பெட்ரோல் டூவீலர்களுக்கு திடீர் தடை! பதிவு செய்யும் பணிகளை நிறுத்த உத்தரவு! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!
டெல்லி மாநில அரசு தனது புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையை (Delhi New Electric Vehicle Policy), இன்று (ஜூன் 29) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துணை நிலை ஆளுனர் ஒப்புதல் கிடைத்த பிறகு, வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து (நாளை மறுநாள்), இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை அமலுக்கு வரும். இதன் முக்கியமான அம்சங்கள் குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
டெல்லியில் இனி புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி செலுத்த வேண்டியது கிடையாது. அத்துடன் எலெக்ட்ரிக் டூவீலர்களை வாங்கினால் 30 ஆயிரம் ரூபாயும், எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களை வாங்கினால் 50 ஆயிரம் ரூபாயும், N1 வகையை சேர்ந்த வர்த்தக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் 1 லட்ச ரூபாய் வரையும் மானியமாக வழங்கப்படும்.

அத்துடன் தங்கள் பழைய வாகனங்களை 'ஸ்கிராப்' செய்து விட்டு, அதாவது அழித்து விட்டு, புதிய வாகனங்களை வாங்கினால், இன்னும் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இந்த சலுகைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என்றில்லாமல், அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பொருந்தும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஆனால் இந்த சலுகைகள் எல்லாம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஹைப்ரிட் வாகனங்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தாது. அத்துடன் இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், வரும் 2028ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, டெல்லியில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.

அதாவது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்கும் எந்தவொரு டூவீலரும் டெல்லியில் பதிவு செய்யப்படாது. அவை அனைத்திற்கும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. முன்னதாக வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து டெல்லியில் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் மற்றும் N1 வகையை சேர்ந்த வர்த்தக எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.
வேறு எரிபொருளில் இயங்கும் ரிக்ஸாக்கள் மற்றும் N1 வகையை சேர்ந்த வர்த்தக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வருவதுதான் இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் மிக முக்கியமான நோக்கமாக உள்ளது.
டெல்லியில் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை அமலுக்கு வரும் சூழலில், பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் பங்கஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே சமயம் இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளதாககவும், டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்சனையை குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஜின்தர் சிங் சிர்ஸா கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது எதிர்காலம் என்றாகி விட்டது. எனவே சாத்தியம் உள்ளவர்கள் தற்போதே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தொடங்குவது நல்லது. எதிர்காலத்தில் டெல்லியை கடந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications