மெக்லாரன் கார் வாங்கும் அளவுக்கு தொழிலில் பணம் கொட்டுது... இந்தியாவிலேயே ஒரேயொரு ஷோரூம் தான் இருக்கு!
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் டாக்டர் விஜூ ஜேக்கப் (Viju Jacob), சின்தைட் இண்டஸ்ட்ரீஸ் (Synthite Industries) நிறுவனத்தின் தலைவர் ஆவார். மசாலாப் பொருட்கள் பிரித்தெடுக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தின் தொழிலதிபர் என்பதால் இவரை 'மசாலா கிங்' (Masala King) என்று அழைக்கின்றனர். பெரும்பாலான மலையாள தொழிலதிபர்களை போலவே ஆடம்பர கார் பிரியரான இவர், தற்போது தனது கார் சேகரிப்பில் மேலும் ஒரு புதிய விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car)-ஐ இணைத்துள்ளார்.
தொழிலதிபர் விஜூ ஜேக்கப் தற்போது புதியதாக வாங்கியிருப்பது, மெக்லாரன் ஜிடிஎஸ் (McLaren GTS) ஆகும். கேரளாவின் முதல் மெக்லாரன் ஜிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கார் உரிமையாளராக மாறியுள்ள டாக்டர் விஜூ ஜேக்கப், குடும்பத்துடன் இந்த புதிய காரை டெலிவரி (Delivery) பெறுவதை தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் படங்கள் உடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

மெக்லாரன் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தது. அதற்கு முன் வரையில் வெளிநாட்டில் மெக்லாரன் காரை வாங்கி அதனை அதிக செலவு செய்து இந்தியாவிற்கு கொண்டுவந்து தொழிலதிபர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது மும்பையில் உள்ள இந்தியாவின் ஒரே மெக்லாரன் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) மூலம், அதன் கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு மெக்லாரன் நிறுவனம் வழங்குகிறது.
தற்போது கேரள தொழிலதிபர் டாக்டர் விஜு ஜேக்கப் வாங்கியிருக்கும் ஆரஞ்சு நிற மெக்லாரன் ஜிடிஎஸ் காரின் உட்புறம் கருப்பு நிறத்தில் உள்ளதோடு, கார்பன் ஃபைபர் (Carbon Fiber)-ஆல் ஆன பாகங்கள் இருக்கலாம் எனப் படங்கள் தெரிவிக்கின்றன. எனினும், விஜு கேக்கப்பின் இந்த புதிய காரின் உட்புறத்தின் விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மெக்லாரன் ஜிடிஎஸ் என்பது மெக்லாரன் ஜிடி காரின் மேம்படுத்தப்பட்ட, சக்திவாய்ந்த மற்றும் விலை குறைவான எண்ட்ரி-லெவல் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இதன் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 611 பிஹெச்பி ஆற்றலையும், 630 என்எம் டார்க் திறனையும் அளிக்கிறது. 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் உடன், இந்த கார் 3.2 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டி, அதிகப்பட்சமாக மணிக்கு 326 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக உள்ளது.
இந்தியச் சந்தையில் மெக்லாரன் ஜிடிஎஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.50 கோடி ஆகும். பெரும்பாலான மற்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களைப் போலவே, இதிலும் பல கஸ்டமைசேஷன் (customisation) ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதாவது, வாடிக்கையாளர்கள் தனது விருப்பத்திற்கேற்ப காரில் மாற்றங்களை செய்துக் கொள்ள முடியும்.

மெக்லாரன் ஜிடி அல்லது ஜிடிஎஸ் கார் மாடல்களுக்கு, ரூ.29.77 லட்சம் மதிப்பிலான ஏற்கனவே-வடிவமைக்கப்பட்ட ஆட்-ஆன் பேக் (Add-on Pack)-க்கும் கிடைக்கிறது. தொழிலதிபர் விஜு ஜேக்கப் தனது இந்த புதிய காருக்கு அதில் ஒரு ஆப்ஷனைத் தேர்வு செய்தாரா என்பதும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மசாலா கிங் தொழிலதிபர் விஜூ ஜேக்கப்பிடம் ஏற்கனவே ஃபெராரி ரோமா (Ferrari Roma), லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender), பி.எம்.டபிள்யூ எம்4 காம்பெடிஷன் (BMW M4 Competition), ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த கார்கள் உள்ளன. ஆகையால், இத்தகையவர் புதியதாக இந்த மெக்லாரன் காரை வாங்கியிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. இருப்பினும், கேரளாவிலேயே முதல் ஆளாக மெக்லாரன் ஜிடிஎஸ் காரை வாங்கி இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.


Click it and Unblock the Notifications









