பிக்பாஸ் மொத்த வாழ்க்கையையும் மாற்றிடுச்சு... கை குழந்தை உடன் மஹிந்திரா ஷோரூமில் சீரியல் நடிகர்!

பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் மூலம் மலையாள சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக உருவெடுத்தவர் ஷியாஸ் கரீம். சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் இவரது பெயர் அடிபட்டு வருகிறது. காதலிப்பதாகக் கூறி பெண்ணிடம் இருந்து ரூ.49 லட்சம் மோசடி செய்ததாக இவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாகின.

ஆனால், இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் தங்களுக்குப் பிறந்த அழகிய பெண் குழந்தையைக் கொண்டாடும் மகிழ்ச்சியில் ஷியாஸ் கரீமும், அவரது மனைவியும் திளைத்து வருகின்றனர். தனது செல்ல மகளுக்கு 'டெசு' (Desu) என்று பெயர் சூட்டி, அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார், நடிகர் ஷியாஸ் கரீம்.

malayalam tv serial actor bought mahindra be 6 electric car

இப்போது, அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாகும் வகையில் மற்றொரு பிரம்மாண்ட சர்ப்ரைஸ் ஷியாஸ் வாழ்க்கையில் நுழைந்துள்ளது! அது அப்படி என்னவென்று கேட்கிறீர்களா? குடும்பத்துடன் சொகுசாகப் பயணம் செய்வதற்காக ஷியாஸ் கரீம் ஒரு புத்தம் புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார். மஹிந்திரா நிறுவனத்தின் புதிய வரவான 'BE 6' எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஷியாஸ் தனது கேராஜில் புதியதாக சேர்த்துள்ளார்.

புத்தம் புதிய கார் டெலிவரி எடுக்கும் இவரது புகைப்படங்கள் கேரளாவில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்களைக் கேட்டால் நிச்சயம் நீங்கள் வியந்து போவீர்கள்! 59kWh மற்றும் 79kWh ஆகிய இரு வித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் கார் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

malayalam tv serial actor bought mahindra be 6 electric car

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும், பேட்டரி ஆப்ஷனை பொறுத்து முறையே 556 கி.மீ மற்றும் 682 கி.மீ தூரம் வரை அசால்ட்டாகப் பயணிக்கலாம் என்று மஹிந்திரா நிறுவனம் உறுதியளிக்கிறது. சார்ஜிங் வசதியிலும் BE 6 மிகவும் அசாத்தியமானதாக உள்ளது. வீட்டில் உள்ள AC மின்சாரம் மூலம் 11kW சார்ஜரில் 6 முதல் 8 மணி நேரத்திற்குள் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

அவசர காலத்தில் 140kW அல்லது 175kW திறன் கொண்ட DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தினால், வெறும் 20 நிமிடங்களில் 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை மின்னல் வேகத்தில் சார்ஜ் ஏறிவிடும். வாழ்நாள் முழுவதற்கும் பேட்டரிக்கு உத்தரவாதம் (Life-time battery warranty) வேறு இருப்பதால், எந்த பயமும் இன்றி இந்த எலெக்ட்ரிக் காரில் கெத்தாகச் சாலையில் வலம் வரலாம்.

செயல்திறனைப் பொறுத்தவரை இந்த கார் ஒரு அசுர வேகம் கொண்டது என்றே சொல்லலாம். இதன் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்கள் 228 bhp பவரையும், 380 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. அதேசமயம், டாப் வேரியண்ட்கள் 282 bhp பவர் மற்றும் 380 Nm டார்க் திறனை வாரி வழங்குகின்றன. இந்த காருக்குள் நுழைந்தால் தனி உலகத்திற்குச் சென்றது போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் நம்மை வரவேற்கின்றன.

இந்த காரின் டாப் வேரியண்ட்களில் 12.3 இன்ச் டூயல் ஃபிரீ-ஃப்ளோட்டிங் திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8295 ப்ராசஸர் உடன் கூடிய 24 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அத்துடன் வைஃபை 6.0, புளூடூத் 5.2 மற்றும் அதிவேக 5G இணைய வசதியும் இந்த காரில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய மிரட்டலான அம்சங்கள் நிறைந்த மாடர்ன் மஹிந்திரா எலெக்ட்ரிக் காரை, பார்ப்பவர் கண்களைக் கவரும் கண்கவர் 'ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்ச்' (Firestorm Orange) நிறத்தில் மலையாள பிக்பாஸ் பிரபலம் ஷியாஸ் கரீம் தேர்வு செய்து வாங்கியுள்ளார். மஹிந்திரா நிறுவனம் இந்த ஆரஞ்சு நிறத்தில்தான் BE 6 எலெக்ட்ரிக் காரை விளம்பரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, July 2, 2026, 6:04 [IST]
English summary
Malayalam tv serial actor shiyas kareem newly bought mahindra be 6 electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out