ஊரில் இருக்கும் எல்லா நடிகர்களும் வாங்கிப் போடும் டொயோட்டா கார்! இவரும் இப்போ வாங்கிட்டாரா?!
டொயோட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 29 வருடங்களாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்க, தமிழ்நாட்டில் செயல்படும் 'லான்சன் டொயோட்டா' டீலர்ஷிப் ஷோரூம் உடன் கடந்த 25 வருடங்களாக தங்களது குடும்பமே இணைப்பில் இருப்பதாக கூறியுள்ள நடிகர் பிரபு, புதியதாக டொயோட்டா ஹைகிராஸ் கார் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரபு, பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஆவார். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே நடிகர் பிரபு பிரபலமானவர் ஆவார். அப்படிப்பட்ட இவர் தான் தற்போது புதியதாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதனை சம்பந்தப்பட்ட லான்சன் டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்துள்ளது. வீடியோவில், புதியதாக வாங்கிய பிராண்ட்-நியூ கார் உடன் நின்று நடிகர் பிரபு பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நடிகர் பிரபு பல்வேறு விளம்பர காட்சிகளில் நடித்துள்ளதை பார்த்திருக்கிறோம். அவ்வாறுதான், இந்த வீடியோவிலும் அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து 25 வருடங்களாக தங்களது குடும்பம் லான்சன் டொயோட்டா உடன் நல்லுறவில் இருப்பதாக தெரிவித்துள்ள நடிகர் பிரபு, கடந்த காலங்களில் இருந்து லான்சன் டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம்களில் இருந்து பல்வேறு டொயோட்டா கார்களை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது சேவை மற்றும் பழுதுப் பார்ப்பு பணிகளும் சிறப்பாக உள்ளதாக பாராட்டியுள்ளார்.

பின்னர், தான் புதியதாக வாங்கியுள்ள இன்னோவா ஹைகிராஸ் காரை காண்பித்த நடிகர் பிரபு, இந்த காரை வாங்கியதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். நடிகர் பிரபு புதியதாக வாங்கியிருப்பது, வெள்ளை நிறத்திலான இன்னோவா ஹைகிராஸ் கார் ஆகும். இந்த வெள்ளை நிறத்தை 'சூப்பர் வெள்ளை' என டொயோட்டா நிறுவனம் அழைக்கிறது.
இது இல்லாமல், பளபளப்பான பிளாகிஷ் அகேஹா ஃபிளேக், பிளாட்டினம் வெள்ளை பேர்ல், சில்வர் மெட்டாலிக், ஆட்டிட்யூட் கருப்பு மைகா, அவாண்ட் கார்டே பிரோன்ஸ் மெட்டாலிக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் இன்னோவா ஹைகிராஸ் கிடைக்கிறது. மற்றப்படி, இந்த காரை எந்த வேரியண்ட்டில் நடிகர் பிரபு வாங்கியுள்ளார் என்கிற விபரம் கிடைக்கப் பெறவில்லை.
இந்தியாவில் G, GX, GX (O), VX, VX (O), ZX, ZX (O) என ஏழு விதமான வேரியண்ட்களில் இன்னோவா ஹைகிராஸ் காரை டொயோட்டா விற்பனை செய்கிறது. அதேபோல், இந்த காரை எத்தனை இருக்கைகள் உடன் நடிகர் பிரபு தேர்வு செய்துள்ளார் என்பதும் தெரியவில்லை. 6-சீட்டர், 7-சீட்டர் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, 8-சீட்டர் ஆப்ஷனிலும் கூட இன்னோவா ஹைகிராஸ் விற்பனை செய்யப்படுகிறது.
வேரியண்ட்களை பொறுத்து சீட்டிங் ஆப்ஷன்ஸ் வழங்கப்படுகின்றன. ஆதலால், நடிகர் பிரபு எந்த வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளார் என்பது தெரிந்தால்தான், அவர் எத்தனை இருக்கைகள் உடன் இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார் என்பதை யூகிக்க முடியும். மேலும், வேரியண்ட் தெரிந்தால்தான், இவர் இந்த காரை ஹைப்ரீட் ஆப்ஷனில் வாங்கியுள்ளாரா அல்லது சாதாரணமாக பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கியுள்ளாரா என்பதும் தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்த நடிகர் பிரபு போன்றோர் புதிய கார்களை அவற்றின் டாப் வேரியண்ட்களில் வாங்குவதே வழக்கம். அந்த வகையில், இந்த இன்னோவா ஹைகிராஸ் காரையும் அவர் டாப் வேரியண்ட்டில் வாங்கியிருக்கவே வாய்ப்புள்ளது. ஆதலால், இது ஹைகிராஸ் ஹைப்ரீட் காராகவே இருக்கும். இருப்பினும், பணக்காரர்கள் குறைவான இருக்கைகள் உடன் மட்டுமே காரை வாங்க விரும்புகின்றனர் என்பதால், இது 6-சீட்டர் காராக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications