அக்டோபர் முதல் அனைத்து கார்களின் மைலேஜூம் குறையப்போகுது!

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயணிகள் கார்களுக்கு மைலேஜ் சோதனை செய்யும்போது பெரும் தலைவலி ஏற்படுத்தும் வகையில் புதிய சட்ட மாற்றம் ஏற்படவுள்ளது. இதன்படி இனி மைலேஜ் சோதனை செய்யும் போது கார்களில் ஏசி ஆன் செய்யப்பட்ட நிலையில் தான் சோதனை செய்யப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மிகப்பெரிய விற்பனை யுக்தியாக தங்கள் வாகனத்தின் மைலேஜ் தான் முன் வைக்கிறார்கள் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக மைசூர் வாகனங்களை தயாரித்து அதன் மூலம் அறிய விற்பனையை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கார் வாங்கும் முடிவை ஒருவர் எடுப்பதற்கு கார் வழங்கும் மைலேஜ் மிக முக்கியமான காரணமாக அமைவதால் இந்த மைலேஜ் சோதனையை மேலும் தீவிர படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Mileage Test

தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக மைலேஜ் தருவதாக தங்கள் கார்களை முன்னிறுத்தினாலும் அந்த காரை வாங்கி ஓட்டும் உரிமையாளர்கள் அவ்வளவு மைலேஜ் தருவதில்லை என்ற பிரச்சினையை முன் வைக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் வாகனங்களில் மயிலே சோதனை செய்யப்படும் போது தற்போது ஏசி ஆன் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் ஏசி ஆசைப்பட்ட நிலையில் தான் வாகனங்களின் மைலேஜ் சோதனை செய்யப்படுகிறது. ஆனால் நடைமுறையில் வாகனத்தை பயன்படுத்துபவர்கள் ஏசியை பயன்படுத்திக் கொண்டே தான் வாகனத்தை இயக்குகிறார்கள் என்பதால் அவர்களுக்கு கிடைக்கும் மைலேஜிலும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறும் மைலேஜ் பெரிய மாற்றங்கள் இருக்கிறது.

இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக வரும் அக்டோபர் மாதம் முதல் மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படி எம்1 ரக வாகனங்கள் பெறுவதற்காக மைலேஜ் சோதனை செய்யப்பட வேண்டும். இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனமாக இருந்தாலும் சரி வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனமாக இருந்தாலும் சரி இந்த தர சான்றிதழை பெற வேண்டும் இந்த தர சான்றுகளை பெறுவதற்காக மைலேஜ் சோதனை செய்யப்படும் போது இனி கட்டாயம் ஏசி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வருகிறது.

இதற்கான சட்ட திருத்த அறிவிப்பை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இது குறித்த ஆட்சேபணைகளை தெரிவிப்பதற்காக 30 நாட்கள் கருத்து பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆட்சியை விடைகள் இருந்தால் அதை தெரிவிக்கலாம் இது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு பின்னர் இது சட்டமாக்கப்படும் இப்படியாக சட்டம் கொண்டுவரப்பட்டால் வரும் அக்டோபர் மாதத்திற்கு பிறகு இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இப்படியான சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏசி ஆன் செய்யப்பட்ட நிலையில் மைலேஜ் சோதனை செய்தால் மைேலஜ் சோதனை தற்போது உள்ள மைலேஜ் விபரங்களை விட குறைவானதாக காட்டும் இதற்கு முக்கியமான காரணம் ஏசியை ஆன் செய்யப்படும்போது இஞ்சினில் இருந்து பெரும்பாரியான பவர் ஏசியை இயக்குவதற்காக செல்வதால் மைலேஜ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் இதற்கு ஏற்றார் போல் சில மாற்றங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செய்தால் மைலேஜ் பிரச்சினையை பெரியவிதமான மாற்றங்கள் இல்லாமல் தப்பிக்க முடியும் என்பதை நாம் புரிந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, January 18, 2026, 13:45 [IST]
English summary
Mileage test govt plans ac mileage testing cars october 2026
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+