பிக்பாஸில் பேசிய 'அந்த' ஒரு வார்த்தையால் மாறி போன வாழ்க்கை! முதல் காரை வாங்க 5 வருடமாக போராடிய நடிகை!
பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர்களுள் கன்னட நடிகையான சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா ஒருவர் ஆவார். கன்னட பிக்பாஸின் முதல் சீசனிலேயே பங்கேற்ற இவர் தற்போது புதியதாக கியா செல்டோஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை ஊர் உலகத்திற்கு தெரிவிக்கும் விதமாக கார் டெலிவிரியின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
ஹூண்டாயை போன்று தென்கொரிய கார் நிறுவனமான கியா 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைந்தது. நுழையும்போதே ஆந்திராவில் கார் உற்பத்தி தொழிற்சாலை உடன் நுழைந்த கியா நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக செல்டோஸ் காரை 2019ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்தது. அதன்பின் பல்வேறு அப்கிரேட்களை பெற்றுள்ள செல்டோஸ் இந்தியாவில் கியா பிராண்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்படிப்பட்ட கியா செல்டோஸ் காரை தான் லேட்டஸ்ட் அவதாரத்தில் கன்னட நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா வாங்கியுள்ளார். இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என கூறினாலும், அதற்கு முன்பாகவே டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கன்னட மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று இருந்தார்.
அதன் மூலமாகவே கன்னட பிக்பாஸின் முதல் சீசனில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு சோனு ஸ்ரீனிவாஸ் கவுடாக்கு கிடைத்தது. இருப்பினும், பிக்பாஸ் வீட்டில் பேசிய சில வார்த்தைகள் இவரை போலீஸ் புகார் வரையில் கொண்டுச் சென்றது. இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின் எதிர்பார்த்ததை போலவே இவரை தேடி சில சினிமா வாய்ப்புகள் வந்தன.

சில கன்னட இசை ஆல்பங்களில் நடித்த சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா, சில குறும்படங்களிலும் நடித்தார். இருப்பினும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியது மற்றும் அதனால் பதிவான போலீஸ் புகார் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து இவரது சினிமா வாழ்க்கையை நசமாக்கிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் மனம் தளராத நடிகை சோனு சினிமா துறையில் தனது கடின உழைப்பை தொடர்ந்தார்.
அதன் பலனாக தற்போது பிராண்ட்-நியூ கியா செல்டோஸ் காரை வாங்கியுள்ளார். "5 வருட கனவு நினைவாகியது" என்கிற கேப்ஷன் உடன் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு அவரது மனகுமுறலை வெளிக்காட்டுகிறது. குடும்பத்துடன் கியா ஷோரூமுக்கு சென்று புத்தம் புதிய செல்டோஸ் காரை நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா டெலிவிரி பெறும் காட்சிகள் அவர் வெளியிட்டுள்ள படங்களில் இடம்பெற்றுள்ளன.
கியா செல்டோஸ் ஆனது இந்தியாவின் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுள் ஒன்றாகும். கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி காரான செல்டோஸ் ஸ்போர்டியான தோற்றத்தில், பிரீமியம் தரத்திலான அம்சங்கள் உடன் கேபினை கொண்டுள்ளது. இத்தகைய காரை பிரவுன் நிறத்தில் நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா வாங்கியுள்ளார். செல்டோஸின் முன்பக்கத்தில் புலி மூக்கு டிசைனிலான க்ரில், LED ஹெட்லைட்கள் மற்றும் பின்பக்கத்தில் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கியா செல்டோஸ் விற்பனை செய்யப்படுகிறது. அவையாவன, 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் என்பன ஆகும். இண்டெலிஜண்ட் மேனுவல் கியர்பாக்ஸ், டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என பல்வேறு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் செல்டோஸ் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா செல்டோஸ் கார் கடைசியாக கடந்த 2026 ஜனவரி மாதத்தில் அப்கிரேட் செய்யப்பட்டது. அந்த மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் காரை தான் நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா வாங்கியுள்ளார். மிடில்-கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, பொருளாதாரத்தில் இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பது உண்மையில் பெரிய விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications