பிரதமர் சொன்ன ஒரு வார்த்தை... உடனே காரை மாற்றிய முதலமைச்சர்! வெறும் 15 லட்ச ரூபாய் காருக்கு மாறி அசத்தல்!

டெல்லி முதலமைச்சர் தனது ஆடம்பர காரை விடுத்து விலை குறைவான எலெக்ட்ரிக் காரான எம்ஜி விண்ட்சர் இவி -ஐ பயன்படுத்த துவங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி, தனது கான்வேயில் இடம்பெற்ற கார்களின் எண்ணிக்கையையும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சுமார் 60% குறைத்துக் கொண்டுள்ளார். எதற்காக இந்த மாற்றங்கள் என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் முயற்சியாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் முயற்சி கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளதால், அரசாங்க ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளை மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் மத்திய அரசு தள்ளுகிறது.

delhi chief minister rekha gupta using mg windsor ev

இந்த வகையில் ஒருபடி மேலாக, தேசிய தலைநகர் டெல்லியின் முதலமைச்சர் ரேகா குப்தா தனது அலுவலக காராக எம்ஜி விண்ட்சர் இவி-க்கு மாறியுள்ளார். வெள்ளை நிற விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரை அவர் பயன்படுத்தும் படங்கள் CNN-News18 மூலமாக நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த படங்களில், பச்சை நிற நம்பர் பிளேட் கொண்ட விண்ட்சர் இவி காரின் முன் இருக்கையில் ரேகா குப்தா அமர்ந்திருக்கும் காட்சியை காணலாம்.

பெரிய பேட்டரி உடன் விண்ட்சர் இவி புரோ விற்பனை செய்யப்பட்டாலும், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பயன்படுத்துவது சாதாரணமான விண்ட்சர் இவி காரை ஆகும். இதில், 38kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 331கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். அதுவே, விண்ட்சர் இவி புரோ காரில் பொருத்தப்படும் 52.9kWh பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 449கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது.

delhi chief minister rekha gupta using mg windsor ev

அத்தகைய விண்ட்சர் இவி காரை அலுவலக காராக பயன்படுத்த துவங்கியதுடன், ஏற்கனவே கூறியதுபோல் தனது கான்வேயில் இருந்த வாகனங்களின் எண்ணிக்கையையும் 60% குறைத்துள்ளார். அதாவது, முன்பு 10 வாகனங்கள் இருந்திருந்தால், அதில் தற்போது 4 வாகனங்கள் மட்டுமே இருக்கும். டெல்லி முதலமைச்சர் மட்டுமின்றி, பல மாநில முதலமைச்சர்களும் பெட்ரோல், டீசலின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாக கான்வே வாகனங்களின் எண்ணிக்கையை சமீப காலத்தில் குறைத்துக் கொண்டுள்ளனர்.

எம்ஜி விண்ட்சர் இவி காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது தற்சமயம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து பெட்ரோல், டீசல் கார்கள் விற்பனை செய்யப்பட்டாலும், விண்ட்சர் இவி தான் நிறுவனத்தின் சிறந்த விற்பனை காராக விளங்குகிறது.

இருப்பினும், கடந்த மே மாதத்தில் 2 ஆயிரத்து 32 விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த சில மாதங்களில் பதிவான விண்ட்சர் இவி காரின் எண்ணிக்கைகளை காட்டிலும் குறைவாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் 3,296 விண்ட்சர் இவி கார்களும், மார்ச் மாதத்தில் 4,530 விண்ட்சர் இவி கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.14.09 லட்சத்தில் இருந்தும், விண்ட்சர் இவி புரோ காரின் விலை ரூ.18.59 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன. அதுவே, BaaS ஆப்ஷனில் வாங்கினால் இவற்றின் விலைகள் முறையே ரூ.9.99 லட்சம் மற்றும் ரூ.13.60 லட்சம் மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்துகிறார் என்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கையில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா விலை குறைவான எலெக்ட்ரிக் காரை அலுவலக காராக பயன்படுத்துவது பெரிதும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிக்காட்டுதலின் பேரில் டெல்லி முதல்வர் இவ்வாறு எலெக்ட்ரிக் காரை நோக்கி நகர்ந்து இருப்பதுடன், கான்வே வாகனங்களின் எண்ணிக்கையையும் பாதிக்கும் மேல் குறைத்துள்ளார்.

Article Published On: Thursday, June 18, 2026, 23:07 [IST]
English summary
Delhi chief minister rekha gupta switches her official car to mg windsor ev electric car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out