பெட்ரோல் ஸ்கூட்டர்கள் தோற்றுப்போகும்... கிராமங்களில் வசிப்போர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்த கூடாதா என்ன

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் இந்தியாவில் பல பகுதிகளில் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மக்கள் மத்தியில் நிலவிவரும் பெட்ரோல்/ டீசல் தட்டுப்பாடு குறித்த அச்சம் இதற்கு காரணம் என்றாலும், இதுபோன்ற சூழல் வருங்காலங்களிலும் நடந்தால் என்ன செய்வது என்கிற பயம் தான் இதற்கு முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனால் பலர் இந்த சமயத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர், இது வரும் வாரங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அடிக்கடி குறுகிய தூர பயணங்களை மேற்கொள்ளும் நகரவாசிகளின் சாய்ஸாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மாறி வருகின்றன. அதாவது, அன்றாடம் வீட்டிலேயே சார்ஜ் செய்துக் கொள்ளக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவர்களது விருப்பமாக உள்ளது.

best electric scooters for rural areas in tamilnadu

நகரவாசிகள் என்று மட்டுமின்றி, கிராமப்புறங்களில் வசிப்போரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்தலாம். ஏனெனில், ஒருவேளை கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அது கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களை தான் முதலாவதாக தாக்கும் என கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் மேடு பள்ளங்களிலும் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube): டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 31,600 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதில் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரின் பங்கு முக்கியமானது. பள்ளம் மேடான சாலைகளிலும் சவுகரியமாக பயன்படுத்துவதற்கு ஏற்ப மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் இதில் வழங்கப்படுகிறது.

best electric scooters for rural areas in tamilnadu

அத்துடன், அதிகளவிலான சுமைகளை கொண்டு செல்ல பெரிய அளவிலான ஃபுட்போர்டு (Footboard) இதில் வழங்கப்படுகிறது. அதேநேரம், தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக நிமிர்ந்த ரைடிங் பொசிஷனில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்ட முடிகிறது. அத்துடன், தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு மாநிலம் முழுவதும் பரந்த டீலர்ஷிப் நெட்வொர்க் உள்ளதால் ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸ் பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஆம்பியர் மேக்னஸ் இ.எக்ஸ் (Ampere Magnus EX): 121கிமீ என்கிற நீண்ட ரேஞ்ச் (ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக வாகனம் இயங்கக்கூடிய தூரம்) உள்ளதால் அன்றாட பயன்பாட்டிற்கு தினந்தோறும் சார்ஜ் செய்ய வேண்டிய தேவை கூட இருக்காது. அதுமட்டுமின்றி, அதிகப்படியான ரேஞ்சால் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு சென்று வருவது எளிதாக இருக்கும்.

best electric scooters for rural areas in tamilnadu

வலிமையான உடலமைப்பால் உருவாக்கப்படுவதால், வெவ்வேறான சாலைகளிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சவுகரியமாக பயன்படுத்த முடியும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் செய்ய முடியும் என்பதால், கிராமங்களில் வசிப்போரின் வீடுகளின் வெளியே சார்ஜிங் வசதி இல்லையென்றாலும், பேட்டரியை வீட்டிற்குள் எடுத்துச்சென்று சார்ஜ் செய்ய முடியும்.

கோமகி எக்ஸ்.ஆர்7 (Komaki XR7): அதிக சுமைகளை தாங்கும் வகையிலான சஸ்பென்ஷன் அப்சார்பர்கள் மற்றும் தரையில் இருந்து அதிக உயரத்தில் கிரவுண்ட் கிளியரென்ஸ் (Ground Clearance) உள்ளிட்டவை இந்த கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பள்ள மேடான சாலை மற்றும் உயரமான ஸ்பீடு பிரேக்கர்கள் நிறைந்த கிராமப்புற பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்க வைக்கின்றன.

அதுமட்டுமின்றி, 322கிமீ வரையிலான ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெறலாம் என கோமகி நிறுவனம் தெரிவிப்பது, ஃபாஸ்ட்-சார்ஜிங் (Fast-charging) உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் இல்லாத கிராமங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்துவதற்கு ஏற்றதாக விளங்க வைக்கிறது. அதாவது, இந்த இ-ஸ்கூட்டரை 2-3 நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.

ரிவர் இண்டி (River Indie): 14 இன்ச்சில் பெரிய சக்கரங்களை கொண்டிருப்பதுடன், 43 லிட்டர் கொள்ளளவில் இருக்கைக்கு அடியில் மிக பெரிய அளவில் ஸ்டோரேஜ் பகுதியை கொண்டிருப்பதுதான் இதன் ஸ்பெஷல் ஆகும். இதனால், அதிகளவிலான சுமைகளை அடிக்கடி கொண்டுச் செல்ல வேண்டியிருக்கும் கிராமப்புறங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும். அதுமட்டுமின்றி, அதிக ஆயுட்காலத்தை வழங்கக்கூடிய இந்த ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் யமஹா (Yamaha) பிராண்டில் இருந்தும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிராமப்புறங்களில் வசிப்போர் முதல்முறையாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போகிறீர்கள் என்றால், அருகில் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் செண்டர் (Service Center) உள்ளதா என்பதை முதலில் சரிப்பார்க்கவும். டிவிஎஸ் போன்ற முன்னணி 2-வீலர் நிறுவனங்கள் சென்னையை தாண்டி மதுரை, திருச்சி, சேலம் போன்ற இரண்டாம் கட்ட மாநகரங்களிலும் நெட்வொர்க்கை கொண்டுள்ளன. அதேபோல், ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக கழற்ற முடிந்தால் அது கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Article Corrections

மூன்றாவது பத்தியில் 'முதலாவதாக' என்கிற வார்த்தை தவறுதலாக இருமுறை கொடுக்கப்பட்டு இருந்தது திருத்தப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Friday, March 13, 2026, 10:41 [IST]
English summary
Best electric scooters for rural areas in tamilnadu tvs iqube and ampere magnus ex
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X