என்ன என்னைய தேடுறாய்ங்க... கொடுவாய் அன்பு தார் வாங்கியதற்கும் இதற்கும் சம்பந்தமில்ல...!!
15 வயதிலேயே சமூக வலைத்தள பிரபலமாக விளங்கும் திருப்பூர் கொடுவாய் அன்பு (Koduvai Anbu) சமீபத்தில் மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தை வாங்கியதுதான் தற்சமயம் இணையத்தில் பேசும் பொருளாகி உள்ளது. அதனை பற்றி நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் கூட பதிவிட்டு இருந்தோம்.
பிறரை பணம் மோசடி செய்து இந்த தார் வாகனத்தை கொடுவாய் அன்பு வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், இவருக்கு முன்னதாகவே மற்றொரு யூடியூப் பிரபலமான 'லுங்கி பாய்ஸ்' (Lungi Boys) புகழ் ராஜ் பிரியன் (Raj Priyan) பிராண்ட்-நியூ தார் ராக்ஸ் வாகனத்தை சமீபத்தில் டெலிவிரி பெற்றுள்ளார், ஆனால் அதை யாரும் பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை.

கொடுவாய் அன்புவின் புதிய தார் ராக்ஸ் டெலிவிரி (Delivery) வீடியோ வெளியான நாளுக்கு சரியாக ஒருநாள் முன்னதாக ராஜ் பிரியன் (Raj Priyan) தனது புத்தம் புதிய தார் ராக்ஸ் வாகனத்தை டெலிவிரி பெறும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். தாய், தந்தை, மனைவி, குழந்தை என குடும்பமாக மஹிந்திரா ஷோரூமுக்கு சென்று ராஜ் பிரியன் தார் ராக்ஸை டெலிவிரி பெற்றுள்ளார்.
கொடுவாய் அன்பு சிவப்பு நிறத்தில் இந்த மஹிந்திரா ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை வாங்கியுள்ள நிலையில், ராஜ் பிரியன் பளபளப்பான கருப்பு நிறத்தில் இந்த வாகனத்தை வாங்கியுள்ளார். இதனாலேயே ஷோரூமுக்கு வரும்போது கூட அதற்கு மேட்சிங்காக கருப்பு நிற சட்டையில் வந்துள்ளார். ஏற்கனவே செகண்ட்-ஹேண்ட் கார் ஒன்றை ராஜ் பிரியன் பயன்படுத்தி வரும் நிலையில், இது அவரது இரண்டாவது கார் ஆகும்.

இந்தியாவில் மஹிந்திரா தார் மற்றும் தார் ராக்ஸ் என இரு விதமான தார் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், 3 கதவுகளை மட்டுமே தார் ஆனது சாஃப்ட் டாப் மற்றும் ஹார்ட் டாப் என இரு விதமான மேற்கூரை ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், சாஃப்ட் டாப் ஆப்ஷனில் தேவையென்றால் வாகனத்தின் மேற்கூரையை நீக்கிக் கொள்ள முடியும்.
ஆனால், கொடுவாய் அன்பு மற்றும் ராஜ் பிரியன் சமீபத்தில் வாங்கியுள்ள தார் ராக்ஸ் வாகனம் ஆனது ஹார்ட் டாப் வெர்சனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வாகனத்தை ஷோரூமில் டெலிவிரி எடுத்த பின், பெற்றோரை பின் இருக்கையில் அமர வைத்துவிட்டு, மனைவி மற்றும் குழந்தையை முன் இருக்கையில் அமர்த்தி ராஜ் பிரியன் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.25 லட்சம்- ரூ.22.06 லட்சம் ஆக உள்ளன. ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இந்த அளவிற்கு விலையுயர்ந்த மஹிந்திரா வாகனத்தை தான் ராஜ் பிரியன் வாங்கியுள்ளார். கொடுவாய் அன்பு தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியது விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ராஜ் பிரியன் இந்த வாகனத்தை வாங்கிய விஷயம் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேநேரம், குழந்தையை வாகனத்தில் அழைத்து செல்வதிலும் நம்மில் நிறைய பேர் முறையான வழிமுறைகளை பின்பற்றுவது இல்லை. காரில் பயணிக்கும்போது குழந்தைகளை மடியில் வைத்து அழைத்து செல்வதே முதலில் தவறானது; அதைவிட மோசமானது வாகனத்தின் முன் இருக்கையில் குழந்தையை மடியில் வைத்து அழைத்து செல்வதாகும். ஏனெனில், ஏதேனும் விபத்து என்றால் அதிகம் பாதிப்படைவது முன் இருக்கை பயணிகள் ஆகும்.

ஆனால், அதற்கு முன்னதாகவே ஏர்பேக் (Airbag) கண்ணிக்கைக்கும் நேரத்தில் வெளியே வந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், ஏர்பேக்குகள் பெரியவர்களுக்கான பாதுகாப்புக்காகவே வடிவமைக்கப்பட்டு, கார்களில் பொருத்தப்படுகின்றன. குழந்தைகளை காரில் அழைத்து செல்வதாக இருந்தால், அதற்கான முறையான குழந்தை-இருக்கைகளை பின் இருக்கை வரிசையில் பயன்படுத்துவது நல்லது.


Click it and Unblock the Notifications









