எல்லாமே 7-சீட்டர் கார்... குடும்பமாக இந்த கார்களில் குறைந்த எரிபொருள் செலவில் போய்ட்டு வரலாம்!

இந்தியாவில் தற்போது பல எம்.பி.வி (மல்டி-பர்ப்பஸ் வெஹிக்கிள்) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் மாடல்கள் சிஎன்ஜி (அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு - CNG) ஆப்ஷன் உடன் கிடைக்கின்றன. இவை சிறந்த மைலேஜ் (Mileage) மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு குறைந்த எரிபொருள் செலவை வழங்குகின்றன.

குறிப்பாக, எம்பிவி (MPV) கார்கள் பிரிவில் அதிக எடை சுமக்கும் திறன் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனம் மிகவும் அத்தியாவசியமானது என்பதால், சிஎன்ஜி ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. பல கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்த பிரிவில் தொழிற்சாலையிலேயே சிஎன்ஜி கிட்களை பொருத்தி வழங்குகின்றன. இந்தியாவில் தற்போது கிடைக்கும் டாப்-5 சிஎன்ஜி எம்பிவி கார்களைப் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

best 7-seater mpv cng cars in india

1. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga): இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எம்பிவி காரான எர்டிகா, பெட்ரோல் மற்றும் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மேலும், இது சிறந்த மைலேஜை வழங்குகிறது. எர்டிகா எஸ்-சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.10.76 லட்சம் ஆகும். இது வி.எக்ஸ்.ஐ (VXI) மற்றும் இசட்.எக்ஸ்.ஐ (ZXI) ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இந்த கார் 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 64.6 கிலோவாட்ஸ் ஆற்றலையும், 121.5 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் எர்டிகா சிஎன்ஜி ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.11 கி.மீ வரையிலான மைலேஜ் தருகிறது.

best 7-seater mpv cng cars in india

2. கியா கேரன்ஸ் (Kia Carens): இந்த பிரிவில் உள்ள பிரீமியம் தரத்திலான எம்பிவி கார் மாடல்களில் கியா கேரன்ஸ் ஒன்றாகும். இது 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன், சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டான கேரன்ஸ் பெட்ரோல் கார் 113 பிஹெச்பி மற்றும் 144 என்.எம் டார்க் திறனில் இயங்கக்கூடியதாக உள்ளது. ஆனால், சிஎன்ஜி மாடலில் பவர் அவுட்புட் சற்று குறைவாகவே கிடைக்கும்.

தொழிற்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே வசதி கொண்ட 8.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆறு ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், டயர்களில் காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டம், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், 12.5 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை மற்றும் ஸ்டீயரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள் போன்ற அம்சங்களுடன் வரும் கியா கேரன்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.99 லட்சம் முதல் தொடங்குகிறது.

best 7-seater mpv cng cars in india

3. ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber): டீலர்ஷிப்கள் மூலம் ட்ரைபர் காருக்கு ரெனால்ட் நிறுவனம் சிஎன்ஜி கிட்களை வழங்குகிறது. சாதாரண பெட்ரோல் ட்ரைபர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.5.76 லட்சம் ஆகும். இது 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 72 பிஎஸ் ஆற்றலையும், 96 என்.எம் டார்க் திறனையும் அளிக்கிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வரும் இந்த காரில், சிஎன்ஜி கிட் உடன் பவர் அவுட்புட் சற்று குறைவாக இருந்தாலும், மைலேஜ் ஆனது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு சுமார் 26 கி.மீ வரை அதிகமாக உள்ளது.

ட்ரைபர் ஏழு இருக்கைகளுடன், இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசை இருக்கைகளுக்கான ஏசி வசதி, 20.32 செ.மீ-இல் மிதக்கும் எஃபெக்ட் கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே வசதி, 17.78 செ.மீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை, ஸ்டாண்டர்டான 21 பாதுகாப்பு அம்சங்கள், ஆறு ஏர்பேக்குகள், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

best 7-seater mpv cng cars in india

4. டொயோட்டா ரூமியன் (Toyota Rumion): டொயோட்டாவின் என்ட்ரி-லெவல் எம்பிவி காரான ரூமியன், மாருதி சுஸுகி எர்டிகா காரை அடிப்படையாகக் கொண்டது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.11.40 லட்சம் ஆகும். இதன் 1,462சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 64.6 கிலோவாட்ஸ் ஆற்றலையும், 121.5 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இதன் சிஎன்ஜி வெர்சன் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.11 கி.மீ மைலேஜ் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

டொயோட்டா ரூமியன் ஒரு முழுமையான ஏழு இருக்கைகள் கொண்ட எம்பிவி கார் ஆகும். இது இரட்டை நிற கேபின், கலர் டிஎஃப்டி எம்ஐடி டிஸ்ப்ளே, ரிமோட் கீலெஸ் என்ட்ரி, டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜிங் வசதி, ப்ளூடூத் இணைப்பு, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.

best 7-seater mpv cng cars in india

5. மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco): மாருதி சுஸுகி ஈக்கோ ஒரு முழுமையான எம்பிவி ரக காராக நிலைநிறுத்தப்படாமல், மினிவேன் வகையின் கீழ் வந்தாலும், நேரடி போட்டியாளர்கள் இல்லாததால் அதன் பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.35 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இது தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் வருகிறது.

இந்த மினிவேன் 1.2 லிட்டர் கே12என் சீரிஸ் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 52.7 கிலோவாட்ஸ் ஆற்றலையும், 95 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் இந்த சிஎன்ஜி வேன் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.78 கி.மீ மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இதில் 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி டேங்க் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் பலரால் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட எம்பிவி கார் என்றால், அது எர்டிகா தான், அதில் சந்தேகமே இல்லை. அதேநேரம், எர்டிகாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ரூமியன் காராக இருந்தாலும் சரி, லேட்டஸ்ட் அறிமுகமான கியா கேரன்ஸ் ஆக இருந்தாலும் சரி கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற கார்களே. இவற்றை சிஎன்ஜி பவர்டிரெயின் (Powertrain) உடன் வாங்குவதன் மூலம் அதிக பேர் செல்லக்கூடிய காரை சிறந்த மைலேஜ் உடன் பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 22, 2026, 5:00 [IST]
English summary
Best 7 seater mpv cng cars in india maruti suzuki ertiga to eeco
மேலும்... #mpv car #cng car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X