முன்னாடியே வந்த எச்சரிக்கை! விமான விபத்து நடந்தது இப்படி தான்!
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலையில் பிரைவேட் ஜெட் விமானத்தில் பயணம் செய்யும்போது விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக பலியானார். அவருடன் சேர்ந்து 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இந்த விமான விபத்து எப்படி நடந்தது? எந்த விமானத்தில் அவர் பயணித்தார் என்பது குறித்து பலர் தேடி வருகிறார்கள் இது எடுத்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் துணை முதல்வராக இருப்பவர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் இன்று அதிகாலை தேர்தல் பிரச்சாரத்திற்காக மும்பையில் இருந்து பாராமுட்டி என்ற பகுதிக்கு விமானம் மூலம் பயணம் செய்துள்ளார். அப்பகுதியில் விமான தரையிறங்கும் போது எதிர்பாராத விபத்தில் கூடியது இதில் விமானம் வெடித்து சிதறியது.இதனால் விமானத்திற்குள் இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளார்கள். துணை முதல்வர் அஜித் பவார் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உளளனர்.

இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட வரும் நிலையில் இந்த சம்பவத்தில் துணை முதல்வர் அஜித் பவார் எந்த விமானத்தில் பயணித்தார் என்ற தேடல் பலர் மத்தியில் இருக்கிறது. இது குறித்து நாம் விசாரித்து பார்த்தபோது விஎஸ்ஆர் ஏர்கிராஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லியர் ஜெட் 45 என்ற விமானத்தில் தான் அவர் பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இது ஒரு பிசினஸ் ரக விமானம் ஆகும் இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 8 பேர் பயணம் செய்ய வசதிகள் இருக்கும். இந்த விமானத்திற்கு உள்ளே சொகுசு வசதிகள் அதிகமாக இருக்கும். பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் பெரும் பணக்காரர்கள் குறுகிய தூரம் மற்றும் சற்று தொலைவு உள்ள ஊர்களுக்கு செல்ல இதை பயன்படுத்துவார்கள்.
இந்த விமானத்தால் 2000 முதல் 2245 நாட்டிகள் மைல் வரை பயணிக்க முடியும். இந்த விமானத்தில் ஹனிவல் டி எஃப் இ 731 என்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 51 ஆயிரம் அடி உயரம் பறக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் தயாரிப்பை அந்நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு நிறுத்திவிட்டது.
இந்த விமானம் 47 அடி நீளமும், 9752 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை இயக்கி வரும் விஎஸ்ஆர் என்ற நிறுவனமும் இந்தியாவில் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது இது விமானங்கள் வாடகைக்கு விடுவது ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடுவது விமான ஆம்புலன்ஸ் சேவை நடத்துவது விமானங்களை லீஸ் அடிப்படையில் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது இந்தியாவிலுள்ள முதன்மையான தனியார் விமான சேவையை வழங்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் இருக்கிறது.
விபத்து நடந்தது எப்படி?
இன்று காலை சும்மா எட்டு பத்து மணிக்கு மும்பை விமான நிலையத்திலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக இப்பவா தனது உதவியாளர்களுடன் இந்த தனியார் விமானத்தில் பெறப்பட்டுள்ளார் விமானம் டேக் ஆஃப் ஆகிய சில நிமிடங்களில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விட்டது சுமார் 8 48 மணிக்கு பாரா முட்டி விமான நிலைய ரன்வையில் இந்த விமானம் தரையிறங்க சிக்னல் கிடைத்தது இதை எடுத்து விமானி விமானத்தை தரையிறக்கினார். அப்பொழுது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது.
இதனால் விமானம் தரையிறங்கியதும் வெடித்து சிதறியது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் விமானம் இரண்டு மூன்று முறை வெடித்ததாக கூறுகின்றனர் இதனால் விமானம் சுக்கு நூறாக உடைந்து போனது விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் விபத்தில் சிக்கிய இதே ரக விமானம் கடை சில மாதங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது அந்த விபத்திலும் தரையிறங்கும் போது தான் விபத்து ஏற்பட்டு விமானம் தீ பிடித்தது ஆனால் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு விமானத்திற்குள் இருந்த பயணிகள் அனைவரையும் உயிருடன் மீட்டனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விமானம் விபத்துக்குள்ளான உண்மையான காரணம் தெரியவில்லை இது விசாரணைக்கு பிறகு தான் முழுமையாக தெரியவரும் இந்நிலையில் இதய ரக விமானம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க தொடர்ந்து விமான கண்காணிப்பு அவசியமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








