இதை விட கம்மி விலையில் மாருதி எலெக்ட்ரிக் கார் இல்ல! விலையை பார்த்து எடை போடாதீங்க!

இ-விட்டாரா (e-Vitara) மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car). ரூ.15.99 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price)-இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலையில் இ-விட்டாராவின் டெல்டா வேரியன்ட் (Delta Variant) கிடைக்கும். 49kWh பேட்டரி பேக்குடன் மட்டுமே கிடைக்கும் இந்த வேரியன்ட், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஓராண்டு காலமாகவே மாருதி இ-விட்டாரா குறித்த செய்திகள் பெரும்பாலும் உயர்ரக ஆல்ஃபா (Alpha) வேரியன்ட்டையும், அதன் 61kWh பேட்டரி பேக்கையும் சுற்றியே இருந்தன. ஆனால், விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியன்ட்டான டெல்டாவைத் தேர்வு செய்பவர்களுக்கு என்னென்ன அம்சங்கள் கிடைக்கும் என்பதை இனி காணலாம்.

maruti suzuki evitara delta variant

தோற்றத்தைப் பொறுத்தவரை, உயர்ரக வேரியன்ட்டில் உள்ள எல்இடி ஃபாக் விளக்குகளும், அடர் பச்சை நிற கண்ணாடிகளும் இதில் இடம்பெறவில்லை. இ-விட்டாராவின் அடிப்படை மற்றும் நடுத்தர ரக வேரியன்ட்களில் வெப்பத்தை கடத்தாமல் பிரதிபலிக்கும் பச்சை நிற ஜன்னல் கண்ணாடிகள் உள்ளன. 1983ஆம் ஆண்டில் வெளியான முதல் எம்800 (M800) காரில் இருந்து மாருதி கார்களில் இது ஒரு நிலையான அம்சமாக இருந்து வருகிறது.

மேலும், டெல்டா வேரியன்ட் ஆறு கலர் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கிறது. அதுவே, உயர் ரக ஆல்ஃபா வேரியன்ட்டில் பத்து கலர் ஆப்ஷன்கள் உள்ளன; அவற்றில் நான்கு டூயல்-டோன் (Dual-tone) ஆகும். இவை வாடிக்கையாளர்களுக்குத் தங்களுக்கு பிடித்த நிறத்தில் காரை தேர்வுசெய்ய வாய்ப்பை அளிக்கிறது. இ-விட்டாரா டெல்டா வேரியன்ட்டின் உட்புறத்தில், கருப்பு நிற துணியினாலான இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

maruti suzuki evitara delta variant

உயர்ரக வேரியன்ட்டில் செயற்கை தோல் மற்றும் துணிகளுடன் கூடிய இருக்கைகள் உள்ளன. காற்றோட்டமான வெண்டிலேட்டட் (Ventilated) முன் இருக்கைகள், ஓட்டுநர் இருக்கைக்கான பவர் அட்ஜெஸ்மெண்ட், வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், ஹர்மன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் போன் மிரரிங் போன்ற வசதிகளும் டெல்டா வேரியன்ட்டில் இல்லை.

இயக்க ஆற்றலை வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் அமைப்பை பொறுத்தவரை, டெல்டா வேரியன்ட் 49kWh பேட்டரி பேக்குடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இது 443 கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. இது பொருத்தப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 141 பிஎச்பி மற்றும் 193 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

அதேநேரம், இ-விட்டாராவின் டாப் வேரியண்ட்களில் பொருத்தப்படும் 61kWh பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகபட்சமாக 171 பிஎச்பி மற்றும் 193 என்.எம் டார்க் திறனை வழங்குகிறது. இந்திய சந்தையில் இந்த எலெக்ட்ரிக் கார் FWD (முன் சக்கர இயக்கி) ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

மாருதி இ-விட்டாரா காரின் டெல்டா வேரியன்ட்டிற்கு இணையாக, எம்ஜி இசட்எஸ் இவி எக்ஸிகியூட்டிவ் (MG ZS EV Executive) வேரியன்ட் ரூ.15.5 லட்சம், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV) 39.4kWh சார்ஜருடன் ரூ.15.41 லட்சம், எம்ஜி வின்ட்சர் எக்ஸ்குளூசிவ் (MG Windsor EV Exclusive) ரூ.15.52 லட்சம், டாடா நெக்ஸான் இவி எம்பவர்ட் 45 (Tata Nexon EV Empowered 45) ரூ.15.99 லட்சம் ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் இதே விலைப் பிரிவில் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி இ-விட்டாரா எலெக்ட்ரிக் காரின் மீது மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ள்ளது. அதனை புரிந்துக் கொண்டுதான் இதன் உற்பத்தி பணிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களே நேரில் தொழிற்சாலைக்கு சென்று துவங்கி வைத்தார். இத்தகைய எலெக்ட்ரிக் காரை எப்படியாவது குறைந்த விலையிலாவது சொந்தமாக்கிவிட நினைப்பவர்களுக்கு இந்த தொகுப்பில் நாம் பார்த்த டெல்டா வேரியண்ட் ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 21, 2026, 11:06 [IST]
English summary
Maruti suzuki evitara electric car base delta variant specifications check all details here
மேலும்... #maruti suzuki #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+