அரசின் திடீர் முடிவால் புதிய வாகனங்களின் விலை உயர போகுது... பொதுமக்கள் தலையில் இடியை இறக்கீட்டாங்க...
பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்களால், இந்தியா ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முதலில் அவற்றின் இறக்குமதிக்காக செய்யப்படும் அதிகப்படியான செலவு காரணமாக, இந்தியாவின் பொருளாதாரத்தில் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசுபாடு பிரச்சனையையும் இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
எனவேதான் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதை உணர்ந்து கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தொடங்கின. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலையில் வரியில் (Road Tax) இருந்து விலக்கு வழங்கப்பட்டது இதில் மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்ததில், இந்த நடவடிக்கை மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
ஆனால் தற்போது இந்த நிலைமை மாற தொடங்கியுள்ளது. ஆம், பல்வேறு மாநிலங்களின் அரசுகள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரியை விதிக்க தொடங்கியுள்ளன. குஜராத், ஹரியானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது சாலை வரி விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் இனி கர்நாடக மாநிலத்திலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி விதிக்கப்படவுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இனி 10 லட்ச ரூபாய் வரையுள்ள எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் 5 சதவீதம் சாலை வரி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 10-25 லட்ச ரூபாய் வரையுள்ள எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் 8 சதவீதம் வரை சாலை வரி செலுத்த வேண்டும்.
மறுபக்கம் 25 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் மேல் விலையுள்ள எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் 10 சதவீதம் சாலை வரி செலுத்த வேண்டும். இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் இனி எலெக்ட்ரிக் வாகனங்களின் ஆன்-ரோடு விலை (On-road Price) உயரவுள்ளது. எனவே கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் இனி அதிக தொகையை செலவு செய்ய தயாராகி கொள்வது நல்லது. இது குறித்து டீம்-பிஹெச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதற்குள்ளாக அவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்துவது சரியானது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதவில்லை. 25 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் மேல் விலையுள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வேண்டுமானால், அரசு சலுகைகளை நிறுத்தி கொள்ளலாம்.
ஏனெனில் செல்வந்தர்களால் மட்டுமே விலை அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்படுகின்றன. ஆனால் விலை குறைவான எலெக்ட்ரிக் வாகனங்களை பெரும்பாலும் மிடில்-க்ளாஸ் மக்கள்தான் வாங்குகின்றனர். எனவே விலை குறைவான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகள் தொடர வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அப்போதுதான் இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








