வாடகை காரில் வந்து இறங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்! இந்தியாவிற்காக பல கோப்பைகளை வென்று கொடுத்தவராச்சே!
இந்தியாவின் ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரிட் பும்ரா (Jasprit Bumrah). ஆனால் சமீபத்தில் முடிவடைந்த 2026 ஐபிஎல் (2026 IPL) தொடர் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்க கூடிய ஜஸ்பிரிட் பும்ரா, இம்முறை விக்கெட் எடுக்கவே திணறினார்.
2026 ஐபிஎல் சீசனில் மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி வெறும் 4 விக்கெட்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. ஐபிஎல் மட்டுமல்லாது, ஐஸ்பிரிட் பும்ராவின் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே இது மிகவும் மோசமான செயல்பாடுகளில் ஒன்றாகும். இருப்பினும் கூடிய விரைவில் அவர் மீண்டும் சிறப்பாக விளையாட தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், ஐஸ்பிரிட் பும்ராவின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டன்ட் பாலிவுட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், ஐஸ்பிரிட் பும்ரா தனது குடும்பத்துடன் விமான நிலையம் ஒன்றுக்கு, காரில் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது மும்பை விமான நிலையம் ஆகும். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயமே ஜஸ்பிரிட் பும்ரா தனது குடும்பத்துடன் வந்த கார்தான். அது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) ஆகும். ஆனால் இது ஐஸ்பிரிடம் பும்ராவின் கார் கிடையாது. வாடகை கார் ஆகும்.

நம்பர் பிளேட்டில் மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு நிற எண்கள் மற்றும் எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பதன் மூலமாகவே இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஐஸ்பிரிட் பும்ராவிடம் ஏராளமான சொகுசு கார்கள் (Luxury Cars) உள்ளன. உண்மையிலேயே மற்ற பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களை போலவே, அவரது கார் கலெக்ஸனும் (Car Collection) மிகவும் பெரியது.
மெர்சிடிஸ் மேபெக் எஸ்560 (Mercedes Maybach S560), நிஸான் ஜிடி-ஆர் (Nissan GT-R) மற்றும் ரேஞ்ச் ரோவர் வெளார் (Range Rover Velar) என மிகவும் விலை உயர்ந்த ஏராளமான கார்களை ஐஸ்பிரிட் பும்ரா வைத்துள்ளார். இருப்பினும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற மிகவும் எளிமையான ஒரு காரில் அவர் தனது குடும்பத்துடன் விமான நிலையத்திற்கு வந்தது கவனம் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஐஸ்பிரிட் பும்ரா போன்ற மனிதர்களுக்கு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மிகவும் எளிமையானதாக இருந்தாலும் கூட, மிகவும் சௌகரியமானது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இந்தியாவில் பிரபலமாக மாறியதற்கு காரணமே, அது வழங்கும் சௌகரியமான பயணம்தான்.
ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இன்னும் நீண்ட நாட்களுக்கு நம்முடன் இருக்க போவதில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம் ஆகும். ஆம், டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனையை வரும் மார்ச் மாதத்துடன் (2027 மார்ச்) நிறுத்தி விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் தற்போதைய நிலையில் டீசல் இன்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19.72 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 26.77 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டாலும் கூட, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) கார் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications