காருக்கு உள்ளே குடும்பமே நடத்தலாம்! பெண் தோழிக்கு ஹர்திக் பாண்டியா வாங்கி கொடுத்திருக்கும் பிரம்மாண்டமான கார்!

ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் பிரபலமான கிரிக்கெட் வீரராக ஹர்திப் பாண்டியா உள்ளார். தற்சமயம் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி கேப்டனாக அணியை வழிநடத்தி வரும் இவர், ஐபிஎல் தொடருக்கு மத்தியில் பெண் தோழிக்கு விலையுயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்து ஆச்சிரியப்படுத்தி உள்ளார். அப்படி என்ன மாதிரியான காரை ஹர்திக் பாண்டியா பரிசளித்தார் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

விலையுயர்ந்த சொகுசு கார்களை அவ்வப்போது வாங்கும் கிரிக்கெட் (Cricket) வீரர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர் என்பது ஊரறிந்த விஷயம். திருமணமான பிறகு தனது மனைவிக்கும் சேர்த்து சொகுசு கார்களை வாங்கி குவித்தார். தற்போது தனது பெண் தோழி மஹேகா சர்மா (Mahieka Sharma)-க்கு மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் (Mercedes-Benz V-Class) என்கிற ஆடம்பர காரை பரிசளித்துள்ளார்.

cricketer hardik pandya mercedes-benz v-class car price

இதுதொடர்பான படங்கள் தான் தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகின்றன. ஏனெனில், வி-கிளாஸ் ஆனது அந்த அளவிற்கு அளவில் பெரியதான பிரம்மாண்டமான சொகுசு கார் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே தற்சமயம் ரூ.1.40 கோடியாக உள்ளது. ஆர்டிஓ (RTO) பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் (Insurance) எல்லாம் சேர்த்தால் ஆன்-ரோடு விலை (On-road Price) ரூ.1.75 கோடியை தாண்டி செல்லும்.

இந்தியாவில் டீசல் என்ஜின் மற்றும் மைல்ட்-ஹைபிரிட் (Mild-hybrid) என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் வி-கிளாஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த இரு ஆப்ஷன்களிலும் காரின் விலை ஒன்றே ஆகும். விற்பனையில் இந்த பிரம்மாண்டமான பென்ஸ் காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் (GLS) மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) ஆகியவை போட்டியாக உள்ளன.

cricketer hardik pandya mercedes-benz v-class car price

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வி-கிளாஸ் காரை 2026ஆம் ஆண்டை முன்னிட்டு சமீபத்தில்தான் மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதை பார்த்த பின்பே ஹர்திக் பாண்டியா இந்த காரை புக் செய்திருப்பார் என நினைக்கிறோம். வெளிநாடுகளில் குறுகிய வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) வெர்சனிலும் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் லாங் வீல்பேஸ் வெர்சனில் மட்டுமே வி-கிளாஸ் விற்பனை செய்யப்படுகிறது.

மொத்தம் 5.4 மீட்டர் நீளம் மற்றும் 1.9 மீட்டர் அகலத்தில் பரந்து விரிந்திருக்கும் இந்த காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் மட்டுமே 3.4 மீட்டர்கள் ஆகும். இந்தியாவில் மீண்டும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வி-கிளாஸ் காரை ஏஎம்ஜி லைன் (AMG Line)-இல் மெர்சிடிஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, ஏற்கனவே சொகுசு காராக விளங்கும் வி-கிளாஸை ஏஎம்ஜி லைன் மூலம் மேலும் மெருக்கூட்டி மெர்சிடிஸ் விற்பனை செய்து வருகிறது.

இதன்படி, இந்த காரில் மெர்சிடிஸின் ஸ்டார் லோகோவை கொண்ட முன்பக்க கிரில்லை சுற்றிலும் எல்இடி விளக்குகள் வழங்கப்படுகின்றன. மேலும், மல்டி-பீம் எல்இடி ஹெட்லைட்கள், ஸ்போர்டியான தோற்றத்திலான பம்பர்கள், 18 இன்ச்சில் இரு நிறங்களில் அலாய் சக்கரங்கள் மற்றும் இரு கதவுகளாக பின்பக்க பூட்-ஸ்பேஸுக்கான டோர் செட்-அப் உள்ளிட்டவை இந்த காரின் வெளிப்புற அம்சங்களில் அடங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் கார், படத்தில் பார்க்க தான் சிறியதாக உள்ளது; நேரில் பார்த்தீர்கள் என்றால் வேற லெவலில் இருக்கும். நம்மில் பலருக்கு இப்படியொரு கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கும் நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா இதனை பெண் தோழிக்கு பரிசாக வழங்கி ஆச்சிரியப்படுத்தி உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 31, 2026, 7:38 [IST]
English summary
Hardik pandya gifted mercedes benz v class luxury car to girl friend check all details here
மேலும்... #celebrity cars #ipl cricket #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+