ஏப்ரல் 1 முதல் சுங்கசாவடிகளில் இதை மூடப்போறாங்க! இனி காசு குடுக்கவே முடியாது!

இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நேரடியாக பணம் செலுத்தி சுங்க கட்டணம் செலுத்தும் முறையை முற்றிலுமாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி பாஸ்ட்டேக் அல்லது டிஜிட்டல் பேமென்ட் முறையிலேயே சுங்க கட்டணத்தை செலுத்தும் வாய்ப்பு இருக்கும் வகையில் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு இந்த ஃபாஸ்ட்டேக் கார்டுகளில் ரீசார்ஜ் செய்யப்பட்ட பணத்தையே சுங்கச்சாவடிகள் கிடக்கும்போது கட்டணமாக கழித்துக்கொள்ளும் முறை தற்போது பயன்பாட்டில் இருக்கிறது.

April 1 Toll Plaza

இந்நிலையில் ஃபாஸ்ட்டேக் கார்டுகள் இல்லாத வாகனங்கள் அந்த வழியாக பயணம் செய்தால் அவர்கள் நேரடியாக பணம் மூலம் செலுத்தினால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. இதுவே டிஜிட்டல் முறையில் செலுத்தினால் 125 சதவீதம் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இருந்தாலும் இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் 98 சதவீதம் நேரடியாக ஃபாஸ்ட்டேக் கார்டுகள் மூலமே கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஃபாஸ்ட்டேக் கார்டுகள் எல்லாம் இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் நீண்ட தூரம் வாகனங்கள் வரிசையில் நிற்பதை தவிப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ஆகும். இதனால் தேவையில்லாத போக்குவரத்து நெருக்கடி மற்றும் எரிபொருள் செலவு ஆகியவற்றை குறைப்பதற்காக இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இது ஓரளவுக்கு வெற்றியை தந்தாலும் பெரிய அளவில் இது அதன் நோக்கத்தை செயல்படுத்த முடியவில்லை இந்நிலையில் தற்போதும் ஒரு சிலர் வாகனங்களை நிறுத்தி பணம் மூலம் சுங்க கட்டணத்தை செலுத்தி வருவதால் இது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இது மட்டுமல்லாமல் நேரடியாக பணத்தை கையாள்வதில் சுங்கசாவடி ஊழியர்கள் சிறிது சிரமத்தை சந்திக்கிறார்கள்.

April 1 Toll Plaza

இந்நிலையில் டிஜிட்டல் முறையில் சுங்க கட்டணத்தை செலுத்துபவர்களுக்கு 200% கட்டணம் இல்லாமல் 125 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ள கேஸ் கவுண்டர்களை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் மத்திய அரசு சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தாமல் நேரடியாக செல்லும் போதே சுங்க கட்டணத்தை வசூலிக்கும் சிஸ்டத்தை இந்தியாவில் படிப்படியாக அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது. இது ஏற்கனவே சோதனை கட்டத்தை நெருங்கி விட்டது. பல இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது இந்தியாவில் 25 சுங்கச்சாவடிகளில் இந்த சோதனைகள் நடந்து வருகிறது. இது வெற்றியடைய பட்சத்தில் இந்தியா முழுவதும் இது விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

April 1 Toll Plaza

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகள் கட்டண வசூல் முறை மக்களுக்கு பல்வேறு தலைவலிகளாக இருக்கிறது. இதில் நேரடியாக கேஸ் கட்டணம் செலுத்தும் முறையை தற்போது முழுமையாக நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் முறையில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் எப்படி சுங்கச்சாவடி கடப்பது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்திவிட்டு பின்னர் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்தால் நிச்சயம் வரவேற்க வாய்ப்பிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 17, 2026, 10:05 [IST]
English summary
April 1 toll plaza cash payments closure
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X