ஜனநாயகனை விட இங்க தான் ஒருநாள் வசூல் அதிகம்! இத்தனை கோடி வசூலாகுதா?
இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு வசூலான சுங்கசாவடி கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுங்கசாவடி வசூல் 3 மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்தள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கடந்த 2015-16ம் நிதியாண்டில் மொத்தம் 48.66 கோடி ரூபாய் ஒரு நாளுக்க சராசரியாக இந்தியாவில் உள்ள அத்தனை சுங்கசாவடிகளிலும் சேர்த்து வசூலாகும். ஆனால் தற்போது நடப்பு நிதியாண்டான 2025-26ம் நிதியாண்டிற்கான தினசரி வசூல் தற்போது ரூ183.07 கோடி வசூலாகி வருகிறது. இந்த தகவலை நியூஸ் 18 தளம் வெளியிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மொத்தம் ரூ50,345.10 கோடி வசூலாகியுள்ளது. இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிதின்கட்கரி ராஜ்யசபாவில் தெரதிவித்துள்ளார். இதுவே கடந்த 2015-16ம் நிதியாண்டில் மொத்தம் 17,759.28 கோடி வசூலாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020-21ம் நிதியாண்டில் தான் சுங்கசாவடி வருமானம் கணிசமாக கூடியது. அதன் பிறகு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் தான் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டு முழுவதுமாக ஃபாஸ்ட் டேக் முறையில் வசூல்கள் ஆரம்பித்தது. கடந்த 2021 பிப்ரவரி மாதம் முதல் அனைத்து லேன்களையும் ஃபாஸ்ட்டேக் லேன்களா மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது.

தற்போது இந்தியாவில் ஃபாஸ்ட்டேக் கார்டில் பணம் கழிக்க தற்போது சுங்கசாவடிகளில் வாகனங்கள் நிற்கவேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் எதிர்காலங்களில் இப்படி நிற்காமல் வாகனங்கள் சென்றாலே அதில் நம்பர் பிளேட்டை கேமரா மூலம் கண்காணித்து குறிப்பிட்ட வாகனத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.இதை தற்போது சோதனை கட்டமாக செய்ய துவங்கிவிட்டனர். விரைவில் இந்தியா முழவதும் அமலுக்கு வரும். இதனால் தேவையில்லாமல் வாகனத்தை சுங்கசாவடிகளில் நிறுத்துவதை தடுக்க முடியும். இதன்மூலம் சுங்கசாவடியில் செலவுகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-22ம் நிதியாண்டில் மொத்தம் ரூ33,928 கோடி வசூல், 2022-23ம் நிதியாண்டில் ரூ55,882 கோடி வசூல், 2024-25ம் நிதியாண்டில் ரூ61,408 கோடி வசூல் என வசூல் நடந்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வசூலை ஒப்பிடும் போது தற்போது 3 மடங்கு வசூல் அதிகமாகியுள்ளது. கொரோனா பரவல் இருந்த காலமாக 2020-21ம் நிதியாண்டில் ஒரு நாளுக்கு ரூ76.51 கோடி தான் சராசரி வசூலாக உள்ளது.
தற்போது இந்தியாவில் ஃபாஸ்ட்டேக் கார்டில் பணம் கழிக்க தற்போது சுங்கசாவடிகளில் வாகனங்கள் நிற்கவேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் எதிர்காலங்களில் இப்படி நிற்காமல் வாகனங்கள் சென்றாலே அதில் நம்பர் பிளேட்டை கேமரா மூலம் கண்காணித்து குறிப்பிட்ட வாகனத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதை தற்போது சோதனை கட்டமாக செய்ய துவங்கிவிட்டனர். விரைவில் இந்தியா முழவதும் அமலுக்கு வரும். இதனால் தேவையில்லாமல் வாகனத்தை சுங்கசாவடிகளில் நிறுத்துவதை தடுக்க முடியும். இதன்மூலம் சுங்கசாவடியில் செலவுகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வசூல் மிகப்பெரிய அளவில் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








