ஜெயலலிதா மாதிரியே சிஎம் ஆக போறது உறுதி! துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை புடை சூழ வந்த நடிகை!
இந்தியாவில் திரையுலகில் இருந்து அரசியலில் நுழைந்த நடிகைகள் நிறைய பேர் இருக்கின்றனர். இதற்கு ரோஜா (Roja) ஒரு உதாரணம். ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (YSR Congress Party) ஆட்சி நடைபெற்றபோது, முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி (Y. S. Jagan Mohan Reddy) அமைச்சரவையில், ரோஜா அமைச்சராக இருந்தார்.
அதேபோல் ஸ்மிருதி இராணியும் (Smriti Irani) இங்கே குறிப்பிடப்பட வேண்டியவர்தான். நடிகையான இவர் பாரதிய ஜனதா கட்சியின் (BJP - Bharatiya Janata Party) ஆட்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) அமைச்சரவையில், மத்திய அமைச்சராக இருந்தார். இங்கே மற்றொரு முக்கியமான நபரை குறிப்பிடவில்லையே என நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஆம், ஜெயலலிதாவை (Jayalalithaa) குறிப்பிடாமல் இந்த செய்தியை நிறைவு செய்ய முடியாது. நடிகையாக இருந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக (Chief Minister) உயர்ந்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டின் மிக இளம் வயது முதலமைச்ச (Youngest Chief Minister Of Tamil Nadu) என்ற பெருமை ஜெயலலிதாவிற்கு உண்டு.
1991ம் ஆண்டு முதல் முறையாக முதலமைச்சர் அரியணையில் ஏறியபோது அவருக்கு வயது வெறும் 43 மட்டுமே. ஜெயலலிதா அதிரடியான அரசியலுக்கு சொந்தக்காரர். தற்போது ஜெயலலிதாவின் பாணியிலேயே அதிரடியான அரசியலை ஒரு நடிகை செய்து வருகிறார். ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததாலோ என்னவோ ஜெயலலிதாவின் தைரியம் மற்றும் துணிச்சலை அவரிடமும் பார்க்க முடிகிறது.

இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள நடிகை கங்கனா ரனாவத்தை (Kangana Ranaut) பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். இவர் தமிழில் தாம் தூம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி (Thalaivii) திரைப்படத்தில் ஜெயலலிதாவாகவும் கங்கனா ரனாவத் நடித்திருந்தார்.
தற்போது பாஜக எம்பி (BJP MP)-ஆக கங்கனா ரனாவத் பணியாற்றி வருகிறார். துணிச்சலான நடவடிக்கைகளுக்காக பெயர் பெற்ற கங்கனா ரனாவத்தின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. Viral Bhayani யூடியூப் (YouTube) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் கங்கனா ரனாவத் ஒரு காரில் இருந்து இறங்கி, ஒரு விமான நிலையத்திற்குள் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த வைரல் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இது மும்பை விமான நிலையமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் புடை சூழ கங்கனா ரனாவத் காரில் இருந்து கம்பீரமாக இறங்கி வருவதை நம்மால் இந்த வீடியோவில் காண முடிகிறது.
வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும் கூட, கங்கனா ரனாவத் பயன்படுத்தியது என்ன கார்? என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். அது மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்ஸ் 600 (Mercedes-Maybach GLS 600) ஆகும். சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும்.
மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்ஸ் 600 காரை கங்கனா ரனாவத் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. பெரும்பாலான சமயங்களில் அவர் இந்த காரில்தான் பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் இந்த காரை பயன்படுத்தியபோது, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் செய்தி வெளியிட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அவர் இந்த காரை கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதமே வாங்கி விட்டார். போலார் ஒயிட் (Polar White) நிறத்தில் இந்த கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், பெரும்பாலான அரசியல்வாதிகள் வெள்ளை நிற கார்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். வெள்ளை என்பது தூய்மையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.
இந்திய அரசியல்வாதிகள் பலர் வெள்ளை நிற கார்களை பயன்படுத்துவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். கங்கனா ரனாவத்தின் மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்ஸ் 600 காரை பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப், சாய்த்து கொள்ள கூடிய வகையிலான மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், குளிர்சாதன பெட்டி போன்றவை எல்லாம் மிகவும் குறிப்பிடத்தக்க வசதிகளாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கங்கனா ரனாவத்தின் மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 கார், சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவை ஆகும். உருவத்தில் பெரிய சொகுசு எஸ்யூவி காராக இருந்தாலும் கூட, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.9 வினாடிகளிலேயே எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது.
ஒரு சாதாரண கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு சுமார் 15 வினாடிகள் ஆகும். கங்கனா ரனாவத்தில் மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 காரின் செயல்திறன் எப்படிப்பட்டது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. முன்னதாக கங்கனா ரனாவத்தின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், ஜெயலலிதா பாணியில் அவரும் ஒரு நாள் அவரது சொந்த மாநிலத்திற்கு (ஹிமாச்சல பிரதேசம்) முதலமைச்சராக பதவியேற்க போவது உறுதி என 'கமெண்ட்' செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications