முதல் படம் தோற்றாலும், 2வது திரைப்படத்தை ஹிட் ஆக்கிய இயக்குனருக்கு கார்! டொயோட்டா ஷோரூமில் ருசிகரம்!

டொயோட்டா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான பிரெஸ்ஸா கார் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இதனை சினிமா தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடன் பணியாற்றிய இயக்குனருக்கு பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மலையாள சினிமா உலகில், சில திரைப்படங்களின் முதல் பாகம் தோல்வியடைந்து ஆச்சிரியப்படுத்தும் விதமாக 2ஆம் பாகங்கள் வெற்றி பெற்றுள்ளன. அவ்வாறு சமீபத்தில் ஆன்லைன் தளத்தில் வெளியாகி 'பரதநாட்டியம் 2 மோகினியாட்டம்' என்கிற டார்க்-காமெடி த்ரில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மலையாள நடிகர் சாய்ஜு குருப்பின் 150வது திரைப்படம் ஆகும்.

producer gifted car to director

மலையாள படங்களில் அதிகமாக இவரை முதன்மையான துணை கதாபாத்திரங்களில் பார்க்க முடியும். இவரது சாய்ஜு குருப் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மற்றொரு நிறுவனமும் இணைந்துதான் பரதநாட்டியம் 2 மோகினியாட்டம் திரைப்படத்தை தயாரித்தனர். இந்த திரைப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணதாஸ் முரளி ஆவார். முதல் பாகமான பரதநாட்டியம் திரைப்படத்தை இயக்கியதும் இவரே ஆவார்.

2024இல் வெளியான முதல் பாகம் வரவேற்பை பெறாவிடினும் கிருஷ்ணதாஸ் முரளியை வைத்து இரண்டாம் பாகத்தை பல கோடி ரூபாய் முதலீடு செய்து நம்பி தயாரித்தார் நடிகர் சாய்ஜு குருப். இயக்குனர் மீதான அவரது நம்பிக்கை வீண் போகாமல் பரதநாட்டியம் 2 மோகினியாட்டம் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.

producer gifted car to director

இந்த திரைப்படம் இதுவரையில் மொத்தம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இயக்குனருக்கு தனது சொந்த செலவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை நடிகர் சாய்ஜு குருப் பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். இதை பற்றி தான் இந்த தொகுப்பின் ஆரம்பத்தில் பார்த்தோம்.

நேரடியாக டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூமுக்கே இயக்குனரை அழைத்து சென்ற சாய்ஜு குருப் அங்கு கேக் வெட்டி காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிகழ்வின்போது நடிகர் சாய்ஜு குருப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணதாஸ் முரளி ஆகிய இருவரது குடும்பமும் உடன் இருந்தனர். மேலும், இதுதொடர்பான படங்களையும் அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதனை நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வெர்சனில் அல்லது மைல்ட்-ஹைப்ரிட் அல்லது ஸ்ட்ராங் ஹைப்ரீட் வெர்சனில் அல்லது சிஎன்ஜி வெர்சனில் ஹைரைடர் காரில் பெறலாம். காரின் மைலேஜும் அதற்கேற்ப மாறும்.

அதிகப்பட்சமாக 116 பிஎச்பி மற்றும் 141 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த 1.5 லி என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம். ஆனால், சிஎன்ஜி ஆப்ஷனில் வாங்கினால் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும். என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய இயக்க ஆற்றலும் 88 பிஎச்பி மற்றும் 121.5 என்.எம் டார்க் திறன் மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பினும், ஹைரைடர் தனக்கென ஒரு கஸ்டமர்ஸ் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.10.99 லட்சம்- ரூ.20.19 லட்சம் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.

Article Published On: Monday, May 25, 2026, 6:52 [IST]
English summary
Malayalam producer actor saiju kurup gifted toyota urban cruiser hyryder to movie director
மேலும்... #celebrity cars #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+