நெருப்பு சும்மா தெறிக்குதே! எக்ஸாட் வழியாக வந்த அதிசயம்! எப்படி நடந்துச்சு தெரியுமா?

பொதுவாக வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்யும் பழக்கம் பலர் மத்தியில் இருக்கிறது. இது சட்ட ரீதியாக தவறான விஷயம் என்றாலும் பலர் அதையும் மீறி வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து பொதுசாலைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் எல்லாம் ரேஸ் டிராக்கில் பயன்படுத்த அனுமதி இருக்கிறது. ஆனால் பொது சாலைகளில் அதை பயன்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட சில மாடிஃபிகேஷனை செய்யலாமே தவிர பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விதமான மாடிஃபிகேஷனும் செய்யக்கூடாது என மோட்டார் வாகன சட்டம் இருக்கிறது.

அதையும் மீறி தனது ஹோண்டா சிட்டி காரை மாடிஃபிகேஷன் செய்து ஒருவர் ரூபாய் 1.1 லட்சம் அபராதம் பெற்றுள்ளார் என்பது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பெங்களூரு நகர போலீசார் தங்கள் அதிகாரப்பூர்வமான எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் முதல் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் சாலையின் ஓரமாக பார்க் செய்யப்பட்டுள்ளது. இது முழுமையாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

Honda City Flames Viral Video

இந்த காரின் பாடி கலர் தனித்துவமான கலராகவும் தனியான கிராபிக்ஸ் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் பெரிய விங் பொருத்தப்பட்டுள்ளது. தனித்துவமான அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. முழுமையாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ள ஜன்னல் கண்ணாடிகள் இருக்கிறது. இது அனைத்துமே சட்ட ரீதியாக தவறான மாடிஃபிகேஷன் தான் இதில் எந்த மாடிஃபிகேஷனுக்கும் அனுமதி கிடையாது. இதையெல்லாம் தாண்டி மற்றொரு விஷயமும் இந்த வீடியோவில் கவனிக்க முடிந்தது.

இந்த வீடியோவில் காரில் ரேஸ் செய்யும் போது எக்ஸாஸ்ட் பகுதியில் இருந்து நெருப்பு வெளியாகும் வகையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல் இதிலிருந்து வெளியே வரும் சத்தமும் மிக அதிகமாக இருந்தது. அருகில் இருந்தவர்கள் காதை மூடும் அளவுக்கு மிக அதிக சத்தத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த காரின் இன்ஜின் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்தது. இது பெங்களூருவில் உள்ள பொது சாலையில் பயன்படுத்தப்பட்ட நிலையில் போலீஸார். இந்த வாகனத்திற்கு அபராதம் விதித்துள்ளார்கள். இது மட்டுமல்லாமல் இந்த வாகனத்தை பறிமுதலும் செய்துள்ளார்கள் இந்த வாகனத்தை அவர்கள் பறிமுதல் செய்வதற்காக சான்றாக இந்த வாகனத்தின் அருகே போலீசார் ஒருவனுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். மேலும் இந்த வாகனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார்கள். இந்த வாகனத்திற்காக விதிக்கப்பட்ட அபராத தொகையை அதன் உரிமையாளர் செலுத்தி விட்டாரா என்ற விபரங்களை இதுவரை போலீசார் வெளியிடவில்லை.

இந்த வீடியோவை பார்த்த பலருக்கு இந்த வாகனத்தின் பின்னால் உள்ள எக்ஸாஸ்ட் பகுதியில் இருந்து எப்படி புகை வந்தது என்ற கேள்வி இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் இஞ்சின் பகுதியில் செய்யப்பட்ட மாடிஃபிகேஷன் தான் இன்ஜின் பகுதியில் காம்பஷன் சேம்பரில் வழக்கத்தைவிட அதிக அளவிலான எரிபொருள் உள்ளே செல்லும் வகையில் வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்திருப்பார்கள். இதில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் தான் இன்ஜினிற்குள் எரிய இடம் இருக்கும் மற்ற எரிபொருள் எக்ஸாஸ்ட் பகுதி வழியாக மிக வேகமாக வெளியே வரும் அப்பொழுது வெளியே வரும் எக்ஸாஸ்ட் பகுதி பகுதியில் இருக்கும் வெப்பம் மற்றும் அதிக பிரசங்க காரணமாக அந்த எரிபொருளும் எரியும் அந்த எரிபொருள் எரிந்து நேரடியாக எக்ஸாஸ்ட் பகுதி வழியாக வெளியே தெறிக்கும். இதுதான் இப்படியாக எக்ஸாஸ்ட் பகுதி வழியாக நெருப்பு வெளியே வருவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது நிச்சயம் சட்டவிரோதமான செயலாகும். இதனால் இதை மாதிரி யாரும் மாடிஃபிகேஷன் செய்து வாகனங்களை பயன்படுத்த வேண்டாம். இப்படியாக மாடிஃபிகேஷன் செய்வது சட்ட விரோதம். இதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். தொடர்ந்து இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்கள் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் இது விழிப்புணர்வு காண பதிவு மட்டுமே.

More from DriveSpark

Article Published On: Friday, January 16, 2026, 21:45 [IST]
English summary
Honda city flames viral video bengaluru police seize car fine
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+