சீனா மாதிரி தமிழ்நாட்டை மாத்தப்போறோம்! மத்திய பட்ஜெட்டில் வேற லெவல் திட்டம்!

இந்தியாவில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது 9வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறை குறித்த சில முக்கியமான தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் தமிழகத்ததை சீனா போல மாற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது பட்ஜெட்டட் உரையில் இந்தியாவில் செமி கண்டெக்டர் மற்றும் பெர்மெனட்ட் மேக்னெட்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். ஆட்டோமொபைல் செக்டாரில் இந்த இரண்டு பிரிவுகளும் இந்தியாவிற்கு மிக அவசியமான தேவையாக உள்ளது. இத்தனை நாள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் இதை இந்தியாவிலேயே உருவாக்கும் நடவடிக்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Budget 2026

இந்தியாவில் வாகனங்களுக்கு செமி கண்டெக்டர்கள் அதிகம் தேவை, கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் உலகம் முழுவதும் செமி கண்டெக்டர் தட்டுபாடு ஏற்பட்டு உலகம் முழுவதும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாகன தயாரிப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டடது. இதற்கு முக்கியமான காரணம், ஜப்பான், தைவான், சீனா போன்ற நாடுகள் தான் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் செமி கண்டெக்டர் துறையை விரிவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்தியா முயற்சி செய்து வருவவதாகவும், இதுவரை ரூ22,000 கோடிக்கும் அதிகமான அளவில்
முதலீடு வந்துள்ளதாகவும் இதை இரண்டிப்பாக்கி இந்தாண்டு ரூ40,000 கோடி முதலீடு வரும் என தெரிவித்துள்ளார்.

இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கான செமி கண்டெக்டர் பொருட்களை வெளிநாட்டிலிருந்து வாங்காமல் இந்தியாவிலேயே தயாரிக்க முடியும். இதனால் வெளிபநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதில்லை. நமது வாகன உற்பத்திக்காக வெளிநாட்டை சார்ந்திருக்க வேண்டியதில்லை.

அடுத்ததாக தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில் இந்தியவாில் இவி வாகனங்களின் தயாரிப்பு அதிகமாக உள்ளது. இந்த வாகனங்களுக்கு எலெக்ட்ரிக் மோட்டார்களை தயாரிக்க பெர்மனென்ட் மோட்டார்கள் முக்கியமான உதிரி பாகமாக உள்ளது. இதை தயாரிக்க ரேர் எர்த் மேக்னட் அவசியமாக இருக்கிறது. தற்போது இந்த தாது பொருள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இதை நாம்நாட்டிலேயே தயாரிக்க தமிழ்நாடு, கேரளா, ஓடிசா ஆகிய மாநிலங்கள் காரிடாராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியிலிருந்து தாது மூலம் ரேர் எர்த் மேக்னட்களை உருவாக்க முடியும். இதனால் அப்பகுதியில் ஆலைகள் அமைக்கப்படும். இதனால் இந்தியாவில் இவி வாகன உற்பத்தி எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாட்டில் ஏற்கனவே இவி தயாரிப்பு அதிக அளவில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டிலிலும் பெர்மனென்ட் மேக்னட் காரிடார் அமைந்துள்ளது. இவி வாகன உற்பத்தியை மேலும் அதிகரிக்க வழி வகுக்கும். இ்நதியாவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 1, 2026, 11:41 [IST]
English summary
Budget 2026 semiconductor 2 point o and rare earth magnet helps auto sector
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+