E20 வேண்டாம்? எத்தனால் இல்லாத பெட்ரோல் எங்கு கிடைக்கும்? விலை உள்ளிட்ட முழுமையான விபரம்!

எத்தனால் கலப்புடன் விற்பனை செய்யப்படும் E20 பெட்ரோல் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், "எத்தனால் கலக்காத பெட்ரோல் இன்னும் கிடைக்கிறதா?" என்ற கேள்வி கார் மற்றும் பைக் உரிமையாளர்களிடம் எழுந்துள்ளது. குறிப்பாக E20 பயன்படுத்துவதில் சந்தேகம் கொண்ட பழைய வாகன உரிமையாளர்கள், மாற்று எரிபொருள் குறித்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோல் விற்பனையில் உள்ளதாக மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறி இருக்கிறது. E0 அல்லது E10 பெட்ரோலை வழக்கமான பெட்ரோலுடன் இணையாக மீண்டும் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்யும் சில பிரிமீயம் வகை பெட்ரோல் எத்தனால் கலப்பு இல்லாமல் தொடர்ந்து கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

1. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC)

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் XP-100 என்ற பெயரில் எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோலை விற்பனை செய்து வருகிறது. இதுதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் 100 ஆக்டேன் பிரிமீயம் வகை பெட்ரோல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இந்த பெட்ரோல் உயர் வகை கார், பைக்குகளில் பயன்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்டது. எத்தனால் கலப்பு இல்லாத இந்த எக்ஸ்பி-100 பிரிமீயம் பெட்ரோல் கிடைக்கும்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நிலையங்களில் XP100 பெட்ரோல் லிட்டர் ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் விலை வித்தியாம் இருக்கும் என்பதால், நீங்கள் செல்லும் ஐஓசி பெட்ரோல் நிலையத்தில் விலையை ஒருமுறை கேட்டு தெரிந்துகொண்டு நிரப்புவது அவசியம். ஐஓசி பெட்ரோல் நிலையங்களின் முகவரியை இந்தியன் ஆயில் ஒன் (IndianOil ONE) மொபைல்போன் செயலி மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

2. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL)

அடுத்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் பவர்100 (PoWer100) என்ற பெயரில் எத்தனால் கலப்பு இல்லாத இந்த பிரிமீயம் பெட்ரோலை விற்பனை செய்கிறது. உயர் வகை கார், பைக்குகளுக்காக இந்த பெட்ரோல் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பெட்ரோலும் ரூ.160 முதல் ரூ.170 வரையிலான விலையில் கிடைக்கும்.

3. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL)

மூன்றாவது தேர்வாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் Speed100 பெட்ரோல் எத்தனால் கலப்பு இல்லாமல் கிடைப்பதுடன், 100 RON ஆக்டேன் தரத்திற்கு இணையாக விற்பனை செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட BPCL நிலையங்களில் மட்டுமே இது கிடைக்கிறது.

இந்த பிரிமீயம் வகை XP100, poWer100, Speed100 ஆகிய பெட்ரோல் வகைகள் உயர் செயல்திறன் கொண்ட கார்கள் மற்றும் பைக்குகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றை சாதாரண பெட்ரோல் எஞ்சின் வாகனங்களிலும் பயன்படுத்தலாம். எனினும், அதிக ஆக்டேன் என்பதால் சாதாரண எஞ்சினில் கூடுதல் மைலேஜ் அல்லது செயல்திறன் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வாகனத்தின் உரிமையாளர் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆக்டேன் ரேட்டிங்கை முதலில் சரிபார்ப்பதே முக்கியம்.

உதாரணமாக, உங்கள் உரிமையாளர் கையேட்டில் 91 RON minimum என்று இருந்தால், 100 RON எரிபொருள் பயன்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக சரியானதாகவே இருக்கும். ஆனால் அந்த எஞ்சின் 100 RON தரத்திற்கு இணையாக பயன்படுத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்படவில்லை என்றால், நீங்கள் செலுத்தும் கூடுதல் பணத்துக்கு ஏற்ப பெர்ஃபார்மென்ஸ் மற்றும் மைலேஜ் கிடைக்காமல் போகலாம்.

அதேபோல், 100 RON என்பது எத்தனால் கலப்பு என்பதிலிருந்து மாறுபட்ட வேறு விஷயம். இந்த XP100/poWer100/Speed100 எக்ஸ்பி100, பவர்100, ஸ்பீடு 100 போன்றவை எத்தனால் கலப்பு இல்லாமல் இருப்பதால், தற்போது E20 குறித்து கவலைப்படும் சில வாகன உரிமையாளர்களுக்கு இவை மாற்று தேர்வாக இருக்கின்றன.

நிறுவனம் எரிபொருள் RON எத்தனால் உத்தேச விலை / லிட்டர்
IndianOil XP100 100 E0 ₹160–₹170
BPCL Speed 100 100 E0 ₹165–₹170
HPCL poWer100 100 E0 ₹180–₹190

* உத்தேச விலை. நகரம் மற்றும் பங்குக்கு ஏற்ப விலை மாறலாம்.

மேலும், சந்தையில் உள்ள சில XP95, poWer95 அல்லது வழக்கமான Speed போன்ற பிரிமீயம் வகை பெட்ரோலை எத்தனால் கலப்பு இல்லாத எரிபொருள் என்று நினைத்து வாங்கக்கூடாது. தற்போதைய E20 காலகட்டத்தில் பிரிமீயம் என்ற பெயர் இருப்பது மட்டும் எத்தனால் கலப்பு இல்லை என்பதற்கான குறியீடு இல்லை. எனவே, E20-க்கு மாற்றாக வழக்கமான குறைந்த விலை E0 அல்லது E10 பெட்ரோல் தற்போது முற்றிலுமாக விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுவிட்டது.

ஆனால், சாதாரண பெட்ரோல் லிட்டர் ரூ.108 முதல் ரூ.110 வரையிலான விலையில் கிடைக்கும் நிலையில், அதிக விலை கொடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு XP100, poWer100 மற்றும் Speed100 போன்ற எத்தனால் கலப்பு இல்லாத 100-octane ரேட்டிங் கொண்ட பெட்ரோல் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேநேரத்தில், இவை நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் கிடைக்காது என்பதையும் வாகன உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த 100-octane பிரிமீயம் பெட்ரோல் குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

Article Published On: Monday, August 10, 2026, 14:35 [IST]
English summary
Ethanol free petrol xp100 power100 speed100 price availability india
மேலும்... #petrol #diesel
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out