இந்திய இளைஞர்கள் பலருக்கு இது எல்லாம் கனவு... மஹிந்திரா கார் உடன் ஓவர் நைட்டில் மாறிய வாழ்க்கை!

சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெற மற்றவர்களுக்கு கார் & பைக்குகளை பரிசளிப்பது வாடிக்கையாக மாறி வருகிறது. அதாவது, பல இலட்ச ரூபாய் செலவாகினாலும் பரவாயில்லை... அதன் மூலமாக இணையத்தில் பிரபலமாக வேண்டும் என விரும்புபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், சில சமயங்களில் உண்மையான திறமைகளை பாராட்டியும் வாகனங்கள் பரிசளிக்கப்படுகின்றன.

அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த உடற்பயிற்சி ஆர்வலரும், இணையப் பிரபலமுமான அஷ்டன் ஹால் என்பவர் இந்தியாவிற்கு வந்து அவரது சிஷ்யருக்கு பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பரிசளித்து சிறப்பித்துள்ளார். தார் ராக்ஸ் வாகனத்தின் ஆரம்ப விலையே தற்சமயம் ரூ.12.39 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

mahindra thar roxx

ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இவ்வளவு விலையுயர்ந்த வாகனத்தை அஷ்டன் ஹால் அசால்ட்டாக அவரை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்ட இந்தியாவை சேர்ந்த பாடி பில்டர் 'யோகேந்திர குஷ்வா'-க்கு பரிசாக வழங்கி பிரம்மிக்க வைத்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம், மோரெனா மாவட்டத்தை சேர்ந்தவரான யோகேந்திர குஷ்வா, அமெரிக்காவின் அஷ்டன் ஹால்லை பார்த்து அவரை போலவே சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டு பிரபலமானவர் ஆவார்.

இன்னும் சொல்லப்போனால், யோகேந்திர குஷாவை பலர் "இந்தியாவின் அஷ்டன் ஹல்" என்றே அழைக்கின்றனர். இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அஷ்டன் ஹல், இந்தியாவின் பல பகுதிகளை சுற்றிப் பார்த்ததோடு, அவரது இந்திய ரசிகர்களையும் சிலரை நேரில் சந்தித்தார். இந்திய அரசியல்வாதிகள் சிலரையும் அஷ்டன் ஹால் நேரில் சந்தித்துள்ள படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.

american fitness influencer ashton hall gifted mahindra thar roxx

அந்த வகையில், தன்னை ரோல் மாடலாக ஏற்ற யோகேந்திர குஷ்வாவையும் அவரது இருப்பிடத்திற்கே சென்று சந்தித்த அஷ்டன் ஹால், புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை சர்பிரைஸ் ஆக பரிசளித்து யோகேந்திர குஷ்வாவுக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளார். அஷ்டன் ஹால் உடன் சென்று மஹிந்திரா ஷோரூமில் யோகேந்திர குஷ்வா தார் ராக்ஸ் வாகனத்தை டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

நம்மில் சிலருக்கு அஷ்டன் ஹாலை பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், இவரது முகத்தை எங்கேயோ பார்த்தது போன்று தோன்றும். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதையும், அன்றாட காலை வேலைப்பாடுகளையும் வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவிட்டு பிரபலமாகியவர்களில் அஷ்டன் ஹால் முக்கியமானவர் ஆவார். அவரது அந்த பாணியை அப்படியே பின்பற்றி இந்தியாவில் பிரபலமாகியவர் யோகேந்திர குஷ்வா ஆவார்.

வெறும் 23 வயது மட்டுமே ஆன யோகேந்திர குஷ்வாவுக்கு அஷ்டன் ஹால் பரிசளித்துள்ள மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது முற்றிலும் கருப்பு நிறத்தில் உள்ளது. தார் ராக்ஸ் வாகனத்தின் எந்த வேரியண்ட் இது என்பது சரியாக தெரியவில்லை. அநேகமாக விலைமிக்க டாப் வேரியண்ட் ஆகவே இருக்கும்.

மஹிந்திரா தார் ஆனது இந்தியாவில் பலரால் விரும்பப்படும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் ஆகும். இதன் 5-டோர் வெர்சன் ஆனது தார் ராக்ஸ் என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. 2 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறப்பட்ட ரூ.12.39 லட்சம் என்பது மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதாவது, இந்த விலையில் எண்ட்ரி-லெவல் வேரியண்ட் தான் கிடைக்கும். யோகேந்திர குஷ்வாவுக்கு மற்ற வேரியண்ட்களுள் ஒன்றை அஷ்டன் ஹால் வாங்கிக் கொடுத்திருந்தால் வாகனத்தின் விலை இன்னும் அதிகமானதாக இருந்திருக்கும்.

Article Corrections

தலைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
Article Published On: Thursday, May 21, 2026, 23:59 [IST]
English summary
American fitness influencer ashton hall surprisingly gifted mahindra thar roxx to indian follower
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+