கோவிலுக்கு வர கூட புல்லட்-ப்ரூஃப் காரா? பெரும் தொழிலதிபர் ஆகிட்டாலே இப்படி பிரச்சனை தான்!

இந்திய அளவில் மட்டுமின்றி, ஆசிய கண்ட அளவிலேயே மிக பெரும் பணக்காரர் ஆக மும்பையில் வசிக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினரை சொல்லலாம். இந்த குடும்பத்தினரிடம் பல்வேறு விதமான லக்சரி கார்கள் உள்ளதை பலமுறை நமது செய்தி தளத்தில் பார்த்துள்ளோம். இந்த நிலையில், தற்போது விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் S680 காரில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் காட்சித் தந்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ ஆனது 'CS 12 விலாக்ஸ்' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இது புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் S680 கார் ஆகும். இதனாலேயே இது S680 கார்ட்ஸ் என அழைக்கப்படுகிறது. தங்க நிறத்தில் இந்த புல்லட்-ப்ரூஃப் S680 காரை முகேஷ் அம்பானி குடும்பம் வைத்துள்ளது.

mukesh ambani arrived with anant in mercedes-benz s680 guards

மும்பையில் உள்ள கோவில் ஒன்றிற்கு முகேஷ் அம்பானி, அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவியான ராதிகா மெர்சண்ட் உடன் இந்த விலையுயர்ந்த பென்ஸ் காரில் வந்து இறங்கியுள்ளார். அம்பானி குடும்பத்தின் புதிய மருமகள் ராதிகா மெர்சண்ட் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்க, முகேஷ் அம்பானியும் ஆனந்த் அம்பானியும் காரின் பின் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.

காரில் இருந்து வெளியே வந்தவர்கள் தங்களது பாதுகாவலர்கள் உடன் கோவிலுக்குள் நுழைந்தனர். ஏற்கனவே கூறியதுபோல், தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த பென்ஸ் காரில் '999' என்கிற VIP நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. இது இல்லாமல், W222 மற்றும் W221 என்கிற எஸ் கார்ட்ஸ் செடான் ரக கார்களையும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வைத்துள்ளனர்.

mukesh ambani arrived with anant in mercedes-benz s680 guards

தற்போது வெளியே வந்திருப்பது, S680 கார்ட்ஸ் காரின் W223 மாடல் ஆகும். சாலையில் ஓட்டுவதற்கு அனுமதிக்கும் சான்றிதழை கொண்ட இந்த கார் புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்டது மட்டுமின்றி, வெடிப்பொருட்களில் இருந்தும் பயணிகளை பாதுகாக்கக் கூடியது ஆகும். இதற்கேற்ப, காரின் உடலமைப்பு மட்டுமின்றி, ஜன்னல் கண்ணாடிகளும் பல்வேறு லேயர்களை கொண்டதாக உள்ளன.

இதுமட்டுமின்றி, ஸ்பிளிண்டருக்கான பாதுகாப்பாக பாலிகார்போனேட் லேயர் வழங்கப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், ஜன்னல் கண்ணாடிகள் 3.5 இன்ச்சில் இருந்து 4 இன்ச் வரையில் தடிமன் கொண்டவை ஆக உள்ளன. மேலும், இந்த காரில் வழங்கப்படும் டயர்களும் பிரத்யேகமானவை ஆகும். இதன் மூலமாக, டயர் பஞ்சராகினாலும் 30கிமீ தொலைவிற்கு காரை ஓட்டிச் செல்ல முடியும்.

இத்தகைய காரில் பெரிய அளவிலான 6 லிட்டர் V12 என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 612 பிஎச்பி மற்றும் 830 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. சுமார் 4.2 டன் எடை கொண்ட இந்த செடான் காரில் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆனந்த் அம்பானிக்கு சொந்தமாக உள்ள மிகவும் தனித்துவமான பென்ஸ் கார்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் S680 கார்ட்ஸ் ஒன்றாகும். இவரிடம் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் கல்லீனன் காரும் புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்டதாக உள்ளது. முகேஷ் அம்பானி குடும்பத்தினரால் பல வருடங்களுக்கு முன்பே வாங்கப்பட்ட இந்த புல்ல்ட்-ப்ரூஃப் கல்லீனன் கார் உள்பட இவர்களது குடும்பத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் மட்டுமே 10க்கும் மேற்பட்டவை உள்ளன.

முகேஷ் அம்பானி குடும்பத்தில் சமீபத்தில், ரூ.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ்-மேபக் SL680 கன்வெர்டபிள் என்கிற சூப்பர்கார் இரண்டு இணைக்கப்பட்டது. அம்பானி குடும்பத்தின் இந்த லேட்டஸ்ட் மேபக் கார் சமீபத்தில் பொது சாலையில், எந்தவொரு பாதுகாப்பு வாகனங்களும் இல்லாமல் காட்சி தந்தது. இன்னும் சொல்லப்போனால், VIP நம்பர் பிளேட் கூட இல்லை. இந்த வகையில் பார்த்தால், தற்போது முகேஷ் அம்பானி குடும்பத்தினர் கோவிலுக்கு கொண்டு வந்துள்ள மெர்சிடிஸ் S680 கார் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.

Article Published On: Monday, July 6, 2026, 6:01 [IST]
English summary
Mukesh ambani arrived with anant ambani and radhika merchant in mercedes benz s680 guards
மேலும்... #celebrity cars #bullet proof car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out