ரஜினி கூட ஒரேயொரு படம் தான் நடிச்சாரு, தொழிலதிபரின் காரை வாங்கும் அளவுக்கு செல்வாக்கு உயர்ந்துடுச்சு!

மலையாள நடிகர் சவுபின் சாகிரின் முகம் நம்மில் நிறைய பேருக்கு பரீட்சையமானதாக இருக்கும் என நினைக்கிறேன். மலையாள சினிமாவில் பல வருடங்களாக பல கதாபாத்திரங்களில் நடித்துவரும் இவர், சமீப காலத்தில் தமிழ் மக்களின் மனதிலும் நீங்காத இடம்பிடித்துள்ளார். குறிப்பாக, சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து கூலி திரைப்படத்தில் நடித்தது இந்திய அளவில் சவுபின் சாகிரை பிரபலமடைய வைத்தது.

இதற்கு எல்லாம் முக்கிய காரணம், மலையாளத்தில் வெளியாகி பான் இந்தியா திரைப்படமாக பெரிதும் ஹிட் அடித்த 'மஞ்சும்மல் பாய்ஸ்' ஆகும். நடிப்பது மட்டுமின்றி, சவுபின் சாகிர் திரைப்படங்களை இயக்கக் கூடியவராகவும் உள்ளார். இவரது இயக்கத்தில் இரண்டாவது திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்குதான் அவரது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

malayalam actor soubin shahir owned used bmw m4 competition performance

அதேநேரம், பல திரைப்படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகர் சவுபின் சாகிர் அதற்கிடையில் BMW M4 காம்பெடிஷன் பெர்ஃபார்மன்ஸ் காரை வாங்கியுள்ளார். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த காரை அவர் கடந்த 2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலேயே வாங்கிவிட்டார். ஆனால், அந்த காரின் படங்கள் வெளியாகாமல் இருந்த வந்த நிலையில், அவை தற்போது வெளியாகியுள்ளன.

இந்த படங்கள் நமக்கு 'ஃபாஸ்கரீம்_ஹர்மன்' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக கிடைத்துள்ளன. இது புத்தம் புதிய கார் கிடையாது; ஏற்கனவே மற்றொருவரால் பயன்படுத்தப்பட்ட கார் ஆகும். கேரளாவின் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான டாக்டர் விஜூ ஜேகப்பிடம் இருந்து நடிகர் சவுபின் சாகிர் இந்த காரை வாங்கினார்.

malayalam actor soubin shahir owned used bmw m4 competition performance

சிந்தைட் குழுமத்தின் தலைவரான டாக்டர் விஜூ ஜேகப் தான் இந்த BMW M4 காம்பெடிஷன் பெர்ஃபார்மன்ஸ் காரின் முதல் ஓனர் ஆவார். இரண்டாவது ஓனர் நடிகர் சவுபின் சாகிர் ஆவார். பொதுவாகவே, மலையாள திரைத்துறையினர் பலர் கார் மற்றும் பைக்குகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பது ஊரறிந்த விஷயமாகும்.

மலையாள சினிமா ஸ்டார்கள் அவ்வப்போது விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்குவதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். பிராண்ட்-நியூ கார்கள் மட்டுமின்றி, ஏற்கனவே மற்றொருவரால் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதையும் மலையாள சினிமா துறையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில பணக்காரர்கள் யூஸ்டு சொகுசு கார்களை வாங்குவதையே வழக்கமாக வைத்திருப்பதற்கு பின்னால் ஒரு பெரிய கதை உள்ளது.

அதனை பற்றி இன்னொரு தொகுப்பில் பார்க்கலாம். தற்போது நடிகர் சவுபின் சாகிர் வாங்கியிருக்கும் யூஸ்டு BMW M4 காம்பெடிஷன் பெர்ஃபார்மன்ஸ் காருக்கு வருவோம். இது, தாழ்வான உடலமைப்பை கொண்ட, அதிவேகமாக இயங்கக்கூடிய BMW கார் ஆகும். இந்த காரை தொழிலதிபர் விஜூ ஜேகப் 'மேன் க்ரீன் மெட்டாலிக்' நிறத்தில் வாங்கினார்.

அதே நிறத்தில்தான் இந்த காரை நடிகர் சவுபின் சாகிர் இப்போதும் பயன்படுத்தி வருகிறார். இந்த குறிப்பிட்ட BMW M4 காம்பெடிஷன் பெர்ஃபார்மன்ஸ் கார் ஆனது அதன் 'எம் எக்ஸ் டிரைவ்' வேரியண்ட் ஆகும். இது முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: BMW M4 காம்பெடிஷன் பெர்ஃபார்மன்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.1.53 கோடியாக உள்ளது. ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.2 கோடி அளவிற்கு வரும். இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமே என்பதற்காக கூட இதனை யூஸ்டு காராக நடிகர் சவுபின் சாகிர் வாங்கியிருக்கலாம். அல்லது ஏற்கனவே கூறியதுபோல், சில பணக்காரர்களை போல் யூஸ்டு காராக வாங்க சவுபின் சாகிர் விரும்பி இருக்கலாம்.

Article Published On: Thursday, June 25, 2026, 21:13 [IST]
English summary
Malayalam actor soubin shahir owned used bmw m4 competition performance appeared outside
மேலும்... #celebrity cars #used car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out