முதலமைச்சர் ஆன பின்பும் டிரைவர் சீட்டில் விஜய்... காரோட விலை 10 லட்ச ரூபாய் கூட இல்ல! இவ்வளவு எளிமையா...

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் அவர்கள் மஹிந்திரா பொலேரோ காரை ஓட்டியது கவனத்தை ஈர்த்துள்ளது. மாநிலத்தின் நலப்பணிகளுக்காக 40 பொலேரோ கார்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கிய முதல்வர், அதில் ஒன்றை ஓட்டினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள தவெக கட்சி மெல்ல மெல்ல அனைத்து துறைகளையும் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புத்தம் புதிய மஹிந்திரா பொலேரோ கார்கள் வழங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த ஓட்டுனர்களிடம் 40 பொலேரோ கார்களுக்கான சாவியை தலைமை செயலகத்தில் வைத்து முதலமைச்சர் வழங்கினார்.

chief minister vijay drives bolero

தலைமை செயலகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 பொலேரோ கார்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்தில் இருந்தன. பொதுவாக, தமிழ்நாட்டில் அரசாங்க அலுவலக பணிகளுக்கு பெரும்பாலும் வெள்ளை நிறத்திலான மஹிந்திரா கார்கள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த 40 பொலேரோ கார்களுக்கான ஒட்டுமொத்த மதிப்பீடாக ரூ.2.90 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மருத்துவ துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், பேரிடர் மற்றும் பெருந்தொற்றுக் காலங்களில் மக்களுக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்குத் தேவையான உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், போலி மருத்துவர்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்த புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

chief minister vijay drives bolero

காருக்கான சாவிகளை வழங்கியதுடன், அதில் ஒரு மஹிந்திரா பொலேரோ காரை தலைமை செயலக வளாகத்திற்குள் முதலமைச்சர் விஜய் ஓட்டியது சுற்றியிருந்தவர்களை ஆச்சிரியப்படுத்தியது. மேலும், அப்போது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கருப்பு- வெள்ளை கோட் அணிந்தப்படி டிரைவர் சீட்டில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் காரை ஓட்ட முன் இருக்கையில் அந்த காருக்கான டிரைவர் அமர்ந்திருந்தார்.

மஹிந்திரா பொலேரோ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது தற்சமயம் பி4, பி6, பி6 (ஆப்ஷ்னல்) மற்றும் பி8 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.9.91 லட்சம் வரையில் உள்ளன. கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி காரை விரும்புபவர்களின் பிரதான தேர்வுகளுள் ஒன்றாக பொலேரோ உள்ளது.

அந்த அளவிற்கு, பெட்டகம் வடிவிலான தோற்றத்தை இந்த மஹிந்திரா கார் கொண்டுள்ளது. பார்ப்பதற்கே கொஞ்சம் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்ட பொலேரோவை கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் கொண்டு செல்லலாம். அதற்கேற்ப இந்த காரில் பவர்ஃபுல்லான 1.5 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த காரின் விலைமிக்க பி8 வேரியண்ட்டில் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களாக டச் ஸ்க்ரீன் மற்றும் லெதரேட்டட் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், பொலேரோ காரின் கேபின் கொஞ்சம் பழையதாக காட்சியளிப்பதாக சிலர் குறை கூறும் நிலையில், இந்த காரின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களில் மிகவும் அடிப்படையான தொழிற்நுட்ப அம்சங்களே வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் அதிகமாக இல்லாவிடினும், நீண்ட கால உழைப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக அரசாங்க ஊழியர்களின் அலுவலக வாகனங்களாக பெரும்பாலும் மஹிந்திரா பொலேரோ வாங்கப்படுகின்றன. இது கடந்த ஆட்சிகளில் இருந்து புதிய தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. இதற்கு நாம் மஹிந்திராவின் நிபுணத்துவத்தை தான் பாராட்டியாக வேண்டும்.

Article Published On: Wednesday, May 20, 2026, 21:24 [IST]
English summary
Chief minister vijay drives mahindra bolero car at the secretariat
மேலும்... #tamil nadu government #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+