1980களில் பிரபலமாக இருந்த நடிகர், டாப் இடத்தில் வருவார்னு எதிர்பார்த்தோம்! இப்போ டொயோட்டா கார் ஷோரூமில்!
டொயோட்டா இன்னோவா கார்களுக்கு இந்தியாவில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதனாலேயே கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களுக்கு முன் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு இருப்பினும், இன்னமும் இன்னோவா கார்கள் தொடர்ந்து விற்பனையில் உள்ளன. அதாவது, அந்த அளவிற்கு இன்னோவா கார்களை தொடர்ச்சியாக டொயோட்டா நிறுவனம் புது, புது தோற்றங்களில் அறிமுகம் செய்து வருகிறது.
அவ்வாறு, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் இன்னோவா கார் மாடல் தான் இன்னோவா ஹைகிராஸ் ஆகும். இன்னோவா கார்களின் விலைகள் சற்று அதிகமாக இருப்பினும், ஒவ்வொரு மாதமும் கணிசமான எண்ணிக்கையிலான இன்னோவா கார்களை டொயோட்டா விற்பனை செய்கிறது. குறிப்பாக, அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகம் தேர்வு செய்யக்கூடியதாக இன்னோவா கார்கள் உள்ளன.

அந்த வகையில் தற்போது, பிரபல நடிகர் ஒருவர் பிராண்ட்-நியூ டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார். அவர் யார் என்றால், மலையாள நடிகர் பைஜூ சந்தோஷ் ஆவார். இளம் வயதிலேயே சினிமாவில் நடிப்பதற்கு வந்துவிட்ட இவர், கேரள 90ஸ் கிட்ஸுக்கு நன்கு பரீட்சையமானவர். இவர் நடித்த முதல் திரைப்படமான 'மணியன் பிள்ளை' 1981இல் திரைக்கு வந்தது.
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து இருப்பினும், பைஜூ சந்தோஷ் அவர்களால் முன்னணி நடிகராக முடியவில்லை. இருப்பினும், இவரது தனித்துவமான நடிப்பு ரசிகர்கள் பலரை கவர்ந்தது. அதன் மூலமாக தற்போது வரையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பைஜூ சந்தோஷ் நடிப்பில் கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 6 திரைப்படங்கள் திரைக்கு வந்தன.

இந்த நிலையில், புதியதாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ உடன் தெரிவித்துள்ளார். டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம் ஊழியர்கள் உடன் நடிகர் பைஜூ சந்தோஷ் போஸ் கொடுத்த போது இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், இந்த நடிகரது புதிய இன்னோவா ஹைகிராஸ் காரையும் பார்க்க முடிகிறது.
இன்னோவா ஹைகிராஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது இன்னோவாவின் மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். இரண்டாம் தலைமுறை இன்னோவா க்ரிஸ்ட்டாவும் விற்பனையில் உள்ளது. இன்னோவா ஹைகிராஸ் ஆனது ஓர் ஹைப்ரீட் கார் ஆகும். தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹைப்ரீட் கார்களுள் இன்னோவா ஹைகிராஸ் ஒன்றாகும்.
இந்த பிரபலமான டொயோட்டா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.19.15 லட்சத்தில் இருந்து ரூ.32.38 லட்சம் வரையில் உள்ளன. ஆன்-ரோடு விலையில் அதிகப்பட்சமாக ரூ.41 லட்சம் அளவிற்கு இன்னோவா ஹைகிராஸின் விலைகள் வரலாம். இந்த காரில் 2 லிட்டர், 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜினை சாதாரணமாக நேச்சுரலி-அஸ்பிரேட்டட் தரத்தில் வாங்கலாம்; அல்லது எலெக்ட்ரிக் மோட்டார் உடன் ஹைப்ரீட் தரத்தில் வாங்கலாம். ஹைப்ரீட் என்றால் காரின் விலை சற்று அதிகம் ஆகும். கூடுதலாக எலெக்ட்ரிக் மோட்டாரினால் இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரீட் காரில் அதிகப்பட்சமாக 184 பிஎச்பி மற்றும் 188 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலையாள நடிகர் பைஜூ சந்தோஷ் எந்த வேரியண்ட்டில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை. எப்படியிருந்தாலும், ஹைப்ரீட் வெர்சனில் தான் இந்த காரை வாங்கியிருப்பார் என நினைக்கிறோம். ஹைப்ரீட் வெர்சனில், இது ஒரு ஃபுல்-ஆட்டோமேட்டிக் கார் ஆகும்.


Click it and Unblock the Notifications