எந்த காராக இருந்தாலும் இதுதான் அடிப்படை! ஷோரூமில் வாங்கும்போது டீலரிடம் கேட்டு தெரிஞ்சிக்கனும்!
சேசிஸ் (Chassis), எந்தவொரு வாகனத்திற்கும் அத்தியாவசியமான மற்றும் அடிப்படையான பாகம். வாகனத்திற்கு அடிப்பகுதியில் பொருத்தப்படுவதில் இருந்து சேசிஸின் தேவையை நீங்கள் அறியலாம். குறிப்பாக, கார்களில் சிறந்த தரத்திலான மற்றும் வடிவமைப்பிலான சேசிஸ் வழங்கப்படுவது அவசியமாகிறது. அவ்வாறான, சிறந்த தரமான, வடிவமைப்பிலான சேசிஸ் தான், லேடார்-ஆன்-ஃபிரேம் (Ladder-on-frame) சேசிஸ் ஆகும். இத்தகைய சேசிஸ் உடன் கிடைக்கும் ஐந்து சிறந்த எஸ்யூவி கார் மாடல்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
1. டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): இந்தியாவில் ஃபார்ச்சூனருக்கு இருக்கும் புகழை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியர்கள் பெரும்பாலானோர் விரும்பக்கூடிய காராக ஃபார்ச்சூனர் விளங்குகிறது. இதற்கு காரணம், அதில் பொருத்தப்படும் லேடார்-ஆன்-ஃபிரேம் சேசிஸ் என சொன்னால் அது மிகையில்லை.

இதன் மூலமாக, பழைய ஃபார்ச்சூனர் கார்களின் மறுவிற்பனை மதிப்பு சிறப்பாக உள்ளது. ஃபார்ச்சூனரில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த இரு என்ஜின்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த எஸ்யூவி கார் 4x2 மற்றும் 4x4 டிரைவ்-சிஸ்டம் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
2. மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N): மஹிந்திராவில் இருந்து நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவின் புதிய வெர்சனாக சில வருடங்களுக்கு முன்புதான் ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்டது. லேடார்-ஆன்-ஃபிரேம் சேசிஸ் வழங்கப்படுவதால், இந்த காரில் ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்வது எளிதாக உள்ளது.

2 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் ஸ்கார்பியோ-என் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு என்ஜின்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இவற்றுடன் ஸ்கார்பியோ-என் காரில் தன்னிச்சையாக செயல்படும் டேம்பிங் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
3. மஹிந்திரா தார் & தார் ராக்ஸ் (Mahindra Thar & Thar ROXX): இதில் தார் என்பது 3 கதவுகளையும், தார் ராக்ஸ் என்பது 5 கதவுகளையும் கொண்டதாகும். இந்திய மார்க்கெட்டில் பிரபலமான லேடார்-ஆன்-ஃபிரேம் சேசிஸில் உருவாக்கப்பட்ட எஸ்யூவி வாகனமான தார், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு தைரியமாக கொண்டு செல்லக்கூடியதாக உள்ளது.

2 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் மஹிந்திரா தார் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மஹிந்திரா வாகனத்தில் வழங்கப்படும் நீளமான டிராவல் கொண்ட சஸ்பென்ஷன் ஆனது கடுமையான ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.
4. ஃபோர்ஸ் குர்கா (Force Gurkha): தார் வாகனத்தை காட்டிலும் முழுக்க முழுக்க ஆஃப்-ரோடு பயணங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட வாகனத்தை தேடுபவர்களுக்கு குர்கா ஏற்றதாக இருக்கும். அந்த அளவிற்கு பல விதமான அட்வென்ச்சர் பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் குர்காவை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வடிமைக்கிறது.
5. எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor): எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான மெஜஸ்டரும் பாரம்பரியமான லேடார்-ஆன்-ஃபிரேம் சேசிஸில் உருவாக்கப்பட்டு இருப்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயமாகும். இந்தியாவில் புதிய டி+ பிரிவு எஸ்யூவி காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதனை மணல், பனி மற்றும் கரடுமுரடான பாறை என எங்கு வேண்டுமென்றாலும் கொண்டு செல்லலாம் என எம்ஜி மோட்டார் தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு சூழ்நிலையிலும் தாங்கக்கூடிய மற்றும் அதிக ஆயுட் காலத்தை கொண்ட சேசிஸ் ஆக லேடார்-ஆன்-ஃபிரேம் சேசிஸ் விளங்குகிறது. இதனை காட்டிலும் மாடர்ன் தரத்திலான சேசிஸ்களை உருவாக்க கார் கம்பெனிகள் ஆரம்பித்துவிட்டனர் என்றாலும், லேடார்-ஆன்-ஃபிரேம் சேசிஸின் நீடித்து உழைக்கும் தன்மை பலரால் பாராட்டப்படுகிறது. இதனால்தான், இந்த தொகுப்பில் எம்ஜி மெஜஸ்டரை தவிர்த்து மற்ற அனைத்து கார்களிலும் நீண்ட வருடங்களாக இத்தகைய சேசிஸ் வழங்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications









