ரஜினி, அஜீத் படத்துல எல்லாம் நடிச்ச நடிகையா இவங்க! ரொம்ப வருஷம் ஆனதால அடையாளமே தெரியல!
இந்தியாவில் ஒரு சில நடிகைகள் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடிக்கின்றனர். இதில், ஹூமா குரேஷி (Huma Qureshi) மிகவும் முக்கியமானவர். இவர் ஹிந்தி, மலையாளம் மற்றும் தமிழ் என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் காலா மற்றும் அஜீத்தின் வலிமை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹிமா குரேஷி நடித்துள்ளார்.
இந்த சூழலில், ஹிமா குரேஷியின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. Viral Bhayani இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், ஹிமா குரேஷி தனது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) காரில், மும்பை விமான நிலையத்திற்கு வந்ததை நம்மால் பார்க்க முடிகிறது.

ஹிமா குரேஷி இந்த காரை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கினார். இது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் 400டி 4மேட்டிக் வேரியண்ட் (Variant) ஆகும். சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை ஒப்சிடியன் பிளாக் நிறத்தில் ஹிமா குரேஷி வாங்கியுள்ளார்.
ஹிமா குரேஷியின் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் (Diesel Engine) பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 330 பிஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9ஜி ட்ரானிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்ட ஒரு கார் ஆகும். சொகுசுடன் செயல்திறனும் மிக்க இந்த கார், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 6.3 வினாடிகளிலேயே எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 238 கிலோ மீட்டர்களாக இருக்கிறது.
மிகவும் விலை உயர்ந்த இந்த காரில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 5 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 9 ஏர்பேக்குகள், ஆஃப் ரோடு ஏபிஎஸ், ப்ளைண்ட் ஸ்பாட் அஸிஸ்ட், ஆக்டிவ் பிரேக் அஸிஸ்ட், ஹில் டெசன்ட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் மிக முக்கியமான அம்சங்களாக உள்ளன.
ஹிமா குரேஷி இந்த காரை வாங்கிய சமயத்தில், அதன் விலை 1.19 கோடி ரூபாயாக இருந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்தியாவில் ஹிமா குரேஷி மட்டுமல்லாது, கேஜிஎஃப் திரைப்பட இயக்குனர் பிரஷாந்த் நீல் மற்றும் கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா போன்ற பிரபலங்களிடமும், மெர்சிடிஸ் பென்ஸி ஜிஎல்எஸ் கார் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆடி க்யூ7 (Audi Q7), பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) போன்ற கார்களுக்கு எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications