5 பேர் போகக்கூடிய வேற எந்த காரிலும் இந்த இருக்கைகள் கிடைக்குறது இல்ல! கியாவை இதுக்காகவே பாராட்டனும்!
வெண்டிலேட்டட் இருக்கைகள் (Ventilated Seats), குளிரான மற்றும் சூடான காற்று என இரண்டையும் தேவைக்கேற்ப வழங்கக்கூடியவை. கார்களில் வெண்டிலேட்டட் இருக்கைகள் பெரும்பாலும் முன்பக்கத்தில் வழங்கப்படுவதுதான் வழக்கம். விலையுயர்ந்த கார்களில் பின்பக்கத்திலும் வழங்கப்படுகிறது. குறைந்தப்பட்சம் எவ்வளவு செலவு செய்தால் பின்பக்கத்திலும் வெண்டிலேட்டட் இருக்கைகள் உடன் காரை பெறலாம் என்பதையும், அத்தகைய கார்களுள் சிறந்த ஐந்து கார்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. கியா சிரோஸ் (Kia Syros): இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் இரண்டாவது வரிசையில் வெண்டிலேட்டட் இருக்கைகளை வழங்கும் கார்களுள் கியா சிரோஸ் முதலாவது ஆகும். இந்த காரின் எச்டிஎக்ஸ்+ (HTX+) வேரியண்ட்டில் இருந்து இந்த இருக்கை கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.56 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

இந்த காரில் பின் வெண்டிலேட்டட் இருக்கைகள் மடிக்க மற்றும் சாய்க்கக்கூடியவை ஆக உள்ளன. இதன் மூலம் பின் இருக்கை பயணிகள் சவுகரியமான பயணத்தை பெறும் நிலையில், சிரோஸ் எச்டிஎக்ஸ்+ காரின் கேபினில் 64 வண்ணங்களில் ஒளிரக்கூடிய விளக்குகள், ட்யூயல் பனோராமிக் சன்ரூஃப், டிரினிட்டி பனோராமிக் டிஸ்பிளே உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
2. ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar): மார்க்கெட்டில் பிரபலமான கிரெட்டா காரின் 6/7-சீட்டர் வெர்சனான அல்கஸாரில் இரண்டாவது வரிசையில் வெண்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இதற்கு இந்த காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டை வாங்க வேண்டியிருக்கும். அதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.20 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

இந்தியாவில் குறைந்த விலையில் இரண்டாவது வரிசையில் வெண்டிலேட்டட் இருக்கைகள் உடன் கிடைக்கும் 3 இருக்கை வரிசைகளை கொண்ட கார் இதுவாகும். மேற்கூறப்பட்ட கியா சிரோஸ் ஆனது இரு வரிசைகளில் மட்டுமே இருக்கைகளை கொண்டது ஆகும். இந்த வசதி மட்டுமின்றி, அல்கஸாரின் டாப் வேரியண்ட்களில் 8 விதமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் & பயணிகள் இருக்கைகளும் வழங்கப்படுகின்றன.
3. டாடா சஃபாரி (Tata Safari): டாடா மோட்டார்ஸின் விலையுயர்ந்த காராக விளங்கும் இதன் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் 2வது வரிசையில் வெண்டிலேட்டட் இருக்கைகள் மிக சமீபத்தில்தான் வழங்கப்பட்டன. இந்த வசதியைப் பெற சஃபாரி காரை அதன் அக்கம்ப்ளிஷ்டு எக்ஸ்+ வேரியண்ட்டில் இருந்து வாங்க வேண்டும்.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.22.82 லட்சமாக உள்ளது. சஃபாரி அக்கம்ப்ளிஷ்டு எக்ஸ்+ வேரியண்ட்டில் வயர்லெஸ் சார்ஜர், பவர்டு டிரைவர் & கோ-டிரைவர் சீட்ஸ், 360-டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா, லெவல்-2 அடாஸ் (ADAS) மற்றும் ஹர்மன் நிறுவனத்தின் நியோ க்யூ.எல்இடி (QLED) இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே உள்ளிட்டவையும் கிடைகின்றன.
4. மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO): இந்தியாவில் மிக பிரபலமான எக்ஸ்யூவி700 காரின் அப்கிரேட் வெர்சன் இதுவாகும். இதன் டாப் வேரியண்ட்டான ஏ.எக்ஸ்7 லக்சரி (AX7 Luxury) வேரியண்ட்டில் இரண்டாவது வரிசையில் வெண்டிலேட்டட் இருக்கைகள் கிடைக்கின்றன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.25.07 லட்சமாக உள்ளது.
5. மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9s): மஹிந்திராவில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் இதுவாகும். மார்க்கெட்டில் விரைவாகவே கவனத்தை ஈர்த்த மஹிந்திராவின் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான வெர்சனாக எக்ஸ்இவி 9எஸ் விளங்குகிறது. ரூ.28.10 லட்சத்தில் கிடைக்கும் இந்த எலெக்ட்ரிக் காரின் பேக் த்ரீ வேரியண்ட்டில் இரண்டாவது வரிசையில் வெண்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்த 5 கார்களில் 4 கார்கள் 3 வரிசைகளில் இருக்கைகளை கொண்டவை ஆகும். இதனால் அவற்றின் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ஆனால், முதலாவதாக பார்த்த கியா சிரோஸ் மட்டும் இரண்டு வரிசைகளில் மட்டுமே மொத்தமாக 5 இருக்கைகளை கொண்ட கார் ஆகும். இதனாலேயே அதன் விலையும் குறைவாக இருப்பதால், இந்த லிஸ்ட்டில் சிரோஸ் கொஞ்சம் ஸ்பெஷல் என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









