இந்த ஐபிஎல்ல கொல்கத்தா ஜெயிக்கணும்னுதான் மொத்த இந்தியாவும் சாமி கும்பிட போகுது... காரணம் என்னனு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் (IPL) கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28) கோலாகலமாக தொடங்குகிறது. பெங்களூர் (Bangalore) சின்னச்சாமி மைதானத்தில் (Chinnaswamy Stadium) நடைபெறும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB - Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH - SunRisers Hyderabad) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு முன்னணி நிறுவனங்களும், ஐபிஎல் அணிகள் உடன் கூட்டணி அமைத்துள்ளன. இதன்படி ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் துணை நிறுவனமான விடா (Vida), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR - Kolkata Knight Riders) அணியுடன் கூட்டணி அமைத்துள்ளன.

KKR Players

விடா என்பது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். விடா பிராண்டின் கீழ்தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் டூவீலர்களை (Electric Two-wheelers) விற்பனை செய்து வருகிறது. சரி, விடா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான கூட்டணி எதற்காக? என நீங்கள் கேட்பது புரிகிறது.

விடா நிறுவனம் 6 ஃபார் 6 (6 For 6) என்ற புதிய திட்டத்திற்காகவே இந்த கூட்டணியை அமைத்துள்ளது. அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸிற்கும், ஒரு 6 kW ஃபாஸ்ட் சார்ஜரை விடா நிறுவனம் இந்தியாவில் அமைக்கவுள்ளது.

Vida EV

உதாரணத்திற்கு இந்த தொடர் முழுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் 200 சிக்ஸர்களை விளாசினால், விடா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 200 என்ற எண்ணிக்கையில் 6 kW ஃபாஸ்ட் சார்ஜர்களை இந்தியாவில் அமைக்கும். இதன் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்தியாவில் ஃபாஸ்ட் சார்ஜர்களுக்கான பற்றாக்குறை காரணமாகவே, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பலரும் தயங்கி கொண்டுள்ளனர். எனவே ஃபாஸ்ட் சார்ஜர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விடா போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களும், மத்திய மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாகவே விடா நிறுவனம் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்து 6 ஃபார் 6 திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் ஃபாஸ்ட் சார்ஜர்களின் எண்ணிக்கை உயரும் என்பதுடன், இந்திய சந்தையில் விடா நிறுவனத்தின் தயாரிப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகவும் செய்யும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விடா நிறுவனத்தின் நடவடிக்கையால், இந்தியாவில் ஃபாஸ்ட் சார்ஜர்களின் எண்ணிக்கை உயரும். எனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் நிறைய சிக்ஸர்களை விளாச வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்க போகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை!!

ஆனால் இத்தகைய திட்டங்கள் இந்தியாவிற்கு புதிது அல்ல. இதற்கு முன்பாக கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் மற்றும் அணிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மரம் நடுதல் மற்றும் கிரிக்கெட் கிட்களை வழங்குதல் போன்ற பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 28, 2026, 17:32 [IST]
English summary
Ipl 2026 hero vida to install a 6 kw fast charger for every 6 hit by kolkata knight riders
மேலும்... #hero motocorp #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+