துரேந்தர் படம் ஆஹா ஓஹோனு சொன்னாங்க! கார், பைக்குகளில் எத்தனை பேர் இதை கவனித்தீர்கள்?

துரேந்தர் (Dhurandhar) முதல் பாகம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் 'துரேந்தர் தி ரிவேஞ்ச்' (Dhurandhar The Revenge) என்கிற பெயரில் இன்று (மார்ச் 18) திரைக்கு வந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு 'பான் இந்தியா' (Pan India) திரைப்படமாக வந்துள்ளதால் துரேந்தர் தி ரிவேஞ்ச் நாடு முழுவதும் பெரும் வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் படம் என்பதாலேயே படம் முழுக்க கார்களும் பைக்குகளும் அதிகமாக, அங்கும் இங்குமாக சீறிப் பாய்கின்றன. பார்க்க இன்னும் முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் என்பதற்காக படத்திற்காகவே பெரும்பாலான கார் & பைக்குகள் மாடிஃபை (Modify) செய்து பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு துரந்தர் முதல் பாகத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்த கார் & பைக்குகள் என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

dhurandhar movie car and bikes

டிரையம்ப் பொன்னேவில்லே டி120 (Triumph Bonneville T120): துரந்தர் முதல் பாகத்தில் கதாநாயகன் ரன்வீர் சிங் (Ranveer Singh) தனது அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது போல் காட்டப்படுவது மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 1200சிசி என்ஜின் கொண்ட பொன்னேவில்லே டி120 என்கிற இன்றைய கால குதிரை ஆகும்.

லெக்ஸஸ் எல்.எக்ஸ்470 (Lexus LX470): இந்த படத்தில் எஸ்பி சவுத்ரி அஸ்லாம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சஞ்சய் தத் வெள்ளை நிறத்தில் எஸ்யூவி கார் ஒன்றை பயன்படுத்துவதை பார்க்க முடியும். சஞ்சய் தத்தும், அக்சய் கண்ணாவும் திரைப்படத்தில் முதல்முறையாக சந்திக்கும்போது, அக்சய் கண்ணாவின் காரை நோக்கி சுடும் சமயத்தில் சஞ்சய் தத் அமர்ந்திருப்பார் அல்லவா, அது இந்த லெக்ஸஸ் கார் மீதுதான்.

dhurandhar movie car and bikes

துரந்தர் ஆனது 2000ஆம் காலக்கட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களம் கொண்ட திரைப்படம் என்பதால், அதற்கு ஏற்ப 1998 - 2007 காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த லெக்ஸஸ் காரை பயன்படுத்தி உள்ளனர். இந்த காரை இப்போது செகண்ட்-ஹேண்ட் மார்க்கெட்டில் காண்பதே கொஞ்சம் அரிதாகிவிட்டது. ஆனால் அப்படியே கிடைத்தாலும் கண்டிஷனை பொறுத்து ரூ.1 கோடி வரையில் விலை சொல்வார்கள்.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 60 சீரிஸ் (Toyota Land Cruiser 60 Series): கடந்த 2025ஆம் ஆண்டில் திரைக்குவந்த துரேந்தர் முதல் பாகத்தில் நிறைய காட்சிகளில் இந்த உலகளவில் பிரபலமான மற்றும் பவர்ஃபுல்லான டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, ஹிட் அடித்த பாடலான FA9LA-இல் பலுசிஸ்தான் பகுதிக்கு செல்வதற்கு இந்த காரை அக்சய் கண்ணா பயன்படுத்துவதுபோல் காட்டியிருப்பார்கள். 60 சீரிஸில் எஃப்ஜே60 கார் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது, 1980, 90களில் உருவாக்கப்பட்ட தரமான லேண்ட் க்ரூஸர் கார்களுள் ஒன்றாகும்.

dhurandhar movie car and bikes

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110): படத்தில் அக்சய் கண்ணாவிடம் ஆயுதங்களுக்கு ஆர்டர் கொடுக்கும் மேஜர் இக்பால் கதாபாத்திரம் அதிகமாக பயன்படுத்துவது டிஃபெண்டர் 110 காரை ஆகும். இந்தியாவில் இப்போதும் டிஃபெண்டர் 110 கார் ரூ.1.04 கோடி- ரூ.1.34 கோடி என்கிற விலையில் விற்பனையில் உள்ளது.

ஃபோர்டு ஸோடியாக் மார்க் 3 (Ford Zodiac Mark 3): இந்த திரைப்படத்தில் அக்சய் கண்ணா பல்வேறு விதமான கிளாசிக் கார்களை பயன்படுத்துவதுபோல் காட்டியிருப்பார்கள். அதில், 1965ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஃபோர்டு காரும் ஒன்றாகும். இந்த கார்களை 1962ஆம் ஆண்டில் இருந்து 1966 வரையில் ஃபோர்டு நிறுவனம் உருவாக்கியது.

இதர வாகனங்கள்: துரந்தர் முதல் பாகத்தின் பல காட்சிகளில் போலீஸ் வாகனங்களாக 1998 ஹோண்டா சிட்டி (Honda City), மிட்சுபிஷி லான்சர் (Mitsubishi Lancer) உள்ளிட்ட கார்களும், டாடா ஸெனான் (Tata Xenon) போன்ற பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனமும் காட்டப்பட்டிருந்தன. அதேபோல், அக்சய் கண்ணாவின் கேங்கில் இசுஸு டி-மேக்ஸ் (Isuzu D-Max) பிக்-அப் டிரக் ஒன்றும் காட்சித்தந்து இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்களால் வெகுவாக பாராட்டப்பட்ட திரைப்படமாக இருப்பினும், இதனை உருவாக்குவதில் சிறு சிறு பிழைகள் செய்யப்பட்டுள்ளன என்பது இந்த தொகுப்பின் மூலமாக தெரிய வருகிறது. ஏனெனில், 1998 ஹோண்டா சிட்டி போன்ற கார்கள் பாகிஸ்தானில் விற்பனை செய்யப்படவே இல்லை.

அதேபோல், மேஜர் இக்பால் கதாபாத்திரம் காட்சி தரும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் ஆனது இந்த திரைப்படத்தில் கதைக்களம் நடப்பதாக கூறப்படும் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டது கிடையாது; இன்றைய காலத்தில் உருவாக்கப்படும் மாடர்ன் டிஃபெண்டர் 110 கார் ஆகும். இவையாவும், துரந்தர் முதல் பாகத்தில் அடையாளம் காணப்பட்ட கார் & பைக்குகள் ஆகும். இரண்டாம் பாகத்தை உன்னிப்பாக ஆராய்ந்து அதில் என்னென்ன வாகனங்கள் காட்டப்பட்டுள்ளன என்பதை இன்னொரு தொகுப்பில் பதிவிடுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 18, 2026, 22:19 [IST]
English summary
Dhurandhar movie car and bikes ranveer singh used triumph bonneville t120 to isuzu d max
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X