சாய் அபியங்கருக்கு மட்டுமில்ல, படத்தில் வேலை செய்த மேலும் 2 பேருக்கு கிடைத்த மஹிந்திரா கார் பரிசு!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. தற்போது வரையில் சுமார் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை இந்த திரைப்படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெரும் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யா அவர்கள் இந்த திரைப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய முக்கிய பணியாளர்களுக்கு பிராண்ட்-நியூ எலெக்ட்ரிக் கார்களை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.

அதுவும், அவர் பரிசாக வழங்கி இருப்பது மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிஷன் என்கிற சுமார் ரூ.28.49 லட்சம் மதிப்பிலான எலெக்ட்ரிக் கார் ஆகும். இது, மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிஷன் ஆகும். இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதை காட்டிலும், இந்த ஸ்பெஷல் எடிஷன் காரை புக் செய்வதே பெரிய விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

karuppu movie team members gifted by mahindra be 6 batman edition

ஏனெனில், இதனை ஸ்பெஷல் எடிஷன் கார் என சொல்வதற்கு பதிலாக லிமிடெட் எடிஷன் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அந்த அளவிற்கு இந்த பேட்மேன் எடிஷனை மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 பேட்மேன் எடிஷன் வெறும் 999 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால், இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட வெறும் 3 நிமிடங்களுக்குள் அனைத்து 999 யூனிட்களும் புக் செய்யப்பட்டு விட்டன. இந்த அளவிற்கு வரவேற்பு கிடைப்பதை பார்த்து கடந்த 2026 மார்ச் மாதத்தில் பிஇ 6 பேட்மேன் எடிஷன் எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை இரண்டாவது முறையாக மஹிந்திரா துவங்கியது.

karuppu movie team members gifted by mahindra be 6 batman edition

இந்த முறையும் 999 யூனிட்களுக்கு மட்டுமே முன்பதிவுகள் துவங்கப்பட்டன. அதில் மூன்று யூனிட்களை தான் நடிகர் சூர்யா அவர்கள் தனது கருப்பு திரைப்பட கலைஞர்களுக்காக வாங்கி பரிசளித்துள்ளார். கருப்பு திரைப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபியங்கருக்கு பிஇ 6 பேட்மேன் எடிஷன் கார் அவரது வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டதை சமீபத்தில் நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம்.

சாய் அபியங்கர் உடன் சேர்த்து, படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே விஷ்ணு மற்றும் படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன் அவர்களுக்கும் நடிகர் சூர்யா மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிஷன் காரை பரிசளித்துள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரவர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிஷன் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பிரபல ஹாலிவுட் திரைப்படங்கள் தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் உடன் இணைந்து மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய ஸ்பெஷல் எடிஷன் கார் இதுவாகும். அதாவது, கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 எலெக்ட்ரிக் காரில் ஸ்பெஷல் எடிஷனாக இது அறிமுகம் செய்யப்பட்டது.

மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்களை காட்டிலும் பேட்மேன் எடிஷனின் விலை அதிகமாகும். பேட்மேன் எடிஷன் என்கிற பெயருக்கேற்ப, இந்த கார் ஸ்பெஷலான பேட்மேன் கதாபாத்திரத்திற்கே உண்டான சாடின் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதேநேரம், காரின் சஸ்பென்ஷன்கள் மற்றும் பிரேக் காலிபர்கள் தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெற்றி பெற்றுள்ள திரைப்படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக கார் ஒன்றை பரிசாக வழங்குவது என்றில்லாமல், இவ்வாறான அரிதான ஸ்பெஷல் எடிஷன் காரை பரிசளித்து இருப்பது நடிகர் சூர்யாவின் மீதான மதிப்பைக் கூட்டுகிறது. மேலே கூறப்பட்ட ரூ.28.49 லட்சம் என்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே; ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.

Article Corrections

டிரைவ்ஸ்பார்க் கருத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
Article Published On: Tuesday, June 2, 2026, 23:59 [IST]
English summary
Karuppu movie team members received mahindra be 6 batman edition gift from actor suriya
மேலும்... #celebrity cars #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out