சுப்ரீம் கோர்ட் நீதிபதியிடமே ஆட்டையை போட பார்த்த கும்பல்! இப்படி கூட மோசடி நடக்குதா?

சுப்ரீம் கோர்ட் நீதிபதியிடமே அவர் வாகனம் அதிகவேகமாக சென்றதாக கூறி ஒரு கும்பல் பணம் பறிக்க முயன்றுள்ளது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மக்கள் மத்தியில் வாகனம் அதிவேகமாக சென்றதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி மோசடி நடக்கிறது. இதில் சிக்காமல் இருப்பது எப்படி? இதை எப்படி போலி என கண்டறிவது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் சதீஷ் சந்திரா, இவருக்கு சமீபத்தில் ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதில் அவரது வாகனம் வேகமாக பணம் செய்ததாவும் இதனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அபராதத்தை செலுத்த அதில் உள்ள லிங்கை உடனடியாக பயன்படுத்தும்படியும் அதில் கூறப்பட்டுள்ளது. இதை பார்த்த நீதிபதி அந்தலிங்கை கிளிக் செய்து பார்த்துள்ளார். இது நேரடியாக டிராஃபிக் அபராத செல்லான்களை செலுத்தும் அதிகாரப்பூர்வமான வெப்சைட் போலவே இருந்துள்ளது.

Fake Challan Scam

அந்த நேரத்தில் சற்று சுதாரித்த நீதிபதி தனது வாகனம் அதிக வேகத்தில் பயணிக்க வாய்ப்பில்லை என உணர்ந்து அந்த வெப்சைட்டை பார்த்த போது அது அரசு வெப்சைட் இல்லை. அதே போலவே தோற்றம் கொண்ட போலி வெப்சைட் என தெரியவந்தது. இதையடுத்து அவர் பணம் செலுத்தாமல் தவிர்த்துவிட்டார். இந்தியாவின் உயர்நீதிமன்ற நீதிபதியிடமே பண மோசடி செய்ய ஒரு கும்பலால் முடிகிறது என்றால் சாதாரண மக்கள் எளிதாக இதில் ஏமாந்து போக வாய்ப்புள்ளுது.

இந்த மோடி பெரிய மெட்ரோ நகரங்கள் முதல் சிறிய கிராமங்களிலும் நடக்கிறது. இது குறித்து பல பிரபலங்கள் கூட சமூகவலைத்தளங்களில் இது போன்ற மோசடிகள் குறித்து சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர். இப்படியாக உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது? போலியான வெப்சைட்டையும் உண்மையான வெப்சைட்டையும் எப்படி கண்டுபிடிப்பது என காணலாம்.

Fake Challan Scam

பொதுவாக Parivahan என்ற தளத்திலிருந்து தான் அபராத செல்லான்கள் வரும். ஆனால் இந்த போலி செல்லான்கள் வேறு தளத்தின் பெயரில் வரலாம். ஆனால் வெப்சைட்டை பார்க்கும் போது Parivahan தளத்தின் லுக்கிலேயே இருக்கும். அதனால் நேரடியாக வெப்சைட் பெயரை சரி பார்க்க வேண்டும். இது மட்டுமல்ல கடைசியில் .Gov.in என்ற பெயரில் இருக்கும் போலி வெப்சைட்களுக்கு இந்த பெயர் கிடைக்காது.

இதனால் உங்களுக்கு இப்படியான செய்திகள் வந்தால் நீங்கள் உடனடியாக சோதனை செய்து அது அரசு வெப்சைட் தான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள நம்பிக்கையான விபரம் தெரிந்த நபரிடம் கேட்டு தெரிந்து பின்னர் செலுத்தலாம். அபராதம் விதிக்கப்படும் போது அவசரம், உடனடியாக செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பிலிருந்து சொல்ல மாட்டார்கள். அதனால் இப்படியான வார்த்தைகள் இருந்தால் அதை கண்டு அஞ்ச வேண்டாம்.

Fake Challan Scam

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இது போன்ற பண மோசடி அதிகம் நடக்கிறது. இந்த மோசடிகளில் மக்கள் அதிகம் சிக்கி வருகின்றனர். இந்த மோசடி கும்பல்கள் வெளிநாட்டிலிருந்து செயல்படுகிறது. இதை தடுக்க அரசு தவறினால் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு நாட்டிற்கு ஏற்படும் என்பதில் நமக்கு எந்த வித ஐயம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, January 23, 2026, 12:45 [IST]
English summary
Fake challan scam whatsapp alert how to avoid
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X