ஐபிஎல்-க்கு மத்தியில் பரபரப்பான சாலையில் தோழி உடன் உலா வந்த பிரபல கிரிக்கெட் வீரர்! ஓட்டி வந்த கார் ரூ.12 கோடி
ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya), இந்திய கிரிக்கெட் (Cricket) அணியின் நட்சத்திர வீரர் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். நடைபெற்றுவரும் 2026 ஐபிஎல் (IPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) கேப்டனாக அணியை வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்ட்யா அதற்கு மத்தியில் தனது விலையுயர்ந்த கார்களிலும் அவ்வப்போது காட்சித்தந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது ரூ.12 கோடி மதிப்பிலான ஃபெராரி (Ferrari) காரில் மும்பை சாலைகளில் உலா வந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை வைத்திருப்பவரும், சமீப காலமாக அடிக்கடி சொகுசு கார்களை வாங்குபவருமாக ஹர்திக் பாண்ட்யா உள்ளார். லெக்ஸஸ் எல்.எம் (Lexus LM) உள்ளிட்ட விலையுயர்ந்த கார்களுக்கு சொந்தக்காரரான இவர் மிக சமீபத்தில் கடந்த மார்ச் மாத துவக்கத்தில்தான் புதியதாக ஃபெராரி 12சிலிண்ட்ரி (12Cilindri) காரை வாங்கினார்.

அதற்கடுத்த சில நாட்களிலேயே அதனுடன் சாலையில் காட்சித் தந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த ஃபெராரி காரில் மும்பை சாலைகளில் உலா வந்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதற்கிடையில், ஹர்திக் பாண்ட்யா தனது பெண் தோழிக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் (Mercedes-Benz V-Class) காரை சர்பிரைஸ் ஆக வாங்கிக் கொடுத்து ஆச்சிரியப்படுத்தி இருந்தார்.
முன்னதாக, இந்த காரில் கிரிக்கெட் வீரர் கிரென் பொல்லார்ட் (Kieron Pollard)-ஐ அமர வைத்து ஓட்டிய ஹர்திக் பாண்ட்யா தற்போது தனது தோழி மஹேகா சர்மா (Mahieka Sharma) உடன் காட்சி தந்துள்ளார். இதுதொடர்பாக 'சிஎஸ்12 விலாக்ஸ்' (CS12 Vlogs) என்கிற யூடியூப் சேனல் (Youtube Channel) மூலம் கிடைத்துள்ள படங்களில் ஃபெராரி 12சிலிண்ட்ரி காரினுள் அருகே மஹேகா சர்மா அமர்ந்திருக்க, ஹர்திக் பாண்ட்யா காரை ஓட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்த சமயத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் லோகோ பதிக்கப்பட்ட டீ-சர்ட்டை ஹர்திக் பாண்ட்யா அணிந்திருப்பதை படங்களில் காணலாம். டீ-சர்ட் மட்டுமின்றி, தனது இந்த விலையுயர்ந்த ஃபெராரி காரினுள் பக்கெட் ஸ்போர்ட்ஸ் இருக்கைகளையும் நீல நிறத்தில் ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்திருப்பதையும் இந்த படங்களில் பார்க்க முடிகிறது.
அதுவே வெளிப்புறத்தில் ஹர்திக் பாண்ட்யாவின் இந்த 12 கோடி ரூபாய் ஃபெராரி 12சிலிண்ட்ரி கார் பளபளக்கும் கருப்பு நிறத்தில் உள்ளது. இந்த ஃபெராரி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.8.5 லட்சத்தில் இருந்து துவங்கினாலும், ஆர்டிஓ (RTO) பதிவு, இன்ஸ்சூரன்ஸ் (Insurance), சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் ஆன்-ரோடு விலை (On-road Price) எப்படியிருந்தாலும் ரூ.12 கோடிக்கு வந்துவிடும்.
அதுமட்டுமின்றி, இத்தகைய கார்களை வாங்குபவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப சில கஸ்டமைசேஷன் (Customisation) பணிகளை மேற்கொள்வர். அதாவது, அதற்கும் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். இதனை காட்டிலும் விலைமிக்க புரோசாங்குவே (Purosangue) என்கிற காரையும் இந்தியாவில் ஃபெராரி விற்பனை செய்கிறது. 12சிலிண்ட்ரி காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது முன்பு விற்பனையில் இருந்த ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (812 Superfast) காருக்கு மாற்றாக கடந்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய 12சிலிண்ட்ரி காரில் முக்கியமான ஹைலைட் அதன் என்ஜின் ஆகும். ஃபெராரி பிராண்டின் ஐகானிக் 6.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் புதிய பரிணாம வளர்ச்சியில் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் சிஸ்டத்தில் எந்தவொரு டர்போசார்ஜரும் கிடையாது; எலெக்ட்ரிக் மோட்டார் சிஸ்டமும் கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 12 லட்ச ரூபாய் ஃபெராரி காரை, அறிமுகம் செய்யப்பட்ட 1 வருடத்திற்கு உள்ளாகவே வாங்கி உள்ளார் என்றால், ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது ஹர்திக் பாண்ட்யா எந்த அளவிற்கு ஆர்வமாக உள்ளார் என்பதை அறியலாம். பாராம்பரியமான ஃபெராரி என்ஜினை கொண்ட காராக 12சிலிண்ட்ரி விளங்குகிறது. இதில் இருந்து ஃபெராரியின் பழமையான என்ஜின் நுட்பத்தில் ஒரு காரை வாங்க கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா விரும்பியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








