அம்பானியின் ரோல்ஸ்-ராய்ஸை பார்த்ததும் குழந்தை போல் அமர்ந்து பார்த்த கிரிக்கெட் வீரர்! வீடியோ வைரல்
ஹர்திக் பாண்ட்யா சில மாதங்களுக்கு முன் ஃபெராரி 12சிலிண்ட்ரி காரை வாங்கியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில் தற்போது அந்த ஃபெராரி காரில் தனது காதலி உடன் பொது வெளியில் காட்சித் தந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா இவ்வாறு தனது ஃபெராரி காரை வெளியே கொண்டுவந்ததற்கும் அம்பானி குடும்பத்திற்கும் சம்பந்தம் உள்ளது. அது என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிவரும் ஹர்திக் பாண்ட்யா சில் பண்ணுவதற்காக அடிக்கடி வெளியே வருவார் என்பதை பார்த்திருக்கிறோம். மும்பை சாலைகளில் அவ்வப்போது காட்சித்தரும் பிரபலங்களுள் இவரும் ஒருவர் ஆவார். அவ்வாறு வெளியே வரும் சமயங்களில் ஹர்த்திக்கின் விலையுயர்ந்த சொகுசு கார்களையும் பார்க்க முடியும்.

இதற்காகவே புது, புது சொகுசு கார்களை தொடர்ச்சியாக வாங்கி குவித்து வருகிறார். அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் ஹர்திக் பாண்ட்யா வாங்கிய சொகுசு கார், ஃபெராரி 12சிலிண்ட்ரி ஆகும். ஐபிஎல் துவங்கிய சமயத்தில் இந்த காரில் சென்றுதான் பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்தார். அதன் பின்பும் இந்த புதிய ஃபெராரி காரில் சிலமுறை ஹர்திக் பாண்ட்யா பொது வெளியில் அடையாளம் காணப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் தற்போது, இரவு நேரத்தில் காதலி மஹேகா சர்மா உடன் ஃபெராரி 12சிலிண்ட்ரி காரில் ஹர்திக் பாண்ட்யா வந்து இறங்கியுள்ளார். காரை ஓட்டி வந்ததே ஹர்திக் பாண்ட்யா என்பதுபோல் தான் தெரிகிறது. இவர்கள் வந்த இடம் ஆனது மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்பான கட்டிட வளாகம் ஆகும். அங்கு ஆனந்த் அம்பானியின் ரோல்ஸ்-ராய்ஸ் காரும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் பார்க் செய்யப்பட்டு இருந்தது.

அதாவது, ஏற்கனவே ஆனந்த் அம்பானி வந்துவிட்டார். தனது ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். ஃபெராரி 12சிலிண்ட்ரி காரில் இருந்து வெளியே வந்த ஹர்திக் பாண்ட்யா நேராக ஆனந்த் அம்பானியின் கல்லீனன் காரை நோக்கி சென்றார். பின்னர், காரின் கதவை திறந்து பின் இருக்கையில் அமர்ந்து பார்த்துள்ளார்.
இது எல்லாம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு நடப்பதுபோல் இருந்தது. முகேஷ் அம்பானி குடும்பத்திடம் கிட்டத்தட்ட 10 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. இதில் கல்லீனன் மாடல்கள் மட்டும் 3இல் இருந்து 4 இருக்கும். அவற்றில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி பயன்படுத்தும் கல்லீனன் காரின் விலை சுமார் ரூ.12 கோடியில் இருந்து ரூ.14 கோடி வரையில் இருக்கும்.
ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஃபெராரி 12சிலிண்ட்ரி காரின் விலை கூட ரூ.8.5 கோடி மட்டுமே ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை தான் ஆர்டிஓ பதிவு, கஸ்டமைசேஷன் உள்ளிட்டவற்றை எல்லாம் சேர்த்தால் ரூ.10 கோடி அளவிற்கு வரும். ஹர்திக் பாண்ட்யா நீரோ டேடோனா என்கிற கிரே நிறத்தில் 12சிலிண்ட்ரி காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.
வாங்கிய உடனே காரின் நிறத்தை மாற்றிவிடுவது சிலரது ஸ்டைல். ஆனால், ஹர்திக் பாண்ட்யாவின் இந்த புதிய ஃபெராரி கார் இன்னமும் அதே நீரோ டேடோனா நிறத்தில் தான் உள்ளது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சம் அதன் 12 சிலிண்டர்களை கொண்ட வி12 என்ஜின் ஆகும். இதன் காரணமாகவே காரின் பெயர் 12சிலிண்ட்ரி என சூட்டப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எங்களுக்கு தெரிந்தவரையில், அநேகமாக ஹர்திக் பாண்ட்யா இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை வாங்க போகிறார் என நினைக்கிறோம். ஏனெனில், என்ன தான் ஆனந்த் அம்பானி நெருக்கமாக இருந்தாலும் அவர் இல்லாத சமயத்தில் அவரது காரை ஆராய்ந்து பார்ப்பதற்கு இதைவிட்டால் வேறு காரணம் இருக்காது. இதேபோன்றதான கல்லீனன் காரை ஹர்திக் பாண்ட்யா வாங்கலாம் அல்லது ஆனந்த் அம்பானியின் இதே கல்லீனன் காரை அவர் வாங்கினால் கூட ஆச்சிரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications