கோடி ரூபாயில் பரிசுகளை பெற்று இருந்தாலும், இது மறக்க முடியாத பரிசு! கோப்பை உடன் கிடைத்த பஜாஜ் ஸ்கூட்டர்!

உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (Bajaj Auto Limited), இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் (WPL) டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மகளிர் அணிக்கு சேத்தக் சி25 (Chetak C25) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 9ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த இந்த டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக RCB மகளிர் அணி கோப்பையை வென்றது.

rcb winning team gets chetak c25 electric scooter

இந்த மகத்தான வெற்றி மற்றும் சீசன் முழுவதும் அவர்களின் போராடும் உணர்வைப் பாராட்டி, கோப்பை வென்ற அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் புத்தம் புதிய சேத்தக் சி25 ஸ்கூட்டர்களை பரிசாக வழங்க பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியின் அதிகாரப்பூர்வ பயண பார்ட்னர் (Official Ride Partner) ஆக சேத்தக் விளங்கியது.

பஜாஜ் சேத்தக் பெயர் இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நீண்ட காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் ஒன்றாகும். முன்பு கிளாசிக்கான தோற்றத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர், கடந்த 2020இல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அதே கிளாசிக் தோற்றத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின், சேத்தக்கில் சில வேரியண்ட்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டன.

rcb winning team gets chetak c25 electric scooter

சி25 ஆனது சேத்தக் இ-ஸ்கூட்டர்கள் வரிசையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இளமையான, இலகுவான மற்றும் அதிக வெளிப்படையான வேரியண்ட் ஆகும். வேகமாக மாறிவரும் நகர வாழ்க்கைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள சி25, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியின் சாம்பியன்ஷிப் பயணத்தை போன்று சுறுசுறுப்பு, நெருக்கடியில் அமைதி மற்றும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை போன்ற குணங்களை பிரதிபலிக்கிறது.

சேத்தக் சி25 ஆனது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் புதிய மாடல் மட்டுமின்றி, மிகவும் மலிவு விலையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். கடந்த 2026 ஜனவரியில் தான் அறிமுகப்படுத்தப்பட்ட சேத்தக் சி25, நெரிசல் மிகுந்த நகரப் பயணங்களான ஸ்கூட்டராக நிலைநிறுத்தப்பட்டுள்து. இலகுவான எடை மற்றும் எளிதாக ஏறி, இறங்கும் வசதி கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 2.2 கிலோவாட்ஸ் ஆற்றலை வழங்கக்கூடிய ஹப் மோட்டார் பொருத்தப்படுகிறது.

rcb winning team gets chetak c25 electric scooter

2.5 kWh பேட்டரி பேக்கை கொண்ட இந்த எலெக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் அதிகப்பட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகத்தை எட்டக்கூடியதாக இந்த ஸ்கூட்டர் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரி ஆனது சான்றளிக்கப்பட்ட 113 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. நிஜ உலக பயன்பாட்டில் தோராயமாக 90-95 கி.மீ வரை ரேஞ்ச் கிடைக்கும்.

750 வாட்ஸ் சார்ஜரைப் பயன்படுத்தி, சுமார் 3 மணிநேரம் 40 நிமிடங்களில் இதன் பேட்டரியை 0% முதல் 100% வரை சார்ஜ் செய்ய முடியும். முழுவதுமாக மெட்டல் பாடியில் உருவாக்கப்படும் சேத்தக் சி25 மிகவும் கச்சிதமான, இலகுவான பிரேமைக் கொண்டுள்ளது. இதன் மொத்த எடை 107-108 கிலோகிராம் மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் லட்சியம் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட இந்த WPL சீசனின் உச்சக்கட்டத்தைக் குறிக்கும் ஒரு சிறப்பான தருணமாக இந்த பரிசு அமைந்துள்ளது. பெங்களூர் மாநகர நகர்ப்புற அடையாளத்தின் மீதான பொதுவான பார்வையாக பஜாஜ் சேத்தக் சி25 பிரதிபலிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 6, 2026, 18:00 [IST]
English summary
Bajaj chetak c25 gift to rcb womens team wpl champions check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X