்டுள்ளது.

இதில் 4.0 லிட்டர் வி8 பை-டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 577 குதிரைத்திறனையும், 800 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் நான்கு சக்கரங்களுக்கும் வழங்கி, அற்புதமான டிரைவிங் அனுபவத்தை அளிக்கிறது.

இந்த கார் வெறும் 4.1 வினாடிகளில் 0-100 கிமீ/மணி வேகத்தை எட்டுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 260 கிமீ ஆகும். இந்தியாவில் இந்த காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.4.20 கோடி ஆகும். இது, அதிநவீன தொழில்நுட்பங்களையும், ஈர்க்கக்கூடிய செயல்திறனையும் ஒருங்கிணைத்த மெர்சிடிஸ்-மேபேக் காராக விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டின் மிக அரிய கார் கலெக்‌ஷன்ஸை வைத்திருக்கும் ஒரு குடும்பம், இந்தியாவுக்காக வெறும் மூன்று யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு கார் மாடலின் இரண்டு யூனிட்களை வாங்குவது, வெறும் கார் வாங்குதல் மட்டுமல்ல இது அவர்களது லக்சரியான வாழ்க்கையின் ஒரு அடையாளச் சின்னமாகும். இது, அவர்களின் சொகுசு கார்கள் சேகரிப்பில் உள்ள 150க்கும் மேற்பட்ட கார்களுக்கு மேலும் பலத்தை சேர்க்கிறது.

மேபேக் எஸ்.எல்680 அதன் அல்ட்ரா-லக்சரி மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் வளர்ந்து வரும் சூப்பர்-லக்சரி கார்கள் சந்தையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இத்தகைய மேபக் காரின் சிறப்பு பதிப்பை இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்வதே அம்பானி குடும்பம் போன்ற செல்வந்தர்களின் குடும்பங்களை டார்க்கெட் செய்தே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 7, 2026, 15:54 [IST]
English summary
Ambani family recently owned new mercedes maybach sl680 spotted on the road
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+