உச்சகட்ட பாதுகாப்புடன் 3 கோடி ரூபா காரில் சென்ற நடிகை! ஆட்சியே அவங்க கண்ட்ரோல்லதான் இருக்கு!
இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகைகள் பலர், மிகவும் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில், மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS 600) மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை இந்தியாவை சேர்ந்த நடிகைகள் பலரும் வைத்துள்ளனர்.
இதில், டாப்ஸி பன்னு (Taapsee Pannu) குறிப்பிடத்தக்கவர் ஆவார். அத்துடன் மற்றொரு பிரபல நடிகையான கங்கனா ரனாவத்திடமும் (Kangana Ranaut) மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 கார் உள்ளது. இந்த காரில் அவர் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Viral Bhayani இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், கங்கனா ரனாவத் உச்சகட்ட பாதுகாப்புடன், ஒரு கட்டிடத்தின் உள்ளே இருந்து வெளியே வருதை நம்மால் பார்க்க முடிகிறது. அனேகமாக அது விமான நிலையமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதன் பின் அவர் தனது மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 காரில் ஏறி புறப்படுவதை நாம் பார்க்கலாம்.
கங்கனா ரனாவத் நடிகை மட்டுமல்ல. இந்தியாவை ஆளும் பாஜக (BJP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (MP) அவர் உள்ளார். அவரிடம் உள்ள மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 காரில், 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 557 ஹெச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த இந்த கார், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் எட்டி விடும். கார்பிளாக்இந்தியா தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி பார்த்தால், இந்த காரின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 தவிர, இன்னும் ஏராளமான கார்களையும் கங்கனா ரனாவத் வைத்துள்ளார்.
அத்துடன் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) மற்றும் ரேஞ்ச் ரோவர் (Range Rover) போன்ற கார்களும், கங்கனா ரனாவத்திடம் உள்ளன. அத்துடன் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புடைய மெர்சிடிஸ்-மேபெக் எஸ் 680 லிமோசின் (Mercedes-Maybach S 680 Limousine) கார் ஒன்றையும் கங்கனா ரனாவத் வாங்கியிருந்தார். ஆனால் அந்த காரை அவர் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் பயணம் செய்த மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 கார், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், திரையுலக நடிகைகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நடிகைகள் தவிர இன்னும் ஏராளமான நடிகர்களும் இந்த காரை வைத்துள்ளனர்.
இதில், பாலிவுட் நடிகர்கள் (Ranveer Singh) மற்றும் ஷாகித் கபூர் (Shahid Kapoor), தெலுங்கு நடிகர் ராம் சரண் (Ram Charan) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இது சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவையாக இருப்பதால்தான், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications