திவ்யா கணேசனுக்கு கொடுத்த மாருதி கார் பார்க்க தான் பெருசு, ஆனா 5 பேர் தான் போக முடியும்! 5-ஸ்டார் ரேட்டிங்...
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிறைவடைந்துள்ளது. இதன் வெற்றியாளராக வைல்ட் கார்டில் நுழைந்த நடிகை திவ்யா கணேசன் (Divya Ganesan) வெற்றிப் பெற்றதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். திவ்யா கணேசனுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் மதிப்புமிக்க வெற்றி கோப்பையுடன் ஒரு புதிய மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki victoris) காரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, திவ்யா கணேசன் 77 நாட்கள் நிகழ்ச்சியில் இருந்த காலத்தில், ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை ஊதியமாகப் பெற்றார். இதன் மூலம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது மொத்த வருவாய் ரூ.70 லட்சத்தைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், திவ்யாவின் பிக்பாஸ் வெற்றி பரிசுத் தொகுப்பில் ஒரு பிராண்ட்-நியூ மாருதி சுஸுகி விக்டோரிஸ் எஸ்யூவி காரும் அடங்குகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரி பார்தோ பானர்ஜி (Partho Banerjee) அவர்கள் வீடியோ காணொளி மூலமாக தமிழ் பிக்பாஸ் சீசன் 9-இன் வெற்றியாளர் விக்டோரிஸ் காரை பெறுவார் என அறிவிக்கப்பட்டப்படி, வெற்றியாளர் திவ்யா கணேசனுக்கு காரின் சாவியை நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான விஜய் சேதுபதி வழங்கினார்.
விக்டோரிஸ் ஆனது மாருதி சுஸுகியின் முதன்மையான எஸ்யூவி (SUV) ரக கார் மாடலாகும். இருப்பினும், மாருதி சுஸுகியின் விலை குறைவான கார்கள் விற்பனை செய்யப்படும் அரீனா (Arena) டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் விக்டோரிஸ் 2025 செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இது லெவல்-2 அடாஸ் (ADAS) தொழில்நுட்பத்தை பெற்ற முதல் மாருதி சுஸுகி கார் என்ற சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி கார்கள் வரிசையில் பிரெஸ்ஸா (Brezza) மற்றும் கிராண்ட் விட்டாரா (Grand Vitara) கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விக்டோரிஸ் கார் ஆனது காரின் திறன் மற்றும் செயல்திறன் தேவைகளுக்கு ஏற்ப பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஒன்றான, 1.5 லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் (Mild Hybrid) பெட்ரோல் என்ஜின் 103 பிஎஸ் ஆற்றலையும், 137 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.
இந்த என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் உடன் காரின் மைலேஜ் 21.18 kmpl வரை கிடைக்கிறது. இதே 1.5 லிட்டர் என்ஜின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) ஆப்ஷனிலும் அதிகப்பட்சமாக 116 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக கிடைக்கிறது.

இது இ-சிவிடி (e-CVT) கியர்பாக்ஸ் உடன் இணைந்து அதன் செக்மென்ட்டிலேயே 28.65 kmpl என்ற அதிகபட்ச மைலேஜை தருகிறது. விக்டோரிஸ் காரில் 1.5 லிட்டர் என்ஜின் ஆனது சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது. விக்டோரிஸ் எஸ்-சிஎன்ஜி (S-CNG) கார், அதிக பூட் ஸ்பேஸ் பகுதிக்காக அண்டர்பாடி ட்வின்-டேங்க் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 27.02 கிமீ மைலேஜை வழங்குகிறது.
விக்டோரிஸ் தனது செக்மென்ட்டில் மிக பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். இது பாரத் NCAP மற்றும் குளோபல் NCAP ஆகிய இரண்டிலும் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. அந்த அளவிற்கு விக்டோரிஸ் காரின் நிலையான பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம் (ESP), EBD உடன் ABS மற்றும் அனைத்து பயணிகளுக்கும் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் ஆகியவை அடங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகியில் இருந்து லேட்டஸ்ட் ஆக வந்த காரணத்தினாலேயே விக்டோரிஸ் மீது பலத்த கவனம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய காரை பெற்றதினால் திவ்யா கணேசனின் வாழ்வில் இன்னும் என்னென்ன நல்லது நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இருப்பினும், எத்தகைய பவர்டிரெயின் ஆப்ஷன் உடன் விக்டோரிஸ் கார் திவ்யா கணேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









