சிஎம் விஜய் உடன் நடிச்ச பிறகு தமிழ் சினிமாவிற்கே முழுக்க போட்ட நடிகை! ஒரு காலத்துல எல்லாருக்கும் கனவு கன்னி!

இந்திய சந்தையில் முன்பெல்லாம் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் பெருகி விட்டன. குறிப்பாக பிரபலங்கள் பலரும் சொகுசு எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதில், ஜெனிலியா (Genelia) மிகவும் முக்கியமானவர்.

இவர் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின் மற்றும் வேலாயுதம் போன்ற தமிழ் திரைப்படங்களில் எல்லாம் நடித்தவர் ஆவார். ஆனால் தற்போது அவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில்லை. விஜய் உடன் இவர் நடித்த வேலாயுதம்தான், ஜெனிலியாவின் கடைசி தமிழ் படம் ஆகும். இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 15 ஆண்டுகள் கடந்து விட்டன.

Genelia Arrives In BMW iX

இதற்கு பிறகு மற்ற மொழி திரைப்படங்களில் ஜெனிலியா நடித்தாலும் கூட, தமிழில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்த சூழலில் ஜெனிலியா, அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கின் (Riteish Deshmukh) பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX) எலெக்ட்ரிக் காரை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்.

இந்த வரிசையில் மீண்டும் ஒரு முறை அவர் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டன்ட் பாலிவுட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் இருந்து இறங்கி, ஒரு கட்டிடத்திற்கு உள்ளே அவர் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

Genelia

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் மும்பையில் எடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஜெனிலியா பயன்படுத்திய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாங்கப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

இதுதான் இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். ஜெனிலியாவும், அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் விரும்புபவர்கள் போல் தெரிகிறது. ஏனெனில் இதற்கு முன்பாக டெஸ்லா மாடல் எக்ஸ் (Tesla Model X) எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் அவர்கள் வாங்கியிருந்தனர்.

இது ஜெனிலியாவால், ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு பரிசாக வழங்கப்பட்டது ஆகும். அந்த எலெக்ட்ரிக் கார் அமெரிக்காவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அவர்களிடம் உள்ள பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரானது தற்போதைய நிலையில் எக்ஸ்டிரைவ்50 (xDrive50) என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 14.9 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் க்ளாஸ் ரூஃப் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன. இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 635 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும்.

195 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 35 நிமிடங்களுக்கு உள்ளாகவே, 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அத்துடன் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனையும் இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை 1.40 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, கபில் தேவ் (Kapil Dev) போன்ற பிரபலங்களிடம் எல்லாம் இந்த எலெக்ட்ரிக் கார் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டெஸ்லா மாடல் எக்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் தவிர, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7-Series), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes-Benz S-Class), பென்ட்லீ ஃபிளையிங் ஸ்பர் (Bentley Flying Spur) மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) போன்ற கார்களும், ஜெனிலியா-ரித்தேஷ் தேஷ்முக் தம்பதியிடம் உள்ளன. இதன் மூலம் அவர்கள் மிகவும் தீவிரமான கார் காதலர்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

Article Published On: Monday, June 22, 2026, 16:52 [IST]
English summary
Genelia arrives in bmw ix electric suv viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out