விலை குறைவான எலெக்ட்ரிக் கார் வரும் சூழலில் பாரத் பெட்ரோலியத்துடன் கூட்டு சேர்ந்த கொரிய நிறுவனம்! ஏன் தெரியுமா

இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக கியா (Kia) உள்ளது. தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

அவை கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV), கியா இவி 6 (Kia EV 6) மற்றும் கியா இவி 9 (Kia EV 9) ஆகியவை ஆகும். வரும் காலங்களில் கியா சைரோஸ் இவி (Kia Syros EV) உள்பட இன்னும் ஏராளமான புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Kia Carens Clavis EV Side Design

எனவே இந்தியா முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதில் கியா இந்தியா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited - BPCL) நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கியா இந்தியா நிறுவனம் தற்போது கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்கள் கியா இந்தியா நிறுவனத்தின் கே-சார்ஜ் எகோசிஸ்டத்தின் (K-Charge Ecosystem) கீழ் தற்போது ஒருங்கிணைக்ககப்பட்டுள்ளன. கே-சார்ஜ் எகோசிஸ்டத்தின் கீழ் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை 15 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்த்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது.

Kia Carens Clavis EV

இதன் மூலம் கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களுக்கு, மிக எளிதாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் கிடைக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு 'ரேஞ்ச்' பற்றிய அச்சம் விலகும். 'ரேஞ்ச்' மீதான அச்சம் காரணமாகவே நிறைய பேர் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற தயங்கி கொண்டுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும்? என்பதுதான் இங்கே ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது. சரி, கியா நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படும் கியா சைரோஸ் இவி எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் இன்னும் ஒரு சில மாதங்களில், அனேகமாக 2026ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது விற்பனையில் உள்ள கியா சைரோஸ் காரின் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.

அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இதுதான் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்யும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக 13 அல்லது 14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு ரேஞ்ச் பற்றிய அச்சம் நீங்கும். எனவே இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. கியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை உயர உதவி செய்யலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 7, 2026, 13:30 [IST]
English summary
Kia india ties up with bharat petroleum check all details here
மேலும்... #kia motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+