புதிய மடிக்கும் ஐபோனைவிட மாருதி ஆல்டோ கார் ரூ.12,000 விலை கம்மி?

மடிக்கும் வசதியுடன் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் மாடலாக iPhone Duo அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் விலை கணிசமாக இருந்தாலும், தங்களது அந்தஸ்தை காட்ட நினைப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாக அமையும். இதன் 2TB ஸ்டோரேஜ் வசதிகொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டிற்கு ரூ.ரூ.4,49,900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை பலருக்கும் தலைசுற்ற வைக்கும் என்றாலும், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்களுக்கு தங்களது அந்தஸ்தை காட்டுவதற்கு வழக்கமான மாடலைவிட ஒரு தனித்துவமான மாடலாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஒரு சாமானிய மக்களாக இருப்பவர்கள் பெரும்பாலானோருக்கு ஒரு போனுக்கு இவ்வளவு விலையா? என்று கேட்பது இயல்பான விஷயம்தான்.

iphone Duo Vs Maruti K10 price Comparison

மேலும், ஐபோன் டூவோ மாடலின் டாப் வேரியண்ட்டானது இந்தியாவில் விற்பனையாகும் சில பட்ஜெட் கார்களின் ஆன்ரோடு விலையையும் தாண்டி இருப்பதுதான் சுவாரஸ்யமான விஷயமாக மாறி இருக்கிறது. ஆம், குறிப்பாக, ஐபோன் டூவோ டாப் வேரியண்ட் விலையானது மாருதி ஆல்ட்டோ கே10 மற்றும் எஸ் பிரெஸ்ஸோ கார்களின் பேஸ் வேரியண்ட்டின் ஆன்ரோடு விலையை காட்டிலும் சற்று அதிகமாக இருக்கிறது.

Also Read

மாருதி ஆல்ட்டோ ஆன்ரோடு விலை

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் LXi (O) பெட்ரோல் மேனுவல் காருக்கு ரூ.3.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதற்கு ரூ.18,000 வரை காப்பீடு, 20,000 இன்ஸ்யூரன்ஸ், ஃபாஸ்டேக் சேர்த்தால் ரூ.4.38 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும். அதாவது, ரூ.4.5 லட்சம் விலையில் கிடைக்கும் ஐபோன் டூவோ 2TB மாடலை ஒப்பிடும்போது, ஆல்டோ K10 விலை ரூ.12,00 வரை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது வெறும் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட கார் என்று சொல்லிவிட முடியாது. ஆல்டோ K10 காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 24.29 கிமீ வரை மைலேஜ் வழங்கும்.

Also Read

ஏசி வசதி, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் உண்டு. அதேநேரத்தில், இந்த LXi (O) வேரியண்ட்டில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் விண்டோஸ், ப்ளூடூத் போன்ற சில வசதிகள் இல்லை. அவை மேல்நிலை வேரியண்ட்களில் கிடைக்கின்றன.

Maruti S Presso

எஸ் பிரெஸ்ஸோ விலை மேலும் குறைவு

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் LXi (O) பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் காருக்கு ரூ.3.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு காப்பீடு, பதிவுக் கட்டணத்துடன் ரூ.4.24 லட்சம் ஆன்ரோடு விலை வருகிறது. இதனுடன் ஐபோன் டூவோ 2TB வேரியண்ட்டை ஒப்பிட்டால், ரூ.25,000 வரை விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஐபோன் டூவோ 256ஜி என்ற பேஸ் வேரியண்ட் விலை ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்து 516 ஜிபி வேரியண்ட்டிற்கு ரூ.3.24 லட்சமாகவும், 1டிபி வேரியண்ட்டிற்கு ரூ.3.74 லட்சமாகவும், விலை உயர்ந்த 2 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.4.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் மூலமாக பல பயனுள்ள விஷயங்களுக்கான விஷயமாக இருந்த நிலையில், தற்போது அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்டது. ஒரு கார் வாங்கும் விலைக்கு இணயாக தற்போது ஸ்மார்ட்ஃபோன்களின் விலை நிர்ணயிக்கும் அளவுக்கு ஸ்மார்ட்ஃபோன் நுகர்வு கலாச்சாரம் மாறிவிட்டது.

Article Published On: Thursday, September 10, 2026, 12:06 [IST]
English summary
Maruti alto k10 s presso cheaper than iphone duo smartphone india
மேலும்... #maruti suzuki #iphone
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out