பைக் கியரை முதல்வர் முறுக்கி இருந்தால் மணிக்கு இத்தனை கிமீ வேகத்தில் போகுமா!! கொடுத்தது இவங்க தானா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), ஆடம்பர சூப்பர்பைக் (Superbike) ஒன்றின் மீது அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் அவர் காலை நடைப்பயிற்சியின்போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜனவரி 30 அன்று, தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியின்போது, முதல்வர் ஸ்டாலின் ஒரு சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa) சூப்பர்பைக்கைப் பார்த்துள்ளார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், அந்த பைக்கின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அந்த பைக்கை ஓட்டுவது போன்றும் ஒரு கணம் போஸ் கொடுத்தார்.

tn chief minister mk stalin suzuki hayabusa superbike

இந்த நிகழ்வு தொடர்பான காணொலிகளும், படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்திய தேசிய பைக் பந்தய வீராங்கனையும், திமுக கட்சியின் விளையாட்டு பிரிவின் மாநில துணை செயலாளருமான நிவேதா ஜெஸ்ஸிகா (Nivetha Jessica) அவர்களும் அப்போது எடுக்கப்பட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏனெனில், அந்த சமயத்தில் அவரும் முதலமைச்சருடன் இருந்தார்.

இந்த வைரல் காட்சிகள், இணையவாசிகளிடையே மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. பலரும் பைக்கின் மாடல், விலை மற்றும் முதல்வரின் உடல்நலப் பயிற்சிகள் குறித்து அறிய ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த சூப்பர்பைக் சுசுகி ஹயபுசா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் இந்தியச் சந்தை விலை சுமார் ரூ.18 லட்சம் ஆகும்.

tn chief minister mk stalin suzuki hayabusa superbike

சுசுகி ஹயபுசா உலகின் மிகச் சிறந்த சூப்பர்பைக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.18.06 லட்சம் ஆகும். 2026ஆம் ஆண்டு ஹயபுசா மாடலில், எலக்ட்ரானிக் மேம்பாடுகள் மற்றும் ஓட்டுநர் திறன் மேம்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 1,340சிசி, லிக்யுடு-கூல்டு, இன்லைன்-நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 9,700 ஆர்பிஎம்-இல் 190 பிஎஸ் (187 hp) ஆற்றலையும், 7,000 ஆர்பிஎம்-இல் 150 என்.எம் டார்க் திறனையும் வெளியிடக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-வேக கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச் இல்லாமல் கியர் மாற்ற உதவும் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் இணைக்கப்படுகிறது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 299 கி.மீ ஆகும்.

சுசுகி இண்டெலிஜென்ட் ரைடு சிஸ்டம் (S.I.R.S.) போன்ற மேம்பட்ட எலக்ட்ரானிக் அம்சங்களுடன் வரும் இந்த பைக்கின் இந்த எலெக்ட்ரானிக் தொகுப்பில் 10-நிலை டிராக்‌ஷன் கன்ட்ரோல், லாஞ்ச் கன்ட்ரோல் மற்றும் என்ஜின் பிரேக் கன்ட்ரோல் ஆகியவை அடங்குகின்றன. A (செயலில்), B (அடிப்படை) மற்றும் C (வசதியான) என மூன்று ரைடிங் மோட்கள் வெவ்வேறு சாலை நிலைகளுக்கு ஏற்றவாறு ஆற்றலைச் சரிசெய்ய உதவுகின்றன.

பிரேக்கிங் மற்றும் பாதுகாப்பிற்காக, முன் பகுதியில் ப்ரேம்போ ஸ்டைல்மா 4-பிஸ்டன் காலிப்பர்கள் மற்றும் 320மிமீ இரட்டை டிஸ்க்குகள் உள்ளன. இவை கார்னரிங் ABS-ஆல் ஆதரிக்கப்படுகின்றன. இலகுரக அலுமினிய இரட்டை-ஸ்பார் சேசிஸில் உருவாக்கப்படும் ஹயபுசா பைக், முழுமையாக சரிசெய்யக்கூடிய KYB சஸ்பென்ஷன் மூலம் ஓட்டுபவருக்கு சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் தோராயமாக 264-266 கிலோ எடை கொண்ட பைக்கின் மீதுதான் நம் தமிழ்நாடு முதலமைச்சர் அமர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். படங்களை வெளியிட்டது மட்டுமின்றி, இந்த சூப்பர்பைக்கை முதல்வர் முன் காண்பித்தது கூட பைக் பந்தய வீராங்கனை நிவேதா ஜெஸ்ஸிகாவாக இருக்கலாம். ஏனெனில், அவரிடம்தான் ஏகப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகள் உள்ளதே...

More from DriveSpark

Article Published On: Friday, January 30, 2026, 16:28 [IST]
English summary
Mk stalin poses with suzuki hayabusa superbike while walking check all details here
மேலும்... #celebrity bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+