களத்தில் இறங்கியது சீனா! அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காண போகுது! அந்த நாடும் இதுல கூட்டு சேந்துருச்சா!

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) பொறுப்பேற்றது முதலே சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகள் மீதும் அவர் வர்த்தக போரை நடத்தி வருகிறார். இதில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் கூட தப்பவில்லை.

இதற்கு கனடாவை (Canada) உதாரணமாக கூற முடியும். அமெரிக்காவின் அண்டை நாடாக கனடா இருந்து வருகிறது. இவை இரண்டும் அண்டை நாடுகள் என்பதுடன், நெருங்கிய நட்பு நாடுகளாகவும் இருந்தன. ஆனால் உலகின் மற்ற நாடுகளை போலவே, கனடா மீதும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதிகப்படியான வரிகளை விதித்தார்.

Donald Trump

அத்துடன் அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என்றும், கனடா நாட்டின் பொருட்கள் அமெரிக்காவிற்கு தேவையில்லை என்றும் டொனால்டு ட்ரம்ப், ஒரு சில சமயங்களில் அதிரடியாகவும் பேசினார். இதனால் அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல், தற்போது சீனாவிற்கு (China) சாதாகமாக மாற தொடங்கியுள்ளது.

ஆம், கனடாவும், சீனாவும் தற்போது நெருக்கமாகி வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வர்த்தக போர் காரணமாக, உலகில் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் நிலையில், கனடா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளும், தங்களது வர்த்தக உறவை மீண்டும் கட்டியெழுப்ப தொடங்கியுள்ளன.

Mark Carney-Xi Jinping

இந்த 2 நாடுகளும் தங்களுக்கு இடையே வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சனைகளை குறைக்க முயற்சி செய்து வருகின்றன. அத்துடன் புதிய வர்த்தக உறவுகளையும் கட்டியெழுப்பி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சீனாவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மீதான வரியை கனடா தற்போது அதிரடியாக குறைத்துள்ளது.

கனடாவின் முந்தைய அரசாங்கம், சீனாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, 100 சதவீதம் வரி விதித்தது. அதை தற்போது வெறும் 6.1 சதவீதமாக கனடா குறைத்துள்ளது. ஆனால் சீனாவின் 49 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே இந்த வரி குறைப்பு பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 49 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை கனடா வெறும் 6.1 சதவீதம் என்ற குறைவான வரியில் இறக்குமதி செய்து கொள்ளும். கனடாவின் பிரதமர் (Prime Minister) மார்க் கார்னி (Mark Carney) இதை அறிவித்துள்ளார். இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது கனடா-சீனா இடையேயான உறவில் புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது. ஏனெனில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இருந்த சமயத்தில், சீனாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அது தற்போது வெறும் 6.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்த 6.1 சதவீத வரி என்பது சீனாவின் 49 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக இந்த வரி குறைப்பின் பலனை சீனாவின் 70 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்க கனடா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கனடா-சீனா இடையேயான உறவு வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கனடா அரசு வரியை குறைத்துள்ள காரணத்தால், கனடா சந்தையில் இனி சீன எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும். இதன் மூலம் கனடா மக்களுக்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்க வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னியின் ஆசை நிறைவேறும்.

அத்துடன் இது அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதாவது இனி கனடா சந்தையில் சீனாவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் குறைவான விலையில் கிடைக்க தொடங்கும். இதனால் அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு சந்தையில் மிக கடுமையான போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 20, 2026, 14:24 [IST]
English summary
Canada slashes duty on chinese electric vehicles to 6 1 per cent check all details here
மேலும்... #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+