தமிழில் நடிச்ச முதல் படம் சரியா ஓடலனாலும், பிராண்ட்-நியூ பென்ஸ் கார் உடன் மும்பை நடிகை!

ஹாலிவுட் சினிமாவில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் இந்திய நடிகை மிதிலா பல்கர். மும்பையை சேர்ந்தவராக இருப்பினும், தமிழிலும் ஒரேயொரு திரைப்படத்தில் நடித்துள்ள இவர், தற்போது புதியதாக பிராண்ட்-நியூ மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹாலிவுட்டில் கடந்த 2020ஆம் ஆண்டில் திரைக்கு வந்த 'ஏ பேபிசிட்டர்ஸ் கைடு டூ மான்ஸ்டர் ஹண்டிங்' என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தியாவின் நடிகை மிதிலா பல்கர் நடித்திருந்தார். இதற்கு முன்னதாக, 2014ஆம் ஆண்டில் இருந்தே மராத்தி, இந்தி மொழி படங்களில் நடித்திருந்தாலும், ஹாலிவுட் படத்தில் நடித்தது இவருக்கு தென்னிந்திய சினிமாவில் கதவை திறந்துவிட்டது.

actress mithila palkar bought brand-new mercedes-benz e-class luxury car

அதன் மூலமாக, அடுத்தடுத்த வருடங்களில் தெலுங்கில் ஒரு படம் மற்றும் தமிழில் ஒரு படத்தில் நடிகை மிதிலா பல்கர் நடித்தார். தெலுங்கில் இவர் நடித்தது வேறு எதுவுமில்லை, தமிழில் வெளியாகி ஹிட் அடித்த 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். 2022இல் இந்த தெலுங்கு ரீமேக் திரைப்படம் வெளியான நிலையில், முதல்முறையாக தமிழில் இவர் நடித்த 'ஓஹோ எந்தன் பேபி' திரைப்படம் கடந்த 2025ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது.

நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து, சிறப்பு வேடத்தில் நடித்திருந்த ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தின் கதாநாயகியாக மிதிலா பல்கர் நடிக்க, கதாநாயகன் வேறு யாருமில்லை நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா ஆவார். இதனுடன், கடந்த 2025இல் மற்றொரு இந்தி திரைப்படமும் நடிகை மிதிலா பல்கரின் நடிப்பில் வெளியாகி இருந்த நிலையில், நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரையில் மட்டுமே இரு இந்தி திரைப்படங்கள் திரைக்கு வந்துவிட்டன.

actress mithila palkar bought brand-new mercedes-benz e-class luxury car

இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வருவதற்கு மத்தியில் நடிகை மிதிலா பல்கர் புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரை வாங்கியுள்ளார். மும்பையில் அங்கீகரிக்கப்பட்ட மெர்சிடிஸ் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் பிராண்ட்-நியூ இ-கிளாஸ் காரை மிதிலா பல்கர் டெலிவிரி பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கார் ஷோரூம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான படங்களில், கருப்பு நிற இ-கிளாஸ் காரை ஷோரூமில் தேங்காய் உடைந்து, இந்து முறைப்படி பூஜை செய்து நடிகை மிதிலா பல்கர் டெலிவிரி பெற்ற காட்சிகளை பார்க்க முடிகிறது. இந்தியாவில் E200, E 220d மற்றும் E450 4MATIC என்கிற மூன்று விதமான வேரியண்ட்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் நடிகை மிதிலா பல்கர் வாங்கியிருப்பது E200 என்கிற பெட்ரோல் வேரியண்ட் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.81.50 லட்சமாக உள்ளது. இதன் விலை கோடி ரூபாய்க்கு மேல் செல்லாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம், இது இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதினால் ஆகும்.

வெளிநாடுகளில் நீளம் குறைவான வெர்சனிலும் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் நீளமான லாங்-வீல்பேஸ் வெர்சனில் மட்டுமே இ-கிளாஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இந்த காரில் பின் இருக்கைகளில் அமர்பவர்கள் நன்கு விசாலமான இடவசதியை பெறலாம். இந்தியாவிலேயே முதல்முறையாக வழங்கப்பட்ட செண்டர் ஏர்பேக் உள்பட மொத்தம் 8 ஏர்பேக்குகள் உடன் இ-கிளாஸ் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை மிதிலா பல்கரை போலவே அவர் புதியதாக வாங்கியிருக்கும் பென்ஸ் காரும் அழகானதாக உள்ளது. இவ்வாறான தாழ்வான சொகுசு செடான் கார்களை பளபளக்கும் கருப்பு நிறத்தில் வாங்கினால் தான் சூப்பராக இருக்கும் என்பதை உணர்ந்து கருப்பு நிறத்தில் இ-கிளாஸ் காரை வாங்கியுள்ளார். இதே மும்பை ஷோரூமில் இருந்து நடிகை மிதிலா பல்கர் வாங்கி இருக்கும் இரண்டாவது மெர்சிடிஸ்-பென்ஸ் கார் இதுவாகும்.

Article Published On: Sunday, June 21, 2026, 18:49 [IST]
English summary
Mithila palkar bought brand new mercedes benz e class luxury car in mumbai
மேலும்... #celebrity cars #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out