சிட்டிக்குள் பைக் வைத்திருப்பவங்க பாடுதான் பெரும் பாடு! இந்த 10இல் ஒரு பைக்கை வாங்கி செலவை மிச்சப்படுத்துங்க!

இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மாதந்தோறும் பெரும் சுமையாகவே மாறி வருகிறது. அதுவும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநகரங்களில், அருகில் இருக்கும் கடைக்குகூட 2-வீலரில் செல்பவர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. இத்தகைய சூழலில், அதிக எரிபொருள் சிக்கனமிக்க ஒரு பைக், பலருக்கும் பெரும் நிம்மதியாக அமைகிறது.

அன்றாட பயணங்களில் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலையும் முழுமையாகப் பயன்படுத்தவும், இயக்கச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் உதவும் இந்தியாவின் டாப்-10 மைலேஜ் பைக்குகளை இங்கே விரிவாகப் பார்ப்போம். இதில், பெரும்பாலான பைக்குகள் 100சிசி முதல் 125சிசி வரையிலான பிரிவில் வருகின்றன. இவை தினசரி அலுவலகப் பயணங்கள், சிறு வேலைகளுக்கு மட்டுமின்றி, குறுகிய நெடுஞ்சாலைப் பயன்பாடுகளுக்கும் ஏற்றவை ஆக உள்ளன.

best mileage bikes for city

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor Plus) மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (XTEC) ஆகிய இரண்டும் இந்த பட்டியலில் தனித்து நிற்கின்றன. இவை கோரும் 83.2 கி.மீ மைலேஜ், பெட்ரோல் செலவில் சிக்கனம் தேடுவோருக்கு நேரடி தீர்வாக உள்ளது. இந்த ஹீரோ மோட்டார்சைக்கிள்கள் நிரூபிக்கப்பட்ட 97.2சிசி என்ஜின், எளிய ஹார்டுவேர்ஸ் மற்றும் பழக்கமான எர்கோனாமிக்ஸ் (Ergonomics) அம்சங்களைக் கொண்டுள்ளன. இதில், ஸ்பிளெண்டர் பிளஸ் ஆரம்ப விலை ரூ.75,141 ஆகவும், ஸ்பிளெண்டர் பிளஸ் XTEC ரூ.79,991 ஆகவும் உள்ளது.

best mileage bikes for city

டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport), டிவிஎஸ் ரேடியான் (Radeon) மற்றும் டிவிஎஸ் ரைடர் (Raider) ஆகியன வெவ்வேறு விதமான வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட், குறைந்த விலையில் (ரூ.59,431) அதிக மைலேஜ் (73 கி.மீ/ லிட்டர்) தந்து தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளது. ரேடியான் (ரூ.76,131), சௌகரியம் மற்றும் ஒரு முதிர்ந்த தோற்றத்தை வழங்குகிறது. ரைடர் (ரூ.95,219) ஸ்போர்ட்டியான வடிவமைப்பு மற்றும் அதிக தொழிற்நுட்ப அம்சங்களுடன் 67 கி.மீ மைலேஜை உறுதியளிக்கிறது.

best mileage bikes for city

பஜாஜ் சிடி 110எக்ஸ் (Bajaj CT 110X) (ரூ.69,216) மற்றும் பிளாட்டினா 110 (Platina 110) (ரூ.70,400) ஆகிய இரண்டும் கடினமான சாலை நிலைமைகளுக்கு ஏற்றவை. இவை இரண்டும் 70 கி.மீ மைலேஜ் வழங்குவதோடு, கிராமப்புற மற்றும் நகரச் சாலைகளில் அவ்வப்போது சுமை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளவை ஆக உள்ளன. நீண்ட சஸ்பென்ஷன் மற்றும் உறுதியான ரேக்குகள் தினசரி சுமைகளை ஏற்றிச் செல்ல உதவுகின்றன. மாதாந்திர பட்ஜெட்டிற்குள்ளும் அடங்குவதால் இவை மக்கள் மத்தியில் பிரபலம்.

best mileage bikes for city

ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe), புதியதாக பைக் வாங்கும் வாடிக்கையாளர்களின் தேவைகளை அமைதியாகப் பூர்த்தி செய்கிறது. 70 கி.மீ மைலேஜ், கிக் ஸ்டார்ட் ஆப்ஷன்கள் மற்றும் அடிப்படை அம்சங்கள் அதன் கொள்முதல் மற்றும் பராமரிப்பு செலவுகளைக் குறைவாக வைத்துள்ளன. இதன் விலை ரூ.69,640 ஆகும். பல குடும்பங்கள் இந்த மாடலை தங்கள் முதல் மோட்டார்சைக்கிளாக, சிறு அலுவலகப் பயணங்கள் மற்றும் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்துகின்றனர்.

best mileage bikes for city

பஜாஜ் பல்சர் என்.எஸ் 125 (Bajaj Pulsar NS 125), விலை மற்றும் செயல்திறன் இரண்டிலும் உயர்ந்த ரகத்தில் உள்ளது. ரூ.99,571 விலையில் கிடைக்கும் இந்த பைக், 64.75 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இது வேகமான பயணத்தை விரும்பும் தினசரி ஓட்டுநர்கள் விரும்பக்கூடியதாக உள்ளது. இளம் அலுவலக ஊழியர்களுக்கு, மைலேஜ் மற்றும் ஸ்டைல் என இரண்டும் கலந்த கலவையைத் தருவதால், பைக்கில் பெட்ரோல் நிலையத்தை தாண்டும்போது ஏற்படும் குற்ற உணர்வை இது குறைக்கிறது.

best mileage bikes for city

ஓபென் ரோர் (Oben Rorr) என்கிற எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) இந்த பட்டியலை நிறைவு செய்கிறது. இதன் '200 கி.மீ ரேஞ்ச்' என்பது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நிகரான மின்சாரப் பயன்பாட்டை குறிக்கிறது. ஆரம்ப கொள்முதல் விலை சற்று அதிகமாக ரூ.1.50 லட்சம் என்றாலும், வழக்கமான எலெக்ட்ரிக் சார்ஜிங், தொடர்ச்சியான எரிபொருள் விலை உயர்வினால் ஏற்படும் நீண்டகால செலவுகளை கணிசமாகக் குறைக்க உதவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பத்து பைக்குகளும் எரிபொருள் சேமிப்பு, எளிமையான பராமரிப்பு மற்றும் எளிதான நகரப் பயன்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. ARAI உறுதியளித்த இந்த மைலேஜ் அளவுகள் ஒரு பொதுவான வழிகாட்டியாக இருந்தாலும், நிஜ சாலை நிலைமைகளில் மைலேஜ் எண்கள் சற்று வேறுப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 6, 2026, 5:00 [IST]
English summary
Best mileage bikes for daily city commuters hero splendor plus to oben rorr electric bike
மேலும்... #motorcycles #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X