சாரா அர்ஜூன் மாதிரி சின்ன வயசுல குழந்தை நட்சத்திரமா நடிச்சவங்களா இவங்க! அடையாளம் தெரியா அளவுக்கு வளந்துட்டாங்க
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டன்ட் பாலிவுட் தளத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வைரல் வீடியோவில், ஜீப் காம்பஸ் (Jeep Compass) காரில் இருந்து, நடிகை ஒருவர் கீழே இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதற்கு பிறகு அங்கு இருந்தவர்களுக்கு, புகைப்படம் மற்றும் போட்டோக்களுக்கு அவர் 'போஸ்' கொடுப்பதையும் நாம் காணலாம்.
இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது மஹீமா மக்வானா (Mahima Makwana) ஆவார். தற்போது 26 வயதாகும் இவர், ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய அவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து கொண்டுள்ளார்.

இந்த சூழலில்தான் அவரது வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ஜீப் காம்பஸ் கார் ஆகும்.
இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். இதில், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், மெமரி வசதியுடன் கூடிய டிரைவர் இருக்கை, 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.2 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் ட்யூயல்-பேன் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. அத்துடன் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில் அதிநவீன பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) கொஞ்சம் கூட பஞ்சம் இல்லை.
பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 170 ஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 4x2 மற்றும் 4x4 ஆகிய ஆப்ஷன்களும் ஜீப் காம்பஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஜீப் காம்பஸ் காரின் ஆரம்ப விலை 17.99 லட்ச ரூபாயாக உள்ளது. இது ஜீப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டாடா ஹாரியர் (Tata Harrier) போன்ற கார்களுக்கு எல்லாம் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹீமா மக்வானா பயன்படுத்திய ஜீப் காம்பஸ் கார் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ஜீப் காம்பஸ் காரில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டு வந்தது. மஹீமா மக்வானா பயன்படுத்திய ஜீப் காம்பஸ் காரில் இந்த இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் பிஎஸ் 6 இரண்டாவது கட்ட மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதால், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட காம்பஸ் காரின் விற்பனையை, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் ஜீப் இந்தியா நிறுவனம் நிறுத்தி விட்டது. எனவே தற்போது ஜீப் காம்பஸ் கார் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications